ஹோர்ட்டன் சமவெளி பகுதியில் வனாந்தரச் செய்கையை ஊக்குவிக்கும் டோக்கியோ சீமெந்து
இலங்கையின் ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்கா, பரந்த புல்வெளிகளையும், வானுயர்ந்த பசுமையான மழைக்காடுகளையும் கொண்டிருக்கின்றமை இயற்கை அதிசயமாக அமைந்துள்ளது. UNESCO உலக பாரம்பரிய பகுதிகளில் ஒன்றான இந்த உயிரியல் பரம்பலை கொண்ட பகுதி, உலகின் வேறெங்கும் காண முடியாத அரிய வகை தாவர மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாகவும் அமைந்துள்ளது.
டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்காவுக்கான டயாகம நடைச் சுவட்டு பகுதியை, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு புதிய ரேஞ்ஜர் அலுவலகத்தை கையளித்து உரையாற்றுகையில், “எமது நாட்டில் வனாந்தர நீந்தல் கலாசாரத்தின் ஆரம்பமாக இது அமைந்துள்ளது. ஜப்பானியர்களால் தமது வாழ்க்கையை தாவரங்கள் மற்றும் இயற்கையுடன் சங்கமித்து குணமடையும் இந்த முறைமை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. ஹோர்ட்டன் சமவெளிக்கான மிகவும் காட்சியம்சங்கள் நிறைந்த நடைப் பாதையாக இந்த பகுதியை நான் தனிப்பட்ட ரீதியில் அனுபவித்துள்ளேன். அடர்ந்த வனாந்தரப் பகுதியினூடாக நடந்து செல்கையில் ஒப்பற்ற வனாந்தர நீந்தல் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. மலை ஏறுவோர் மற்றும் சைக்கிளோட்டிகளுக்கு பிரத்தியேகமான மலைஏறல் அனுபவத்தை வழங்கும் இந்த பாதையை அமைப்பதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்கா போன்ற இயற்கையான பகுதியில் காணப்படும் விஞ்ஞான ரீதியான பாதுகாப்பு அம்சங்களின் முக்கியத்துவத்தை டோக்கியோ சீமெந்து உணர்ந்திருந்தமையினால் இந்தத் திட்டத்துடன் கைகோர்க்க தீர்மானித்தது. விருந்தினர்களுக்கு நடையாக மலையில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படும் ஒரே இயற்கை பகுதியாக இது அமைந்துள்ளது. பட்டிபொல அல்லது ஒஹிய பகுதிகளிலிருந்து வாகனங்களில் பல விருந்தினர்கள் இப்பகுதிக்கு விஜயம் செய்யும் போதிலும், 5 கிலோமீற்றர் தூரமான டயாகம கிழக்கு நடைப்பாதை, இயற்கையை ரசிப்போருக்கு சிறந்த விருந்தாக அமையும். இந்த மலையேறல் பகுதி, உலகப் புகழ்பெற்ற பெக்கோ வழியின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது. இப்பாதையினூடாக பயணிப்போருக்கு வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த பறவை இனங்கள் மற்றும் ஹோர்ட்டன் சமவெளிக்கு மாத்திரம் உரித்துடைய அரிய பறவை இனங்களை கண்டு களிக்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
(இடமிருந்து) டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி, காஞ்சன ஜயரட்ன, வனஜீவராசிகள் மற்றும் வனாந்தர வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, மற்றும் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் ஆகியோர் ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்காவில் புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட டயாகம நடை பகுதியை பார்வையிடுகின்றனர்.
அதிகளவு பிரபல்யமடையாத டயாகம கிழக்கு நுழைவாயில் பகுதி பெரும்பாலும் கண்காணிக்கப்படுவதில்லை. இதனால், அதிகளவு பின்தங்கிய நுழைவு மற்றும் வெளியேறல் பகுதியாக அமைந்துள்ளது. மட்டுப்படுத்தப்பட்டளவு வளங்களைக் கொண்டிருந்த நிலையில், இந்த வழியினூடாக விருந்தினர்களின் செயற்பாடுகளை சீரமைப்பதற்கான வழிமுறைகளை வனஜீவராசிகள் திணைக்களம் நாடியிருந்தது. சூழல்சார் பாதுகாப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதில் டோக்கியோ சீமெந்து குழுமம் புகழ்பெற்றுள்ள நிலையில், ஹோர்ட்டன் சமவெளியுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருப்பதாலும், டயாகம கிழக்கு நடைபாதை நுழைவாயில் பகுதியில் வனஜீவராசிகள் ரேஞ்ஜர் அலுவலகமொன்றை நிறுவுவதில் கைகோர்க்குமாறு டோக்கியோ சீமெந்து குழுமத்துக்கு வனஜீவராசிகள் திணைக்களம் அழைப்புவிடுத்திருந்தது.
டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் ஆகியோர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலக தொகுதியை, வனஜீவராசிகள் மற்றும் வனாந்தர வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் (திருமதி) பவித்ரா வன்னியாரச்சி மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார ஆகியோரிடம் கையளித்திருந்தனர்.
டயாகம நடை பகுதியினூடாக ஹோர்ட்டன் சமவெளியில் பிரத்தியேக வனாந்தர நீந்தல் அனுபவத்தை பெற்றுக் கொள்ள வருகை தருமாறு நிஜ இயற்கை விரும்பிகளை டோக்கியோ சீமெந்து குழுமம் அழைப்புவிடுத்துள்ளது.
வனஜீவராசிகள் மற்றும் வனாந்தர வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் (திருமதி) பவித்ரா வன்னியாரச்சியின் முயற்சிகளை டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி பாராட்டி கருத்துத் தெரிவிக்கையில், “இந்த டயாகம விருந்தினர் நுழைவாயில் பகுதி, மலைஏறலில் முற்றிலும் காட்சியம்சங்களை கண்டுகளிக்க எதிர்பார்ப்போருக்கு சிறந்த விருந்தாக அமைந்திருக்கும் வகையில் அமைந்துள்ளது. சூழல்சார் நிலைபேறாண்மை என்பதற்கான டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. சகல விதமான வாகன உட்பிரவேசங்களுக்கும், அனுமதியில்லாத உட்பிரவேசங்களையும் தடை செய்துள்ளதுடன், தற்காலத்துக்கு மாத்திரமன்றி, எதிர்கால தலைமுறைகளுக்காகவும் இந்த பிரத்தியேகமான தாவர மற்றும் விலங்கினங்களை பாதுகாப்பதை உறுதி செய்யும்.” என்றார்.
புதிய வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கான அலுவலகம் நிறுவியமைக்கு மேலதிகமாக, இந்த மலையேறல் பகுதியில் நடைபாதைப் பகுதியில் முக்கியமான இடங்களில் அறிவித்தல் பதாதைகளையும் நிறுவியுள்ளது. இதனூடாக ஹோர்ட்டன் சமவெளி பகுதியில் இனங்காணப்படும் பிரத்தியேகமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றிய தகவல்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. Parrotfish Collective இனால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தகவல் பதாதைகள், பூங்காவின் செழுமையான உயிரியல் பரம்பல் பற்றிய விழிப்புணர்வை வழங்குவதாக அமைந்திருப்பதுடன், அதனை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை விருந்தினர்களுக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தூர நோக்குடைய இந்த இயற்கை பாதுகாப்பு திட்டத்தினூடாக ஹோர்ட்டன் சமவெளி பகுதிக்கு விஜயம் செய்யும் விருந்தினர்களுக்கு ஒப்பற்ற அனுபவத்தை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.-
Photo: டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், வனஜீவராசிகள் மற்றும் வனாந்தர வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மற்றும் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி ஆகியோர் ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்கா டயாகம வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள ரேஞ்ஜர் அலுவலகத்தை அங்குரார்ப்பணம் செய்வதை காணலாம்.