டோக்கியோ சீமெந்து மற்றும் Foundation of Goodness இணைந்து தம்புளையில் A.Y.S. Gnanam Village Heartbeat Empowerment Centre அங்குரார்ப்பணம்

டோக்கியோ சீமெந்து மற்றும் Foundation of Goodness இணைந்து தம்புளையில் A.Y.S. Gnanam Village Heartbeat Empowerment Centre அங்குரார்ப்பணம்

தேசத்துக்கும், நாட்டு மக்களுக்கும் வலுவூட்டும் முயற்சிகளின் மற்றுமொரு அங்கமாக, டோக்கியோ சீமெந்து குழுமம் அண்மையில் Foundation of Goodness உடன் இணைந்து, தம்புளையில் A.Y.S. Gnanam Village Heartbeat Empowerment Centre ஐ நிறுவியுள்ளது. Village Heartbeat திட்டத்தின் 12ஆவது அங்கமாக அமைந்துள்ள இந்த நிலையத்தை டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷா கப்ரால் பிசி, முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் மற்றும் Foundation of Goodness இன் ஸ்தாபகரும் பிரதம காப்பாளருமான குஷில் குணசேகர ஆகியோர் திறந்து வைத்தனர். பிராந்தியத்தைச் சேர்ந்த டோக்கியோ சீமெந்து குழுமத்தின் மூன்று பிரதான விநியோகத்தர்களான வில்கமுவ, கந்தேகெதர ஹார்ட்வெயார் உரிமையாளர் தர்மசிறி ராஜபக்ச, தம்புளை, பெரேரா டிஸ்ட்ரிபியுட்டர்ஸ் உரிமையாளர் விஜேசிறி பெரேரா மற்றும் பகமூன சம்பத் டிரேடர்ஸ் உரிமையாளர் டபிள்யு.எஸ். பெர்னான்டோ ஆகியோரும் நிகழ்வின் விருந்தினர்கள் மத்தியில் கலந்து கொண்டனர். தம்புளை A.Y.S. Gnanam Village Heartbeat Centre அங்குரார்ப்பண நிகழ்வுக்கு விருந்தினர்களை வரவேற்கும் கலாசார நடன நிகழ்வு. தம்புளை VHE Centre இப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் இடமிருந்து – கலாநிதி. ஹர்ஷா கப்ரால் பிசி, தர்மசிறி ராஜபக்ச, விஜேசிறி பெரேரா, டபிள்யு.எஸ். பெர்னான்டோ, குஷில் குணசேகர மற்றும் எஸ்.ஆர்.ஞானம் ஆகியோர் தம்புளை A.Y.S. Gnanam Village Heartbeat Centre ஐ அங்குரார்ப்பணம் செய்கின்றனர். தம்புளை, சிசிரவத்தயில் அமைந்துள்ள A.Y.S. Gnanam Village Heartbeat Empowerment Centre இனால் குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களைச் சேர்ந்த தரம் 1 முதல் 5 வரை பயிலும் மாணவர்களுக்கு விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம், தமிழ் மற்றும் பாரம்பரிய நாட்டியம் போன்ற பாடங்கள் தொடர்பில் இலவசமான கற்கை வசதிகள் வழங்கப்படுகின்றன. பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உதவிகளுக்கு மேலதிகமாக, நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் இதர கற்கைகளில், வாழ்க்கைத் தரம் மற்றும் பெறுமதிகள், தொழிற்பயிற்சி, மற்றும் விளையாட்டு போன்றன பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வலுவூட்டி, தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு உதவுவதாக முன்னெடுக்கப்படுகின்றன. காலப்போக்கில், இந்த நிலையத்தினால், இளைஞர்களால் பெருமளவில் நாடப்படும் தொழிற்பயிற்சி கற்கைகளான விருந்தோம்பல், விவசாயம், பேக்கரி, இலத்திரனியல் வயரிங், CCTV பொருத்துகை மற்றும் மொபைல் பழுதுபார்ப்பு போன்றன மேற்கொள்ளப்படும். Village Heartbeat கொள்கையில் பெண்களுக்கான வலுவூட்டல் என்பது முக்கிய அங்கமாக அமைந்துள்ளதுடன், ஆடை தயாரிப்பு, சமையல் மற்றும் அழகியல் கலை தொடர்பான நிபுணத்துவ கற்கைகளும் இங்கு முன்னெடுக்கப்படுகின்றன.
நிலையத்தில் காணப்படும் தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப வசதிகளை பாடசாலை மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷா கப்ரால் PC கருத்துத் தெரிவிக்கையில், “இது போன்ற பகுதிகளில் இவ்வாறான நிலையங்களை நிறுவும் மறைந்த ஞானம் அவர்களின் சிந்தனையின் பிரகாரம், ஆயிரக் கணக்கான மக்களுக்கு இன்றும் வசதி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் பயன்பெறும் நபர்கள், தற்போதைய சூழலில் அதிகளவு கேள்வி காணப்படும் வாய்ப்புகளுக்கு பொருத்தமான திறன்களைப் பெற்றுக் கொள்கின்றனர். இதனூடாக அவர்களுக்கு சமூகத்துக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அதன் ஸ்தாபக தலைவரும், துறைசார் முன்னோடியுமான மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ்.ஞானம் அவர்களின் முயற்சிகளின் நினைவாக, தம்புளையில் நிறுவப்பட்டுள்ள A.Y.S. Gnanam Centre அமைந்துள்ளது. Foundation of Goodness உடன் இணைந்து இந்த நிலையத்தை மேம்படுத்தியுள்ளதனூடாக, கிராமிய சமூகத்தாருக்கு அவசியமான பல்வேறு வலுவூட்டல் நிகழச்சிகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், மறைந்த ஏ.வை.எஸ்.ஞானம் அவர்களின் முயற்சிகளை தொடர்ந்தும் அர்த்தமுள்ள வகையில் பேணுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தம்புளையிலுள்ள A.Y.S. Gnanam Village Heartbeat Centre இனால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் தரம் 1 – 5 வரை மாணவர்களுக்கு இலவச கல்வி உதவி வசதிகள் வழங்கப்படுகின்றன. Village Heartbeat வலுவூட்டல் கொள்கையின் முன்னோடியாக திகழும் Foundation of Goodness இன் ஸ்தாபகரும் பிரதம காப்பாளருமான குஷில் குணசேகர கருத்துத் தெரிவிக்கையில், “அறிவார்ந்த நபர்களை உருவாக்குவதுடன், இரக்கம் மற்றும் ஒழுக்கமான நபர்களாக அவர்களை கட்டியெழுப்புவது முக்கியமானது. தம்புளையிலுள்ள 12ஆவது Village Heartbeat நிலையத்தினூடாக பயன்பெறும் அனைத்து நபர்களையும், சமூகத்தைச் சேர்ந்த குறைந்த வசதிகளைப் படைத்த நபர்களுக்கும் தாம் பெற்றுக் கொண்ட அறிவின் பயனை சென்றடையச் செய்து, அதனூடாக கிராமத்தைச் சேர்ந்த அனைவரின் வாழ்க்கையை மேற்கொள்வதற்கு பங்களிப்பு வழங்க வேண்டும். அதனூடாக தேசத்தையும் மேம்படுத்தக்கூடியதாக இருக்கும்.” என்றார். பெண்களுக்கு வலுவூட்டும் வகையில் சுய தொழில் வாய்ப்புகளில் ஈடுபடுவதற்காக, நிலையத்தில் ஆடை தயாரிப்பு, சமையல் மற்றும் அழகியல் கலை தொடர்பான கற்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. டோக்கியோ சீமெந்து குழுமம் தனது கூட்டாண்மை DNA இல் சமூக நலன்புரி மற்றும் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வெற்றிகரமாக உள்வாங்கியுள்ளது. இந்த பிந்திய செயற்பாடு இதற்கான சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. மறைந்த தேசமான்ய ஏ.வை.எஸ்.ஞானம் அவர்களின் பல வியாபார சாதனைகளில் அவரின் இரக்கமான மற்றும் உதவும் மனப்பாங்கு பெருமளவு பங்களிப்பு வழங்கியிருந்தமைக்கமைய இவ்வாறான திட்டங்களை நிறுவனம் தொடர்ந்து முன்னெடுக்கின்றது. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு மறைந்த ஏ.வை.எஸ்.ஞானம் அவர்களின் தலைமைத்துவம் மற்றும் பெறுமதிகள் போன்றன தொடர்ந்தும் பங்களிப்பு வழங்கிய வண்ணமுள்ளன. படங்கள்: தம்புளை A.Y.S. Gnanam Village Heartbeat Empowerment Centre இல் நினைவுச் சின்னத்தை கலாநிதி. ஹர்ஷா கப்ரால் பிசி, குஷில் குணசேகர மற்றும் எஸ்.ஆர்.ஞானம் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.