பிஸ்னஸ் டுடே சிறந்த 30 நிறுவனங்கள் தரப்படுத்தலில் கௌரவிப்பைப் பெற்ற ஒரே சீமெந்து கம்பனியாக டோக்கியோ சீமெந்து கம்பனி தெரிவு

பிஸ்னஸ் டுடே சிறந்த 30 நிறுவனங்கள் தரப்படுத்தலில் கௌரவிப்பைப் பெற்ற ஒரே சீமெந்து கம்பனியாக டோக்கியோ சீமெந்து கம்பனி தெரிவு

பிஸ்னஸ் டுடே சிறந்த 30 நிறுவனங்கள் தரப்படுத்தலில் டோக்கியோ சீமெந்து குழுமமும் உள்வாங்கப்பட்டிருந்ததனூடாக இலங்கையின் நிர்மாணத்துறையில் தனது ஆதிக்கத்தை மேலும் உறுதி செய்துள்ளது. தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாக டோக்கியோ சீமெந்து குழுமத்தின் பெறுபேறுகள் நாட்டின் கூட்டாண்மைத் துறையில் கௌரவிக்கப்பட்டிருந்தது. துறையில் நிறுவனத்தின் வலிமையை உறுதி செய்யும் வகையில், இந்த ஆண்டின் தரப்படுத்தலில் உள்வாங்கப்பட்டிருந்த ஒரே சீமெந்து நிறுவனமாகவும் அமைந்துள்ளது.

பிஸ்னஸ் டுடே தனது வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இதன் போது டோக்கியோ சீமெந்துக்கான கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தலைவர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி, நிறுவனத்தின் சார்பாக வழங்கப்பட்ட விருதை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடமிருந்து பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டார்.

பிஸ்னஸ் டுடே சிறந்த 30 நிறுவனங்கள் தரப்படுத்தல் என்பது, கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களினால் வெளியிடப்படும் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இதனூடாக நிறுவனத்தின் சந்தை நிலை வெளிப்படுத்தப்படுகிறது. 2018 மார்ச் மாதம் நிறைவடைந்த நிதியாண்டில் பதிவு செய்திருந்த நிதிப் பெறுபேறுகளின் அடிப்படையில் நிறுவனங்கள் மதிப்பிடப்பட்டிருந்தன. நிறுவனத்தின் உறுதியான வியாபார பெறுபேறுகள் மற்றும் பரந்தளவான சமூகத்தில் அதன் நிலையை உறுதி செய்வதாகவும் இந்த கௌரவிப்பு அமைந்துள்ளது. இலங்கையின் நிர்மாணத்துறைக்கு உயர் தரம் வாய்ந்த சீமெந்து மற்றும் கொங்கிறீற் விநியோகத்தில் நம்பிக்கையை வென்ற பங்களிப்பாளர் எனும் கௌரவிப்பை டோக்கியோ சீமெந்து பெற்றுள்ளது. நிர்மாண செயற்பாட்டை புரட்சிக்குட்படுத்தியிருந்த பல்வேறு புத்தாக்கமான தயாரிப்புகளின் பின்புலத்தில் காணப்படும் நாமமாகவும் திகழ்கிறது. நாட்டை பாதுகாப்பது மற்றும் வளமூட்டுவது, தமது ஊழியர்களை ஊக்குவிப்பது மற்றும் சூழலை பாதுகாப்பது போன்றவற்றில் தமது அர்ப்பணிப்பு வெளிப்படுத்தியுள்ளது. தமது முழு உற்பத்தி செயன்முறையையும் காபன்-நடுநிலையான பயோமாஸ் வலுவில் முன்னெடுக்கும் ஒரே நிறுவனமாக டோக்கியோ சீமெந்தகுழுமம் திகழ்வதுடன், தேசத்துக்கு பெருமளவு நீர்சாரா புதுப்பிக்கத்தக்க வலு பங்களிப்பை வழங்கும் நிறுவனமாகவும் திகழ்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான நிர்மாணத்திட்டங்களுக்கு உயர் தர மூலப்பொருட்களை வழங்குகிறது. இவற்றில் மேலுயர்ந்த பாலங்கள், புகையிரத வீதிகள் மற்றும் நெடுஞ்சாலை வலையமைப்புகள் போன்றன அடங்கியுள்ளன. இவற்றினூடாக தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் நிறுவனம் தனது நிலையை உறுதி செய்துள்ளது.

படங்கள்: டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தலைவர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசி, 2018 ஆம் ஆண்டுக்கான பிஸ்னஸ் டுடே சிறந்த 30 விருதை, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்.