திருகோணமலையில் கண்டல் காடுகள் மீளநிறுவலுக்கு டோக்கியோ சீமெந்து பங்களிப்பு

திருகோணமலையில் கண்டல் காடுகள் மீளநிறுவலுக்கு டோக்கியோ சீமெந்து பங்களிப்பு

திருகோணமலையில் அமைந்துள்ள கொட் குடா (Cod Bay) பகுதியில் கண்டல் காடுகளை மீள வளர்ப்பதற்கு டோக்கியோ சீமெந்து பங்களிப்பு வழங்கியிருந்தது. அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியிருந்த இந்த கண்டல் தாவரங்களை அழிவடைவதிலிருந்து காத்து, அவற்றை மீள நிறுவும் செயற்பாட்டுக்கு டோக்கியோ சீமெந்து பங்களிப்பு வழங்கியிருந்தது. சீனக்குடா பகுதியில் நிறுவனத்தின் பிரதான தொழிற்சாலை அமைந்திருக்கும் பகுதியைச் சூழ்ந்து காணப்படும் கண்டல் தாவரங்கள் இந்த நிலையை எதிர்நோக்கியிருந்தன. திருகோணமலையின் அடையாளத்தில் முக்கிய பகுதியில் கொட் குடா (Cod Bay) அமைந்துள்ளமை விசேட அம்சமாகும். சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட காலப்பகுதியில், இங்கு காணப்பட்ட கண்டல் தாவரங்களினால் பெருமளவு சேதங்கள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டிருந்தன. இப்பகுதியில் கடல் வாழ் உயிரினங்கள் பரம்பலுக்கு இவை மிகவும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. இவற்றில் பல உயிரினங்கள் தங்கி வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக திருகோணமலையின் பெருமளவான கண்டல் தாவரங்கள் அழிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2012 ஆம் ஆண்டில் இவ்வாறு பாதிப்படைந்த கண்டல் தாவரங்களை மீள நிறுவும் செயற்பாடுகளை டோக்கியோ சீமெந்து நிறுவனம் கடற்படையின் கிழக்கு கட்டளை பிரிவுடன் இணைந்து ஆரம்பித்திருந்தது. இந்த மீளநிறுவும் செயற்பாடுகளில் இலங்கை கடற்படை முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்ததுடன், வடக்கு மற்றும் வட மேல் கரையோர பகுதியில் கண்டல் தாவரங்களை பயிரிடுவதிலும் முக்கிய பங்காற்றியிருந்தது. உள்நாட்டு விவசாயிகளும் இந்த திட்டத்துக்கு பங்களிப்பு வழங்கியிருந்ததனூடாக திட்டம் விரிவாக்கப்பட்டது.



திருகோணமலையிலுள்ள டோக்கியோ சீமெந்து தொழிற்சாலையின் வளாகத்தில் கண்டல் தாவர கன்று வளர்ப்பு நிலையமொன்றை ஸ்தாபித்ததுடன் இந்த நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தன. இந்த வளர்ப்பகத்தில் 10,000 க்கும் அதிகமான கண்டல் தாவர கன்றுகள் வளர்க்கப்பட்டதுடன், இவற்றில் 7 இனங்கள் அடங்கியிருந்தன. இவற்றில் சில சாதாரண சூழலில் பேணுவதற்கு மிகவும் கடினமானவையாக அமைந்திருந்தன. கொட் குடாவில் காணப்படும் இயற்கை சூழலுக்கமைய மீள நடுகைத் திட்டம் சூழல் பாதுகாப்பு நிபுணர்களின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த தாவரங்களிலிருந்து இயற்கையாக பெறப்பட்ட விதைகளிலிருந்து அழிந்த கண்டல் வனாந்தரங்களை மீள நிறுவும் வகையில் பயிரிடப்படும் செயற்பாடுகள் 4-5 வருட காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து தொழிற்சாலையை அண்மித்த 20 ஏக்கர் நிலப்பகுதியில் மீளச் செய்கை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல், தொழிற்சாலையை சூழவுள்ள கரையோர பகுதியில் 17000 க்கும் அதிகமான கண்டல் தாவரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. டோக்கியோ சீமெந்தினால் முன்னெடுக்கப்பட்ட கண்டல் காடு காப்பு திட்டத்தின் முக்கிய அங்கமாக இது அமைந்திருந்தது. மன்னார் மற்றும் திருகோணமலையில் 60,000 கண்டல் தாவர கன்றுகள் நடுகையை டோக்கியோ சீமெந்து பூர்த்தி செய்துள்ளது. இந்த திட்டத்தினூடாக வருடாந்தம் 10,000 புதிய கன்றுகள் உருவாக்கப்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு பிராந்திய கரையோரங்களில் கடற்படையினரால் இவை மீளப் பயிரிடப்படுகின்றன.

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் நிலைபேறாண்மை – கூட்டாண்மை முகாமையாளர் சாலிந்த கந்தேபொல ஏனைய கூட்டாண்மை நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் சமூக குழுக்களை இந்த கண்டல்காடுகளை பேணும் திட்டத்தில் கைகோர்க்குமாறு ஊக்குவிக்கின்றார். தமது அனுபவத்தை பகிர்ந்து கொள்கையில், ஏற்கனவே கண்டல் தாவரங்கள் காணப்பட்ட ஈர நிலப்பகுதிகளில் மீளச் செய்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் போது அந்தப் பகுதியின் ஈரப்பதனை மாற்றக்கூடாது, ஏனெனில் கண்டல் தாவரங்களின் வளர்ச்சியில் இது முக்கிய பங்கை வகிக்கும். மேலும் துரித கதியில் மீளச் செய்கை மேற்கொள்ளப்படுவது முக்கியமானதாகும், ஏனெனில் ஏற்கனவே காணப்பட்ட கண்டல் தாவரங்களின் போஷாக்கு அந்தப் பகுதியில் காணப்படுவதால், புதிய தாவரங்களின் வளர்ச்சிக்கு ஊக்கமாக அமைந்திருக்கும். இயற்கையான விதைகளை வருடம் முழுவதிலும் சேகரிக்கக்கூடியதாக இருக்கும், ஏனெனில் ஒவ்வொரு இனங்கள் வௌ;வேறு காலங்களில் பூக்கின்றன. கண்டல் தாவரங்கள் வளர்ச்சிக்கு போதியளவு இடவசதி தேவை, எனவே, அவற்றை பயிரிடும் போது குறிப்பிட்ட இடைவெளியை பேணுவதனூடாக, ஆரோக்கியமான வளர்ச்சியை பேணக்கூடியதாக இருக்கும்.

உயிரினங்களின் வாழ்க்கைக்கு முக்கியமான கண்டல் தாவரங்களை பேணும் நடவடிக்கைளில் தொடர்ச்சியாக டோக்கியோ சீமெந்து ஈடுபட்டு வருவதையிட்டு பெருமை கொள்கின்றது. டோக்கியோ சீமெந்து குழுமம் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் பல்வேறு நிலைபேறான நடவடிக்கைகளில் ஒன்றாக கண்டல் காடுகள் மீள வளர்ப்பு அமைந்துள்ளது. பவளப்பாறைகள் மீள நிறுவும் திட்டம் அடங்கியுள்ளதுடன், இதற்காகவும் இலங்கை கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்பு நிறுவனங்களுடனும் கைகோர்த்து இயங்குகின்றது. நிறுவனத்தின் இவ்வாறான சமூக பொறுப்புணர்வு திட்டங்களினூடாக, தேசத்துக்கும், தேசத்தின் மக்களுக்கும், சூழலுக்கு வளமூட்டுவது எனும் நிறுவனத்தின் கூட்டாண்மை தொனிப்பொருள் நிவர்த்தி செய்யப்படுவது மேலும் உறுதியாகியுள்ளது.