சமீபத்திய செய்தி வெளியீடுகள்
டோக்கியோ சீமெந்து வருடாந்த விநியோகத்தர் மாநாடு 2024 இல் சிறந்த செயற்பாட்டாளர்களுக்கு கௌரவிப்பு
டோக்கியோ சீமெந்து குழுமம் தனது வருடாந்த விநியோகத்தர் மாநாடு 2024 நிகழ்வை கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது. நாடு முழுவதையும் சேர்ந்த 140 க்கும் அதிகமான சிறப்பாக தமது பங்களிப்பை வெளிப்படுத்தியிருந்த விற்பனை பங்காளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் சிற்றி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ், மட்டக்களப்பு ஆஞ்சனேயர் சீமெந்து அன்ட் ஹார்ட்வெயார், குருநாகல் – நஷனல் டிரேடிங் ஸ்ரோர்ஸ், கிளிநொச்சி – சண்முகம் ஸ்ரோர்ஸ், உடுப்பிட்டி – எமரல்ட் ஹார்ட்வெயார் …
டோக்கியோ சீமெந்து குழுமம் தனது வருடாந்த விநியோகத்தர் மாநாடு 2024 நிகழ்வை கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது. நாடு முழுவதையும் சேர்ந்த 140 க்கும் அதிகமான சிறப்பாக தமது பங்களிப்பை வெளிப்படுத்தியிருந்த விற்பனை பங்காளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் சிற்றி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ், மட்டக்களப்பு ஆஞ்சனேயர் சீமெந்து அன்ட் ஹார்ட்வெயார், குருநாகல் – நஷனல் டிரேடிங் ஸ்ரோர்ஸ், கிளிநொச்சி – சண்முகம் ஸ்ரோர்ஸ், உடுப்பிட்டி – எமரல்ட் ஹார்ட்வெயார் மற்றும் கட்டுநேரிய – ஹன்சிக ட்ரான்ஸ்போர்ட் ஆகியன 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த விநியோகத்தர்களாக தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தன.
டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் நிறைவேற்று முகாமைத்துவ அணியினரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், குழும பிரதம செயற்பாட்டு அதிகாரி எம். தயானந்தன், ஆலோசனைப் பணிப்பாளர் கிறிஸ்டோபர் பெர்னான்டோ மற்றும் சந்தைப்படுத்தல் குழும பொது முகாமையாளர் தசந்த உடவத்த ஆகியோர் பங்கேற்றிருந்தனர். நாடு முழுவதையும் சேர்ந்த டோக்கியோ சீமெந்து விற்பனையாளர்கள் இந்நிகழ்வில் ஒன்றிணைக்கப்பட்டு, நினைவில் நிலைத்திருக்கும் கொண்டாட்டமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.
டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், முழு விற்பனை வலையமைப்பின் அர்ப்பணிப்பான செயற்பாட்டையும் பாராட்டியிருந்தார். வியாபார செயற்பாடுகளின் வரலாற்றில் மிகவும் சவால்கள் நிறைந்த காலப்பகுதியிலும் விற்பனை பங்காளர்களின் ஒப்பற்ற ஆதரவுடன் வெற்றிகரமாக செயலாற்றுவதற்கு முடிந்ததாக குறிப்பிட்டார். நாட்டில் நிலவிய கடினமான பொருளாதார சூழ்நிலை தொடர்பில் ஞானம் குறிப்பிடுகையில், தளம்பல்களுடனான சந்தைப்படுத்தல் சூழலிலும், டோக்கியோ சீமெந்தினால், தேசிய கடமையை பூர்த்தி செய்ய முடிந்ததுடன், சக குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பங்களிப்புச் செய்ய முடிந்தது. நிறுவனத்தின் விநியோகத்தர்கள் மற்றும் விற்பனையாளர்களின் ஆதரவினால் எம்மால் இதனை நிறைவேற்ற முடிந்ததாக கூறினார்.
வருடாந்த விநியோகத்தர் மாநாடு என்பது, நாடு முழுவதிலும் காணப்படும் டோக்கியோ சீமெந்து விற்பனையாளர்களை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் பிரதான நிகழ்வாகும். டோக்கியோ சீமெந்தின் நம்பிக்கையை வென்ற உயர் தரமான சீமெந்து வகைகள், கொங்கிறீற் மற்றும் சீமெந்து சார் பெறுமதி சேர் பொருட்கள் போன்றவற்றை விற்பனை விநியோகத்தில் அவர்கள் எய்திய சாதனைகளை கொண்டாடும் நிகழ்வில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது. டோக்கியோ சீமெந்து தனது விநியோக வலையமைப்புடன் இணைந்து பெருமைக்குரிய வர்த்தக நாமத் தெரிவுகளை விநியோகிக்கின்றது. இதில், நிபொன் சீமெந்து, டோக்கியோ சுப்பர், நிபொன் சீமெந்து ப்ரோ மற்றும் அற்லஸ் சீமெந்து மற்றும் டோக்கியோ சுப்பர்மிக்ஸ் ரெடி மிக்ஸ் கொங்கிறீற் போன்றன அடங்கியுள்ளதுடன், சீமெந்து சார் பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புகளான டோக்கியோ சுப்பர்பொன்ட், டோக்கியோ சுப்பர்சீல் மற்றும் டோக்கியோ சுப்பர்காஸ்ட் ஆகியனவும் அடங்கியுள்ளன. உள்நாட்டு நிர்மாணத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த இவை முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.
முற்றிலும் உள்நாட்டு கூட்டாண்மை வர்த்தக நாமமான டோக்கியோ சீமெந்து குழுமம், உள்நாட்டு பெறுமதி தயாரிப்பில் நான்கு தசாப்த காலத்துக்கு மேலாக வளமூட்டுவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. இதில் நிறுவனத்தின் விற்பனை வலையமைப்பு முக்கிய பங்காற்றியுள்ளது. உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் தீர்வுகள் விநியோகத்தில் நம்பிக்கையை வென்ற நாமம் எனும் நற்பெயரை எய்தியுள்ளதுடன், உயர் வாடிக்கையாளர் சேவையைக் கொண்டுள்ள டோக்கியோ சீமெந்து குழுமம், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னோடியான பங்காளர் எனும் தனது நிலையை மீள உறுதி செய்துள்ளது.
படங்கள்:
டோக்கியோ சீமெந்து வருடாந்த விநியோகத்தர் மாநாடு 2024 இல் உயர் பிரிவின் வெற்றியாளர்கள், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர், குழும பிரதம செயற்பாட்டு அதிகாரி மற்றும் குழும பொது முகாமையாளர் – சந்தைப்படுத்தல் ஆகியோருடன் காணப்படுகின்றனர்.
விசேடத்துவமான பயிற்சியளிப்பினூடாக வட பிராந்தியத்தின் கிரிக்கட்டுக்கு வலுவூட்டல்
இலங்கையில் கிரிக்கட் விளையாட்டு என்பது தேசத்தை ஒன்றிணைக்கும் நேர்த்தியான பெருமைக்குரிய அங்கமாக அமைந்துள்ளது. தேசத்தை ஒரே அணி, ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைத்து, குதூகலமாக, மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்யும் விளையாட்டாகவும் அமைந்துள்ளது. தற்போது எமது தேசத்தின் கொடி மீண்டும் உயரப் பறப்பதை காண முழு நாடுமே பலத்த எதிர்பார்ப்புகளுடன் உள்ளது. உலகக் கிரிக்கட்டில் மீண்டும் எமது வெற்றியை சுவைப்பதற்கு, புதிய திறமைசாலிகளை நாம் இனங்காண வேண்டியுள்ளதுடன், அவர்களுக்கு திறன்களை கட்டியெழுப்பிக் கொள்ள வாய்ப்புகளை வழங்க வேண்டியுள்ளது. 2014 …
இலங்கையில் கிரிக்கட் விளையாட்டு என்பது தேசத்தை ஒன்றிணைக்கும் நேர்த்தியான பெருமைக்குரிய அங்கமாக அமைந்துள்ளது. தேசத்தை ஒரே அணி, ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைத்து, குதூகலமாக, மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்யும் விளையாட்டாகவும் அமைந்துள்ளது. தற்போது எமது தேசத்தின் கொடி மீண்டும் உயரப் பறப்பதை காண முழு நாடுமே பலத்த எதிர்பார்ப்புகளுடன் உள்ளது. உலகக் கிரிக்கட்டில் மீண்டும் எமது வெற்றியை சுவைப்பதற்கு, புதிய திறமைசாலிகளை நாம் இனங்காண வேண்டியுள்ளதுடன், அவர்களுக்கு திறன்களை கட்டியெழுப்பிக் கொள்ள வாய்ப்புகளை வழங்க வேண்டியுள்ளது. 2014 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலுமிருந்து இளம் கிரிக்கட் திறமைசாலிகளை இனங்காணும் பயணத்தை டோக்கியோ சீமெந்து குழுமத்தின் Foundation of Goodness ஆரம்பித்திருந்தது. சிறந்த பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் கிரிக்கட் நிபுணர்களின் வழிகாட்டல்களின் கீழ் இளம் வீரர்களுக்கு தமது திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்காக மாதாந்தம் கிரிக்கட் பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த இளம் திறமையான பாடசாலை கிரிக்கட் வீரர்களுக்கு, விளையாட்டில் தமது கனவை நனவாக்கிக் கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது இந்தத் திட்டத்தின் இலக்காகும். Foundation of Goodness இன் உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் அமைந்துள்ள சீனிகம மற்றும் ஹிக்கடுவ பகுதிகளில் இந்த மாதாந்த பயிற்சி முகாம் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. புகழ்பெற்ற கிரிக்கட் பயிற்றுவிப்பாளரான ஹேமந்த தேவப்பிரியவினால் இந்த பயிற்சி அமர்வுகள் முன்னெடுக்கப்படுவதுடன், 13 முதல் 19 வரையான பாடசாலை மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர். தென் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட கிரிக்கட் முகாம்கள் வெற்றிகரமானதாக அமைந்திருந்ததைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டில் வட பிராந்தியத்துக்கும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை டோக்கியோ சீமெந்து வியாபித்திருந்தது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மாங்குளம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பல இளம் கிரிக்கட் வீரர்களை இந்தத் திட்டம் உள்வாங்கியது. Foundation of Goodness இன் விளையாட்டுப் பணிப்பாளர் அனுர டி சில்வா, இந்தத் திட்டத்துக்கு தலைமைத்துவமளிப்பதுடன், தேசத்துக்கு பெருமை சேர்க்கக்கூடிய 50 வட பிராந்திய இளைஞர்களை தெரிந்து, அவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு இந்தத் திட்டத்தினூடாக எதிர்பார்த்துள்ளார். வட பிராந்தியத்தில் காணப்படும் திறமைகளை இனங்கண்டதன் பின், சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களினால் இலங்கை கிரிக்கட் வலுவூட்டப்பட்டிருந்தது. கிராமியமட்டத்தில் இனங்காணப்படாமல் பல திறமைசாலிகள் காணப்படுகின்றனர். எதிர்காலத்தில் எமது கிரிக்கட் வரலாற்றை செதுக்கக்கூடிய இந்த நட்சத்திரங்களை வெளிக் கொண்டுவருவது எமது எதிர்பார்ப்பாகும்.” என்றார். வட பிராந்தியத்தின் திறமை வெளிப்பாடானது, எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையில் அமைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் இலங்கையின் கிரிக்கட்டில் வசந்த காலத்தை தோற்றுவிக்கக்கூடிய நம்பிக்கையை வழங்குவதாக அமைந்துள்ளது. கிரிக்கட் விளையாட்டை மேம்படுத்துவது தொடர்பில் டோக்கியோ சீமெந்து குழுமம் தொடர்ச்சியாக தனது ஆதரவை வழங்கி வருகின்றது. சமூக மற்றும் புவியியல்சார் இடைவெளியை நிவர்த்தி செய்து, பாலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக கிரிக்கட்டின் உண்மையான கண்ணியத்தன்மை வெளிப்படுத்தப்படும் என்பதில் நிறுவனம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. டோக்கியோ சீமெந்தின் மேற்பார்வையின் கீழ் Foundation of Goodness இனால் முன்னெடுக்கப்படும் பயிற்சி முகாம்களினால் இதுவரையில் 1000 க்கும் அதிகமான பாடசாலை மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. பல தேசிய மட்ட வீரர்கள் தயார்ப்படுத்தப்பட்டு, உலக கிரிக்கட் அரங்கில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுமுள்ளனர். நாட்டின் ஒவ்வொரு பாகத்தையும் சேர்ந்த இளைஞர்களுக்கு கிரிக்கட்டில் ஒன்றிணைய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதனூடாக, சகோதரத்துவத்துக்கான அடித்தளம், மதிப்பளிப்பது தொடர்பான புரிந்துணர்வு போன்றவற்றுக்கான அடித்தளத்தை நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு நிர்மாணத் துறையில் முன்னோடி எனும் வகையில் டோக்கியோ சீமெந்தின் எதிர்பார்ப்பான தேசத்தை கட்டியெழுப்புதல் என்பதற்கு பங்களிப்பு வழங்கப்படுகின்றது.
டோக்கியோ சீமெந்துக் குழுமத்தின் “எதிர்காலச் சந்ததியை போஷாக்கூட்டுவது” எனும் பாடசாலை போஷாக்குத்திட்டம் விஸ்தரிப்பு
மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பாடசாலைகளின் 179 மாணவர்களை உள்வாங்கி தனது “எதிர்காலச் சந்ததியை போஷாக்கூட்டுவது” எனும் பாடசாலைப் போஷாக்குத் திட்டத்தை டோக்கியோ சீமெந்து குழுமம் அண்மையில் விஸ்தரித்திருந்தது. இந்தத் திட்டத்தில் கொட்டியாகல, வத்தேகம ஸ்ரீமல் கனிஷ்ட வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவர்கள், சியம்பலாண்டுவ பம்பரகஸ்ரொட கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் பரவாய ஆரம்ப பாடசாலை மற்றும் கந்தஉடபங்குவ தனகிரிய கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்கள் அடங்கியுள்ளனர். இவர்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களிலும் சமபல மதிய …
மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பாடசாலைகளின் 179 மாணவர்களை உள்வாங்கி தனது “எதிர்காலச் சந்ததியை போஷாக்கூட்டுவது” எனும் பாடசாலைப் போஷாக்குத் திட்டத்தை டோக்கியோ சீமெந்து குழுமம் அண்மையில் விஸ்தரித்திருந்தது. இந்தத் திட்டத்தில் கொட்டியாகல, வத்தேகம ஸ்ரீமல் கனிஷ்ட வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவர்கள், சியம்பலாண்டுவ பம்பரகஸ்ரொட கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் பரவாய ஆரம்ப பாடசாலை மற்றும் கந்தஉடபங்குவ தனகிரிய கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்கள் அடங்கியுள்ளனர். இவர்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களிலும் சமபல மதிய உணவு வேளை வழங்கப்படுகின்றது.
பல வருட காலமாக அமைதியான முறையில் இந்த சமூக மேம்பாட்டுத் திட்டத்தை டோக்கியோ சீமெந்து முன்னெடுத்திருந்ததுடன், இதனூடாக திருகோணமலை, திரியாய மகா வித்தியாலயத்தின் 300க்கும் அதிகமான மாணவர்களுக்கு மதிய உணவு வேளைகள் வழங்கப்படுகின்றன. மொனராகலை மாவட்ட பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் “எதிர்காலச் சந்ததியை போஷாக்கூட்டுவது” மதிய உணவு வேளைத் திட்டத்தில் தற்போது 475 க்கும் அதிகமான பின்தங்கிய நிலையிலுள்ள பாடசாலை மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
டோக்கியோ சீமெந்து குழுமத்தின் புத்தாக்கங்களுக்கான பணிப்பாளர் பிரவீன் ஞானம் இந்தத் திட்டத்தின் விரிவாக்கம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஆண்டில் அதிகரித்துக் காணப்படும் சிறுவர் மந்தபோஷாக்கு தொடர்பான பிரச்சனைக்கு ஓரளவேனும் தீர்வு காணும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. பெரிதும் கவனம் செலுத்தப்படாத மந்த போஷணை என்பது, எதிர்காலத் தலைமுறையினர் மத்தியில் உள மற்றும் உடல்சார் குறைகளை தோற்றுவிக்கக்கூடியது என்பதுடன், தமது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியுமாக இருந்தால் மாத்திரமே பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகின்றனர். இதனால் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவு பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வியைப் பெற்றுக் கொள்வது என்பதும் சவால்கள் நிறைந்த விடயமாக அமைந்திருக்கும் நிலையில், இந்த வசதியை ஏற்படுத்த நாம் தீர்மானித்தோம்.” என்றார்.
மொனராகலையைச் சேர்ந்த 4 பாடசாலைகளின் 179 மாணவர்கள், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் “எதிர்காலச் சந்ததியை போஷாக்கூட்டுவது” பாடசாலை போஷாக்குத் திட்டத்தினூடாக மதிய உணவு வேளையைப் பெறுகின்றனர்
கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களின் பிரகாரம் தினசரி உணவுத் திட்டம் அமைந்திருப்பதுடன், சகல பிரதான உணவு வகைகளிலும் பச்சைக் காய்கறிகள், தானியங்கள், பசுப் பாலுணவு மற்றும் உள்நாட்டில் பெறப்பட்ட பழ வகை போன்றன அடங்கியிருக்கும். இவற்றினூடாக பிள்ளைகளின் போஷாக்கு விருத்திக்கான தேவை நிவர்த்தி செய்யப்படுகின்றது. தொடர்ச்சியாக சிறுவர்கள் பரிபூரண உணவு வேளையை பெற்றுக் கொள்வதை தொடர்ந்தும் உறுதி செய்யும் வகையிலும், சிறுவர்களின் வளர்ச்சி இலக்குகள் முன்னேற்றகரமாக எய்தப்படுவதை உறுதி செய்வதற்கும் டோக்கியோ சீமெந்தினால், பாடசாலை நிர்வாகம், பெற்றோர் குழுக்கள், கல்வி அமைச்சின் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சின் சுகாதார அதிகாரிகளின் பங்கேற்புடனான கண்காணிப்புப் பொறிமுறையும் நிறுவப்பட்டுள்ளது.
சிறுவர்களின் போஷாக்கு வளர்ச்சி தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தினசரி உணவு வேளையில் அடங்கியிருக்கும் பிரதான உணவுக்கூறுகள்
டோக்கியோ சீமெந்து மற்றும் பாடசாலை நிர்வாகத்துக்குமிடையே ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் வலயக் கல்விப் பணிப்பாளர் முக்கிய பங்காற்றியிருந்தார். பாடசாலை மட்டத்தில் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் மேற்பார்வையின் கீழ் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. உணவு தயாரிப்பில் தன்னார்வ அடிப்படையில் பெற்றோர்கள் முன்வந்து பங்களிப்பு வழங்குகின்றனர். இந்த உணவு வகைகளை தயாரிப்பதற்கு அவசியமான உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களை பெற்றுக் கொடுக்கவும், பாடசாலை சமையலறைகளை தூய்மையாக பேணுவதற்கு அவசியமான பொருட்களை வழங்கவும் டோக்கியோ சீமெந்து முன்வந்திருந்தது. இந்தத் திட்டத்தை கண்காணிப்பதற்காக இந்தப் பிரதேசங்களின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அடிக்கடி விஜயம் செய்து, சுகாதார விதிமுறைகளின் பிரகாரம் உணவுகள் தயாரிக்கப்படுவதை உறுதி செய்கின்றனர்.
பாடசாலை மட்டத்தில் தன்னார்வ பெற்றோர்களினால் சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் உணவு தயாரிக்கப்படுவதையும், சுகாதார அதிகாரிகள், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மேற்பார்வை செய்வதையும் காணலாம்
இந்தத் திட்டம் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் ஸ்தாபகத் தவிசாளர் தேசமான்ய ஏ.வை.எஸ்.ஞானம் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவு வேளையை வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இவர் உணர்ந்திருந்தார். அத்துடன், அதனைப் பெற்றுக் கொடுப்பதனூடாக, பாடசாலைக்கான பிள்ளைகளை வருகையை ஊக்குவிக்க முடியும் என்பதுடன், ஆரம்பக் கல்வியை இவர்கள் பூர்த்தி செய்வதற்கு அவசியமான தூண்டுதலாகவும் இது அமைந்திருந்தது. நாட்டில் உணவுப் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், இலங்கையின் சகல பாகங்களிலிருந்தும் குறைந்த வருமானமீட்டும் குடும்பங்களின் சிறுவர்கள் மத்தியில் மந்த போஷாக்கு மற்றும் வளர்ச்சிப் பாதிப்பு தொடர்பில் சர்வதேச முகவர் அமைப்புகளான UNICEF மற்றும் WB போன்றன எதிர்வுகூரியிருந்த நிலையில், இந்த உணவு வேளைத் திட்டத்தை விரிவாக்கம் செய்ய டோக்கியோ சீமெந்து குழுமம் தீர்மானித்திருந்தது. “எதிர்காலச் சந்ததியை போஷாக்கூட்டுவது” திட்டத்தினூடாக இந்தச் சிறுவர்களின் பெற்றோருக்கு தினசரி தமது பிள்ளைகளுக்கு போதியளவு உணவை வழங்குவதில் காணப்படும் பாரிய சுமைகளில் ஒன்று நிவர்த்திக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு சமூக வலுவூட்டல் திட்டங்களில் ஒன்றாக இந்தத் திட்டம் அமைந்துள்ளதுடன், நாட்டு மக்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களில் ஒன்றாகவும் காணப்படுகின்றது. இதுபோன்ற திட்டங்களினூடாக டோக்கியோ சீமெந்து குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளுக்கான அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், இவற்றினூடாக தமது சமூக நலன்புரி மற்றும் சூழல்பாதுகாப்பு நடவடிக்கைகளை கூட்டாண்மைச் செயற்பாடுகளில் வெற்றிகரமாக உள்வாங்கியுள்ளதுடன், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னணிப் பங்காளராகத் திகழும் நோக்கத்துக்கமைய செயலாற்றிய வண்ணமுள்ளது.
காப்பகம்
2024 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2023 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2022 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2021 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2020 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2019 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2018 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |
2017 | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec |