2014
எமது மஹியங்கனை பசுமை மின்னுற்பத்தி நிலையம் 30,000 கிராமிய வீடுகளுக்கு மின்சார வசதியிiனைப் பெற்றுக்கொடுக்கின்றது.
நாம் இலங்கையின் முதலாவது பாரியளவிலான டென்டரோ மின்சார நிலையத்தினை மணித்தியாலத்திற்கு 5 மெகா வோட் கொள்ளளவுடன் வெற்றிகரமாக 2004 இல் நிர்மாணித்தோம்.
இம்முன்னெடுப்பின் ஊடாக ஏறத்தாழ 500 நேரடி வேலைவாய்ப்புக்களையும், 1000 இற்கும் மேற்பட்ட மறைமுக வேலைவாய்ப்புக்களையும் நாம் உருவாக்கியுள்ளோம்.
எமது மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் 06 மில்லியனுக்கும் அதிகமான சீமை அகத்தி (Gliricidia) மரங்களை நாம் நாட்டியுள்ளோம்.
எங்கள் சமூக அடிப்படையிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் மூலம் 2500 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றோம்.
ஒவ்வொரு ஆண்டும் விவசாய குடும்பங்களுக்கு ரூ.1000 மில்லியனுக்கும் அதிகமான தொகையை நாங்கள் வழங்குவதினால் எரிபொருளை இறக்குமதி செய்ய செலவிடும் தொகையானது உள்நாட்டில் சேமிக்கப்படுவதுடன் அது கிராமப்புற பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை அதிகரிக்கின்றது.