Filtered Press Release : 2020 Dec


News Image
டோக்கியோ சீமெந்தின் முதலீட்டு விரிவாக்கம் அரசாங்கத்தின் கொள்கையுடன் நேரடியான ஒன்றிக்கும் வகையில் அமைந்துள்ளது

உள்நாட்டு உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் தூர நோக்குடன் தீர்மானத்துடன் ஒன்றிக்கும் வகையில், டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி, இலங்கை முதலீட்டு சபையுடன் விரிவாக்கல் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டிருந்தது. நிறுவனம் தனது உள்நாட்டு உற்பத்தி கொள்ளளவை மேலும் 1 மில்லியன் மெட்ரிக் டொன்களால் அதிகரிக்கும் வகையில் 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வது தொடர்பாக அறிவித்திருந்தது. இந்த முதலீட்டுக்கு டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் அனுமதி கிடைத்திருந்தது. உள்நாட்டு உற்பத்தியாளர்களை

உள்நாட்டு உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் தூர நோக்குடன் தீர்மானத்துடன் ஒன்றிக்கும் வகையில், டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி, இலங்கை முதலீட்டு சபையுடன் விரிவாக்கல் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டிருந்தது. நிறுவனம் தனது உள்நாட்டு உற்பத்தி கொள்ளளவை மேலும் 1 மில்லியன் மெட்ரிக் டொன்களால் அதிகரிக்கும் வகையில் 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வது தொடர்பாக அறிவித்திருந்தது. இந்த முதலீட்டுக்கு டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் அனுமதி கிடைத்திருந்தது. உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பது தொடர்பான ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தீர்மானங்களுக்கான நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த முதலீட்டு நடவடிக்கை அமைந்துள்ளது.

அநாவசியமான இறக்குமதிகளின் மீதான கட்டுப்பாடுகளின் அறிமுகத்துடன், அந்நியச் செலாவணி வெளிச் செல்லலை கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. இதனூடாக, சகல துறைகளையும் சேர்ந்த உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு நீண்ட கால வளர்ச்சித் திட்டங்களை நம்பிக்கையுடன் முன்னெடுக்கக்கூடியதாகவுள்ளது. உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான டோக்கியோ சீமெந்தின் தீர்மானம் அரசாங்கத்தின் இந்த நேர்த்தியான கொள்கை நிலைப்பாடு காரணமாக நேரடியாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது. புதிய முதலீட்டினூடாக உள்நாட்டு பெறுமதி உருவாக்கத்தை பெருமளவு ஊக்குவிப்பதாக அமைந்திருக்கும் என்பதுடன், மேலும் பல நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.

திருகோணமலையில் அமைந்துள்ள டோக்கியோ சீமெந்து தொழிற்சாலையின் திறனை மேலும் கட்டியெழுப்புவதற்கு இந்த மூலதனம் பயனுள்ளதாக அமைந்திருக்கும். உள்நாட்டு நிர்மாணத்துறையில் எதிர்காலத்தில் எழக்கூடிய வளர்ச்சிக்கு தயாரிப்புகளை வழங்கக்கூடிய தயார்நிலையில் நிறுவனம் அமைந்திருப்பதை உறுதி செய்யும். 18 மாத கால விரிவாக்கத் திட்டத்துடன், டோக்கியோ சீமெந்து தனது டோக்கியோ சுப்பர், நிப்பொன் சீமெந்து மற்றும் நிப்பொன் சீமெந்து புரோ, சந்தையில் முன்னோடியாகத் திகழும் சாதாரண போர்ட்லாந்து சீமெந்து மற்றும் பிளென்டட் ஹைட்ரோலிக் சீமெந்து ஆகியவற்றின் உற்பத்தியை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அதிகரிக்கக்கூடியதாக இருக்கும். இந்த நடவடிக்கையினூடாக, சீமெந்து மற்றும் கொங்கிறீற் ஆகியவற்றின் புகழ்பெற்ற உற்பத்தியாளர் மற்றும் விநியோகத்தர் எனும் நிறுவனத்தின் நிலைப்பாட்டை மேலும் உறுதி செய்வதாக அமைந்திருக்கும்.


காப்பகம்

2024JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2023JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2022JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2021JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2020JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2019JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2018JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2017JanFebMarAprMayJunJulAugSepOctNovDec