
டோக்கியோ சுப்பர் BHC பொதுப் பாவனைக்கான சீமெந்தாகவும் மற்றும் கடற்கரை ஓரம், சதுப்பு நிலங்கள் போன்றவற்றிற்கான விசேட பாவனை சீமெந்தாகவும் அமைந்துள்ளது. இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் SLS 1247:2015 Strength Class 42.5 N தரச் சான்றிதழை பெற்ற சீமெந்தாக திகழ்கிறது. மேலும், இது உயர் வலிமை மற்றும் நீடித்த தன்மைக்கான சர்வதேச வலிமை வகுப்பு ஐரோப்பய கட்டளைச் சட்டமான BS EN 197-1: 2011ற்கு அமைவான CEM IV/A (V) 42.5N – SR எனும் சான்றிதழையும் பெற்றுள்ளது.

வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த தயாரிப்பு அமைந்துள்ளதுடன், சூழல் பாதுகாப்பு தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தி, நிலைபேறான எதிர்காலத்துக்கு வழிகோலுவதாக அமைந்துள்ளது. நிலக்கரிச்சாம்பலை கொண்டு உற்பத்தி செய்யப்படுவதனால் 25% க்கும் அதிகமாக காபனீரொட்சைட் வெளியீட்டை தடுத்து சூழல் வெப்பமடைவதைக் குறைப்பதற்கு துணை புரிவதனால், இச்சீமெந்தானது சூழலுக்கு பாதுகாப்பான பசுமைத் தயாரிப்பாக அமைந்துள்ளது. தனது காபன் வெளியீட்டை மேலும் குறைக்கும் வகையில், டோக்கியோ சுப்பர் BHC என்பது முற்றிலும் காபன் நடுநிலையான புதுப்பிக்கத்தக்க உயிரியல் வலுவைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது. சந்தையில் காணப்படும் சூழலுக்கு நட்பான தெரிவாகவும் அமைந்துள்ளது.
டோக்கியோ சுப்பர் BHC இல் காணப்படும் இரசாயன சேர்மானங்களினால், சதுப்பு நிலங்கள், நீருக்கு கீழான நிர்மாணங்கள் அல்லது வெள்ள அனர்த்தம் அடிக்கடி இடம்பெறும் பகுதிகள், உயர் செறிமானம் கொண்ட சல்பேட் அல்லது குளோரைட் மண் கொண்ட பகுதிகள் என்பவற்றில் நிர்மாண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிறந்த தெரிவாக அமைந்துள்ளது. அத்துடன், உருக்கிரும்புகள் துருப்பிடித்தலைத் தவிர்த்து கட்டிடங்களின் நின்று நிலைக்கும் தன்மையை உறுதி செய்கிறது.
இலங்கை கட்டிட நிறுவனத்தின் பசுமை (CIOB Green Mark) சான்றிதழினால் அதிகளவு சூழலுக்கு நட்பான நிலைபேறான நிர்மாண செயற்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. பசுமை கட்டிடம் (Green Building) தயாரிப்பு சான்று என்பது, அவற்றின் சூழல் தாக்கம் மற்றும் வினைத்திறன் போன்றவற்றை மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளது. வலு, நீர், வளங்களின் வினைத்திறன், ஆரோக்கியம், மாசு கட்டுப்படுத்தல் மற்றும் இதர தேவைப்பாடுகளான சூழல் தர முகாமைத்துவ கட்டமைப்புகள் (EQMS) மற்றும் தொழில்நுட்ப வினைத்திறன் / புத்தாக்கம் பற்றியும் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும், சூழலுக்கு நீண்ட கால அடிப்படையிலான தாக்கத்தைக் கண்டறியக்கூடிய மதிப்பீட்டுக்கான பரிபூரண வாழ்க்கை வட்ட மதிப்பீட்டையும் கொண்டுள்ளது.
இலங்கை கட்டிட நிறுவனத்திடமிருந்து (CIOB) பசுமைதரச் (Green Mark) சான்றை டோக்கியோ சுப்பர் BHC நீரியல் கலவை (blended hydraulic) சீமெந்து பெற்றுக் கொண்டதனூடாக, இலங்கையில் சீமெந்து மற்றும் கொங்கிறீற் உற்பத்தியில் அதிகளவு சூழல் பாதுகாப்பு தொடர்பில் கரிசனை காண்பிக்கும் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் பெருமளவு புத்தாக்கமான சீமெந்து அடிப்படையிலான பெறுமதி சேர்க்கப்பட்ட தீர்வுகளான பிளாஸ்டர்ஸ் (plasters), புளோரிங் கம்பவுன்ட்ஸ் (flooring compounds), வோட்டர் ப்ரூஃவர்ஸ் (water proofers) மற்றும் டைல் அட்கசிவ்ஸ் (tile adhesives) போன்ற நிர்மாண செயற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்தும் தயாரிப்புகள் பல சூழலுக்கு நட்பான வகையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
டோக்கியோ சீமெந்து குழுமமானது, கட்டிட நிர்மாணத்துறைக்கு உயர் தரமான சீமெந்து மற்றும் கொங்கிறீற் ஆகியவற்றை விநியோகிப்பதில் உயர் நம்பிக்கை பெற்ற நிறுவனம் எனும் கீர்த்தி நாமத்தை பெற்றுள்ளது. இலங்கையின் அபிவிருத்தி வளர்ச்சிப் பாதையில் உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை விநியோகித்துள்ளதுடன், நாடு பூராகவும் பல கட்டிட நிர்மாணிப்புகள் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தயாரிப்புகளினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகக் கொழும்பில் நிர்மாணிக்கப்படும் வானுயர்ந்த கட்டிடங்கள் பலதும் அடங்குவதுடன், மேம்பாலங்கள், புகையிரத பாதைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்புகள் போன்றன இதில் அடங்கியுள்ளன.
படம்: இடமிருந்து: சம்மேளன அங்கத்தவரான சுதத் அமரசிங்க, தலைவரும் பொறியியலாளருமான கலாநிதி. ரொஹான் கருணாரட்ன, CIOB இன் சம்மேளன அங்கத்தவரான சம்பத் விஜேசேகர, Green Mark சான்றை, டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பணிப்பாளர் எம்.ஜி.எம்.யு. இஸ்மைல் மற்றும் கூட்டாண்மை நிலைபேறாண்மை முகாமையாளர் சாலிந்த கந்தபொல ஆகியோரிடம் கையளிக்கின்றனர்.