சந்தையில் நிலவிய சீமெந்து தட்டுப்பாட்டை குறைந்த விலையில் துரிதமாக சீர் செய்வதில் டோக்கியோ சீமெந்து பங்களிப்பு

சந்தையில் நிலவிய சீமெந்து தட்டுப்பாட்டை குறைந்த விலையில் துரிதமாக சீர் செய்வதில் டோக்கியோ சீமெந்து பங்களிப்பு

சந்தையில் நுகர்வோருக்கு குறைந்த விலையில் சீமெந்தை சென்றடையச் செய்யும் துரித விநியோகப் பணிகளை டோக்கியோ சீமெந்து நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. சீமெந்து இறக்குமதியாளர்கள் பொதியிடப்பட்ட சீமெந்து இறக்குமதியை இடைநிறுத்தியதைத் தொடர்ந்து சந்தையில் ஏற்பட்ட தட்டுப்பாட்டை சீர் செய்யும் வகையில், உடனடியாக பொதியிடப்பட்ட சீமெந்தை இறக்குமதி செய்யும் பணிகளை டோக்கியோ சீமெந்து நிறுவனம் ஆரம்பித்திருந்தது. அதன் பிரகாரம், நாடு முழுவதையும் சேர்ந்த வாடிக்கையாளர்களை சென்றடையும் வகையில் பொதியிடப்பட்ட சீமெந்தை குறைந்த விலையான ரூ. 1275 என்பதற்கமைய விநியோகப் பணிகளை ஆரம்பித்துள்ளது. சந்தையில் ஏற்பட்டிருந்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு நிறுவனத்தினால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டோக்கியோ சீமெந்து குழுமம் கடந்த மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. நாட்டின் மாபெரும் சீமெந்து உற்பத்தியாளர் எனும் வகையில், திருகோணமலையிலுள்ள சீமெந்து உற்பத்தி ஆலை எந்நேரமும் இயங்கிய வண்ணமுள்ளதுடன், நாடு முழுவதிலும் தடங்கலில்லாத விநியோகத்தை மேற்கொள்வதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்த அவசர ஏற்பாட்டு கோரிக்கையாக, 12000 மெட்ரிக் டொன் சீமெந்தை இறக்குமதி செய்வதற்கு விசேட ஏற்பாடுகளை டோக்கியோ சீமெந்து மேற்கொண்டிருந்தது. வழமையாக டோக்கியோ சீமெந்து கொழும்பு டேர்மினல் ஊடாக மாதமொன்றுக்கு இறக்குமதி செய்யப்படும் 30000 மெட்ரிக் டொன் சீமெந்துக்கு மேலதிகமாக இந்த இறக்குமதி மேற்கொள்ளப்பட்டிருந்தது. உள்நாட்டு நிர்மாணத் துறையில் எழுந்துள்ள கேள்வியை நிவர்த்தி செய்வதில் நிறுவனம் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் வகையில், டோக்கியோ சீமெந்து குழுமம் அண்மையில் தனது தொழிற்சாலை விரிவாக்கத்துக்கான அடிக்கலை நாட்டியிருந்தது. அந்தத் திட்டம் பூர்த்தியடைந்ததும், 2023 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் உற்பத்திக் கொள்ளளவு மேலும் 1 மெட்ரிக் டொன்களால் அதிகரிக்கும். உள்நாட்டு பெறுமதி உருவாக்கத்தில் தொடர்ச்சியாக கவனம் செலுத்திவரும் டோக்கியோ சீமெந்து குழுமம், நாடு முழுவதிலும் காணப்படும் வாடிக்கையாளர்களுக்கு சீமெந்து விநியோகத்தை மேற்கொண்டு, தடங்கலில்லாத சீமெந்து விநியோகத்தை உறுதி செய்வதில் பங்காற்றுகின்றது. அதனூடாக தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னணி பங்காளர் எனும் நிறுவனத்தின் நிலையை உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது. படம்: டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி குழும சந்தைப்படுத்தல் முகாமையாளர் தஷந்த உடவத்த மற்றும் மொத்த சீமெந்து சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஜிலனி மொஹைதீன் ஆகியோர் விநியோகத்துக்கு தயார்நிலையிலுள்ள சீமெந்து பொதிகளுடன் காணப்படுகின்றனர்.