டோக்கியோ சீமெந்தின் சிறந்த விற்பனை பங்காளர்களுக்கு திருகோணமலை தொழிற்சாலை விஜயத்துடன் கௌரவிப்பு

டோக்கியோ சீமெந்தின் சிறந்த விற்பனை பங்காளர்களுக்கு திருகோணமலை தொழிற்சாலை விஜயத்துடன் கௌரவிப்பு

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நாடு முழுவதையும் சேர்ந்த சிறந்த விற்பனை பங்காளர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருகோணமலையில் அமைந்துள்ள டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை விஜயத்துடன், மனம்மறவாத தங்கியிருப்பு அனுபவத்தையும் அவர்களுக்கு வழங்கியிருந்தது. இந்த ஆண்டின் வருடாந்த விநியோகத்தர் மாநாட்டை மாறுபட்ட வகையில் மனம்மறவாத அனுபவத்தை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் முன்னெடுத்திருந்தது. வார இறுதியை தமது குடும்பத்தாருடன் திருகோணமலையில் தங்கியிருந்து அனுபவிப்பதற்கு விநியோகத்தருக்கு வாய்ப்பை வழங்கியிருந்ததுடன், நவீன வசதிகள் படைத்த திருகோணமலை தொழிற்சாலையை பார்வையிடுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது.



யாழ்ப்பாணம் சிட்டி ஹார்ட்வெயார் ஸ்ரோர்ஸ், டோக்கியோ சீமெந்தின் ஆண்டின் சிறந்த விநியோகத்தருக்கான விருதை பெற்றுக் கொண்டது.

நாடு முழுவதையும் சேர்ந்த சிறப்பாக செயலாற்றியிருந்த 200 டோக்கியோ சீமெந்து விநியோகத்தர்களை இந்த நிகழ்வில் இணைத்திருந்ததுடன், அவர்களின் சாதனைமிகுந்த செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் நிகழ்வை முன்னெடுத்திருந்தது. கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்டிருந்த வௌ;வேறு ஊக்குவிப்புத் திட்டங்களில் சிறப்பாக செயலாற்றியிருந்த சுமார் 159 விநியோகத்தர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசுகள் வழங்கப்பட்டிருந்ததுடன், மனம்மறவாத ஒன்றுகூடல் நிகழ்வாகவும் அமைந்திருந்தது. டோக்கியோ சீமெந்தின் ஸ்தாபிப்பு பகுதியான திருகோணமலையில் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், ஆண்டின் சிறந்த விநியோகத்தருக்கான முதல் பரிசை யாழ்ப்பாணம் – சிட்டி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ் பெற்றுக் கொண்டது. இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை மட்டக்களப்பு – ஆஞ்சனேயர் சீமெந்து அன்ட் ஹார்ட்வெயார் டீலர்ஸ் மற்றும் குருநாகல் – நெஷனல் டிரேடிங் ஸ்ரோர்ஸ் ஆகியன பெற்றுக் கொண்டன.



டோக்கியோ சீமெந்து (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம்.

இந்த நிகழ்வில் டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், பணிப்பாளர் ஆலோசகர் கிறிஸ்டோபர் பெர்னான்டோ, குழும பிரதம செயற்பாட்டு அதிகாரி எம். தயானந்தன் மற்றும் டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து கம்பனி தொழிற்சாலை பொது முகாமையாளர் வி.எம்.ரவீந்திரகுமார் மற்றும் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் பிரதான நிர்வாக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து தொழிற்சாலையினுள் சீமெந்து களஞ்சியப்படுத்தும் பகுதிகளை டோக்கியோ சீமெந்து விநியோக பங்காளர்கள் பார்வையிடுகின்றனர்.



திருகோணமலை, சீனக் குடா பகுதியில் அமைந்துள்ள டோக்கியோ சீமெந்தின் பிரத்தியேக இறங்குதுறையை விநியோக பங்காளர்கள் பார்வையிடுகின்றனர்.

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் கருத்துத் தெரிவிக்கையில், டோக்கியோ சீமெந்து விநியோகத்தர்களை நிறுவனத்தின் பிறப்பிடத்துக்கு வரவேற்றிருந்ததுடன், நிறுவனத்தின் செயற்பாடுகள் எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டிருந்தது தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தார். விநியோகத்தர்களின் நம்பிக்கையை வெல்வதற்காக நிறுவனத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்ததுடன், சந்தையில் சவால்கள் நிறைந்த சூழல்களிலும் தொடர்ச்சியாக தனது தயாரிப்புகளில் உயர் தரத்தை பேணுவதில் எவ்வாறு டோக்கியோ சீமெந்து செயலாற்றியிருந்தது என்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தார். தொழிற்சாலை விஜயத்தினூடாக, விநியோகத்தர்களுக்கு உற்பத்தி செயன்முறைகள் மற்றும் பின்பற்றப்படும் தரக் கட்டுப்பாட்டு செயன்முறைகள் தொடர்பில் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது என்று தெரிவித்தார்.



டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து தொழிற்சாலையில் தாவரக் கன்று வளர்ப்பு பகுதியை விநியோக பங்காளர்கள் பார்வையிடுகின்றனர்.

உற்பத்தி பகுதிகள், நவீன வசதிகள் படைத்த ஆய்வுகூடம் மற்றும் டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் காணப்படும் பயோமாஸ் மின்பிறப்பாக்கல் பகுதிகள் போன்றவற்றை பார்வையிடும் வாய்ப்பும் விநியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. விஜயம் செய்திருந்தவர்களுக்கு சீமெந்து மூலப்பொருள் இறக்குமதி செய்தல், உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுத்தல், பொதிகளில் அடைத்தல் மற்றும் ட்ரேலர்களில் அவற்றை ஏற்றி விற்பனை பகுதிகளுக்கு அனுப்புதல் வரையான சகல செயற்பாடுகளையும் பார்வையிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. தொழிற்சாலை வளாகத்தில் கண்டல்தாவரக் கன்று வளர்ப்பு பகுதியையும் விநியோக பங்காளர்கள் பார்வையிட்டனர். தொழிற்சாலையின் பொறியியலாளர்கள் மற்றும் கள விற்பனை அதிகாரிகளின் வழிகாட்டலில் இந்த விஜயம் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து, விநியோகத்தர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாரையும் மகிழ்விக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.