கிராமிய மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் Foundation of Goodness உடனான பங்காண்மையை டோக்கியோ சீமெந்து குழுமம் மேலும் ஒரு வருடத்துக்கு நீடித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு என்பது இரு நிறுவனங்களுக்குமிடையிலான 5 வருட பங்காண்மையை குறிப்பதுடன், இலங்கையின் கிராமியமட்டத்தில் காணப்படும் இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
Foundation of Goodness (FoG) உடனான நீண்ட கால பங்காண்மையினூடாக கிரிக்கெட் பயிற்சி வசதிகள் நிறுவப்பட்டுள்ளதுடன், அதில் முறைசார் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடிய வகையில், ஹிக்கடுவ மற்றும் சீனிகம ஆகிய பகுதிகளில் இரு பாடசாலை மைதானங்களை மேம்படுத்தியிருந்தது. ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல எம்சிசி லோர்ட்ஸ் மற்றும் சீனிகம ஸ்ரீ விமல புத்தி சர்ரே ஓவல் ஆகிய இரு கிரிக்கெட் மைதானங்களும் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் மேற்பார்வையில், FoG இனால் நிர்விக்கப்படுவதுடன், இயக்கப்படுகின்றது. புகழ்பெற்ற பயிற்றுவிப்பாளர்களால் இரு உள்ளக மற்றும் வெளியக வலைப் பயிற்சிகள் இலவசமாக முன்னெடுக்கப்படுவதுடன், இப்பிரதேசங்களைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் வரவேற்கப்படுகின்றனர்.
Foundation of Goodness இன் ஸ்தாபகரும் பிரதம காப்பாளருமான குஷில் குணசேகரவின் நோக்கத்தின் பிரகாரம் நிறுவப்பட்ட இந்த மைதானங்கள், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் பங்காண்மையின் கீழ், பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்கும், தரமான பயிற்சி வசதிகளை அணுகி தமது கனவுகளை நனவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. Foundation of Goodness இன் விளையாட்டு பணிப்பாளர் அனுர டி சில்வா, கிரிக்கெட் அகடமிக்கு தலைமை தாங்குவதுடன், அவருடன் பயிற்றுவிப்பாளர்களும் தகைமை வாய்ந்த உடற் தகைமையாளர்களும் அடங்கியுள்ளனர். புகழ்பெற்ற கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரான இலங்கை தேசிய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான ஹேமந்த தேவப்பிரிய தமது கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களுடன் இணைந்து மாதாந்தம் பயிற்சிகளை முன்னெடுக்கின்றார். அவ்வப்போது இந்த அகடமிக்கு புகழ்பெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் நட்சத்திரங்களின் சேவைகளும் தன்னார்வ அடிப்படையில் கிடைக்கின்றது.
வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் பயிற்சி முகாம்களில் பங்கேற்றிருந்தவர்கள்
ஸ்தாபிக்கப்பட்டது முதல், இந்த அகடமியினால் பிராந்தியத்தின் சுமார் 20 பாடசாலைகளின் 1100 க்கும் அதிகமான இளம் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு உயர்மட்ட பயிற்சி முகாம்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன் போது, அவர்களுக்கு விசேட கண்காணிப்பின் கீழ் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டிருந்தன. 2017 ஆம் ஆண்டில் இந்த பங்காண்மை நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஒட்டிசுட்டான், மாங்குளம், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, கல்முனை மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன.
சதர்ன் கிரிக்கெட் பயிற்சி முகாமில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன
இந்த பங்காண்மை நீடிப்புடன், டோக்கியோ சீமெந்து குரூப் மற்றும் Foundation of Goodness ஆகியன தமது பயிற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்பதுடன், பாடசாலை மட்ட கிரிக்கெட் வீர, வீராங்கனைகளுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும் வாய்ப்புகளை வழங்கும். இந்த ஆண்டில் தென் பிராந்தியத்தில் 12 பயிற்சி முகாம்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அனுர மற்றும் FoG இன் பயிற்றுவிப்பாளர்கள் ஹேமந்த தேவப்பிரிய மற்றும் அவரின் பயிற்றுவிப்பாளர்களுடன் இணைந்து, டோக்கியோ சீமெந்து குழுமத்தின் மேற்பார்வையின் கீழ், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கி, கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவது இலக்காக அமைந்துள்ளது. Foundation of Goodness இனால் பரந்தளவு விருத்தி நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நகர மற்றும் கிராமிய இடைவெளியை நிவர்த்தி செய்யும் வகையில் இது அமைந்துள்ளது. இதனூடாக வருடாந்தம் சுமார் 31500 அனுகூலம் பெறுநர்கள் பயன் பெறுகின்றனர். எமது எதிர்கால தலைமுறையினருக்கு சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தி, சிறந்த தலைவர்களாக உருவாவதற்கு வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து செயலாற்றுகின்றன.
படம்:
டோக்கியோ சீமெந்து கம்பனி லங்கா பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம், Foundation of Goodness இன் ஸ்தாபகரும்ஃபிரதம காப்பாளருமான குஷில் குணசேகர உடன் கிரிக்கெட் பயிற்சி முகாம்களுக்கான பங்காண்மையை நீடிப்பு உடன்படிக்கையை பகிர்ந்து கொள்கின்றார்.