

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் 2023 விநியோகத்தர் மாநாட்டில், பத்து பிரிவுகளில் 162 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் சிறந்த செயற்பாட்டாளர்களாக யாழ்ப்பாணம் – சிட்டி ஹாட்வெயார் அன்ட் ஸ்டோர்ஸ், மட்டக்களப்பு – ஆஞ்சனேயர் சீமெந்து அன்ட் ஹாட்வெயார் டீலர், குருநாகல் – நஷனல் டிரேடிங் ஸ்டோர்ஸ், கிளிநொச்சி – சண்முகம் ஸ்டோர்ஸ் மற்றும் உடுப்பிட்டி- எமரல்ட் ஹாட்வெயார் போன்றன கௌரவிக்கப்பட்டிருந்தன. டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பில்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ். ஆர். ஞானம், குழும பிரதம செயற்பாட்டு அதிகாரி எம். தயானந்தன், பணிப்பாளர் ஆலோசகர் கிறிஸ்டோபர் பெர்னான்டோ, குழும சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் தஷந்த உடவத்த மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் பில்லி வல்பொல ஆகியோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு கோலாகலமாக இடம்பெற்றது. நாடு முழுவதையும் சேர்ந்த டோக்கியோ சீமெந்து விநியோகத்தர்கள் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றிணைத்து, முன்னைய ஆண்டில் அவர்களின் சிறந்த செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.


2022 ஆம் ஆண்டில் தளம்பல்களுடனான சந்தைச் சூழ்நிலைகள் காணப்பட்ட நிலையில், டோக்கியோ சீமெந்து விநியோகத்தர்களால் ஆற்றப்பட்டிருந்த பங்களிப்புகள் இந்த நிகழ்வில் வெளிக்கொணரப்பட்டிருந்தன. இக்காலப்பகுதியில் பெருமளவு வியாபாரத் தடங்கள் காணப்பட்ட போதிலும், டோக்கியோ சீமெந்தை, நாட்டின் முதல் தர சீமெந்து எனும் உயர்ந்த ஸ்தானத்தில் தொடர்ந்தும் பேணியிருந்தமைக்காக விற்பனை வலையமைப்பினால் ஆற்றப்பட்டிருந்த ஒப்பற்ற பங்களிப்பை, முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம் பாராட்டியிருந்தார். நாடு எதிர்நோக்கியிருந்த கடினமான பொருளாதார சூழ்நிலைகள் தொடர்பில் ஞானம் தெரிவிக்கையில், நிலைமையிலிருந்து மீண்டெழுவதற்கு, விற்பனை வலையமைப்புக்கு அவசியமான ஆதரவை வழங்குவதற்கான டோக்கியோ சீமெந்தின் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்தும் பங்களிப்பு வழங்கப்படும் என ஞானம் குறிப்பிட்டார்.


வர்த்தக நாளிகையைச் சேர்ந்தவர்களின் சிறந்த செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் டோக்கியோ சீமெந்து குழுமத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் பிரதான நிகழ்வாக வருடாந்த விநியோகத்தர் மாநாடு அமைந்துள்ளது. கடந்த நான்கு நான்கு தசாப்த காலமாக, நிறுவனத்துக்கும், அதன் பரந்த விற்பனை மற்றும் விநியோக வலையமைப்புக்குமிடையிலான நீண்ட கால பங்காண்மையை கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது. இலங்கையின் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றும் உள்நாட்டு நிறுவனம் எனும் வகையில், பெறுமதி சேர்ப்பதனூடாக தேசத்தின் பொருளாதாரத்தை வளமூட்டுவதில் வடோக்கியோ சீமெந்து குழுமம் முக்கிய பங்காற்றுகின்றது. இதில் நிறுவனத்தின் விநியோகத்தர் வலையமைப்பு முக்கிய பங்காற்றுகின்றது. விற்பனை வலையைமப்புடன், டோக்கியோ சீமெந்து குழுமம் அதன் பெருமைக்குரிய வர்த்தக நாமங்களான NIPPON CEMENT, TOKYO SUPER, NIPPON CEMENT PRO and ATLAS CEMENT, மற்றும் TOKYO SUPERMIX Ready Mixed Concrete ஆகியவற்றை சந்தையில் கட்டியெழுப்பியுள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக நிறுவனத்தின் புத்தாக்கமான தெரிவுகளில் TOKYO SUPERBOND, TOKYO SUPERSEAL மற்றும் TOKYO SEUPERCAST போன்றனவும் அடங்கியுள்ளன.
உயர் தரம் வாய்ந்த சீமெந்து, கொங்கிறீற் மற்றும் சீமெந்து அடிப்படையிலான புத்தாக்கமான தயாரிப்புகள் போன்றவற்றுக்கான கீர்த்தி நாமத்தை கட்டியெழுப்பியுள்ள டோக்கியோ சீமெந்து குழுமம், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னணி பங்காளர் எனும் தனது நிலையை மீளவும் உறுதி செய்துள்ளது.