டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் ‘Fountain of Life’ குடிநீர் வழங்கும் திட்டம் அனுராதபுர மாவட்டத்தின் வெஹெரகல மற்றும் தச்சிதாமன பகுதிகளை சென்றடைந்துள்ளது

டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் ‘Fountain of Life’ குடிநீர் வழங்கும் திட்டம் அனுராதபுர மாவட்டத்தின் வெஹெரகல மற்றும் தச்சிதாமன பகுதிகளை சென்றடைந்துள்ளது

அனுராதபுர மாவட்டத்தின் ரம்பேவ பிரதேச செயலகத்தைச் சேர்ந்த வெஹெரகல மற்றும் மதவாச்சியைச் சேர்ந்த தச்சிதாமன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு விவசாய குடும்பங்களுக்கு டோக்கியோ சீமெந்து குழுமத்தின் Fountain of Life திட்டத்தினூடாக தூய குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. வெஹெரகல பிரதேசத்தைச் சேர்ந்த 268 குடும்பங்களின் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் மற்றும் தச்சிதாமன பிரதேசத்தைச் சேர்ந்த 48 குடும்பங்களின் 200 க்கும் அதிகமானவர்கள் இந்தத் திட்டத்தினூடாக பயன் பெற்றுள்ளனர். கொடிய சிறுநீரக நோய் பரவல் அதிகளவு காணப்படும் இந்தப் பகுதியில் இவர்கள் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த நிலையில், இந்தத் திட்டத்தினூடாக இவர்களுக்கு தூய குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரு கிராமங்களிலும், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவரேனும் கொடிய சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுர மாவட்டத்தில் விவசாய செய்கையை தமது ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளனர். Fountain of Life நிறுவப்பட்டுள்ளதனூடாக நாளொன்றில் தலா 5000 லீற்றர் மற்றும் 1500 லீற்றர் நீரை தூய்மைப்படுத்தும் திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக இப்பிரதேசங்களின் மக்களுக்கு தற்போது தூய குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியும். மொத்தமாக நாளொன்றுக்கு 46,500 லீற்றர்கள் வரை தூய்மைப்படுத்திய குடிநீரை விநியோகிக்கும் வசதியைக் கொண்டுள்ள டோக்கியோ சீமெந்தின் ‘Fountain of Life’ திட்டத்தினூடாக இதுவரையில் பல்லன்குளம், தச்சிதாமன, நாவற்குளம் மற்றும் சியம்பலாகஸ்வெவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 4500 குடும்பங்களை சென்றடைந்துள்ளது. அனுராதபுரம் மற்றும் கிளிநொச்சியில் வெராவில், வலைப்பாடு மற்றும் வீரபாண்டியமுனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கொடிய சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது. ரம்பேவ மற்றும் மதவாச்சி பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள இரு திட்டங்களை டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் குழும சந்தைப்படுத்தல் முகாமையாளர் தஷாந்த உடவத்த அங்குரார்ப்பணம் செய்தார். இவருடன், வவுனியா பிராந்தியத்துக்கான டோக்கியோ சீமெந்து விநியோகத்தர் சண்முகன் ஸ்டோர்ஸின் எஸ். ஆனந்தராஜ் மற்றும் அனுராதபுர பிராந்தியத்துக்கான டோக்கியோ சீமெந்து விநியோகத்தர் நோர்த் ஏஜென்சீஸ் ரி. மஹாதேவன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த கிராமிய விவசாய குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் இந்தத் திட்டம் ஆற்றும் பங்களிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், தச்சிதாமன பிரதேசத்தில் நிறுவப்பட்ட சுத்திகரிப்பு ஆலையை திறந்து வைக்கும் நிகழ்வில் மதவாச்சி பிரதேச செயலாளர் திருமதி. சந்திரிகா மாலவிஆரச்சி பங்கேற்றிருந்தார். வடமத்திய மாகாண சபையின் கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முழு ஆதரவு வழங்கப்பட்டிருந்தது. இதற்கு ஒவ்வொரு கிராமங்களையும் சேர்ந்த கிராமிய அபிவிருத்திச் சங்கத்தினதும் ஆதரவு கிடைத்திருந்ததுடன், இந்தத் திட்டத்தை தமது சமூகத்தார் சார்பில் வரவேற்றிருந்தன. விவசாய சமூக குழுக்களின் தன்னார்வ அடிப்படையிலான ஆதரவும் கிடைத்திருந்ததுடன், பல தலைமுறையினரின் அனுகூலத்துக்காக நீர் வசதியை நிலைபேறான வகையில் பேண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் உறுதி செய்கின்றது. கொடிய சிறுநீரக நோய் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு தூய குடி நீர் வசதி ஏற்படுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து டோக்கியோ சீமெந்து குழுமத்தினால், Fountain of Life நிகழ்ச்சியினூடாக நீர் தூய்மையாக்கும் திட்டங்களை நிறுவும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனூடாக PureHydro® நீர் தீர்வுகள் Reverse Osmosis (RO) ஆற்றலுடன் நிறுவப்படுகின்றன. தனது சகோதர நிறுவனமான சென். அந்தனீஸ் ஹைட்ரோ பிரிவின் தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்று இந்தப் பணிகளை மேற்கொள்கின்றது. எதிர்வரும் மாதங்களில் நாடு முழுவதிலும் பின்தங்கிய கிராமங்களில் இந்தத் திட்டத்தை தொடர்ந்தும் விஸ்தரிக்கும் பணிகளை நிறுவனம் தொடர்ந்தும் மேற்கொள்ளும். டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் இது போன்ற பல சமூக வலுவூட்டும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றினூடாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் தூர நோக்கின் அடிப்படையிலான நேர்த்தியான தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேசத்தை கட்டியெழுப்புவதில் முன்னணி பங்காளராக திகழும் நிறுவனத்தின் கருப்பொருளுக்கமைய, இது போன்ற சமூக நலன்புரி மற்றும் சூழல் பாதுகாப்பு திட்டங்களை முன்னெடுப்பதில் டோக்கியோ சீமெந்து குழுமம் தொடர்ச்சியாக தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வருகின்றது.