கட்டமைப்பு பொறியியலாளர்கள் சங்கத்தின் ‘கேள்வி நேரம்’ கருத்தரங்குகளின் பிரதான அனுசரணையாளராக டோக்கியோ சீமெந்து கைகோர்ப்பு

கட்டமைப்பு பொறியியலாளர்கள் சங்கத்தின் ‘கேள்வி நேரம்’ கருத்தரங்குகளின் பிரதான அனுசரணையாளராக டோக்கியோ சீமெந்து கைகோர்ப்பு

இலங்கை கட்டமைப்பு பொறியியலாளர்கள் சங்கத்தினால் மாதாந்தம் ஏற்பாடு செய்யப்படும் கருத்தரங்கு நிகழ்வாக ‘கேள்வி நேரம்’ அமைந்துள்ளது. இதன் போது சங்கத்தின் நிபுணர்கள் மற்றும் மாணவ நிலையிலுள்ள அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து பொறியியல் மற்றும் நிர்மாணத்துறையில் காணப்படும் புதிய தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாடுவார்கள். இந்த கேள்வி நேரம் கருத்தரங்குத் தொடரின் பிரதான அனுசரணையாளராக டோக்கியோ சீமெந்து குழுமம் 2018 ஆம் ஆண்டு கைகோர்த்திருந்தது. இந்த நிபுணத்துவ பங்காண்மையின் ஒரு அங்கமாக, சம காலத்தில் காணப்படும் நிர்மாணத் துறைசார்ந்த பிந்திய அபிவிருத்தி அம்சங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக துறைசார்ந்த நிபுணர்களை டோக்கியோ சீமெந்து அழைத்திருந்தது.

டோக்கியோ சீமெந்தின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது கருத்தரங்கு, ஜுலை மாதம் இடம்பெற்றது. டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து கம்பனியின் தர உறுதிப்படுத்தல் முகாமையாளர் பொறியியலாளர் ஜி. பாலமுருகனின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. இதன் போது நவீன நிர்மாண செயற்பாடுகளின் போது சாம்பல் சேர்க்கப்பட்ட அரைத்த ஹைட்ரோலிக் சீமெந்தின் பாவனையின் பிரதான அனுகூலங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டிருந்தது. உருக்கிரும்பு கம்பிகளை இரசாயன தாக்கங்களிலிருந்து பாதுகாத்திடும் வகையில் உறுதியான மற்றும் நீடித்த கொங்கிறீற் கட்டமைப்புகளின் நிர்மாணத்துக்கு பயன்படுத்தப்படும் சாம்பல் சேர்க்கப்பட்ட அரைத்த சீமெந்தின் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி இவர் விளக்கமளித்திருந்தார். சுண்ணாம்புக்கல் சீமெந்துடன் ஒப்பிடுகையில், சாம்பல் கலந்த ஹைட்ரோலிக் சீமெந்தின் அனுகூலங்கள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றி பங்குபற்றுநர்கள் அறிந்து கொண்டனர்.



டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து கம்பனியின் தர உறுதிப்படுத்தல் முகாமையாளர் பொறியியலாளர் ஜி.பாலமுருகன், ஜுலை மாத கேள்வி நேரம் கருத்தரங்கின் போது அரைத்த ஹைட்ரோலிக் சீமெந்து தொடர்பான விளக்கங்களை வழங்குகிறார்.

செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற கருத்தரங்கின் போது உற்பத்தி செய்யப்படும் மண் பற்றி கலந்துரையாடப்பட்டிருந்தது. ஆற்று மணலுடன் ஒப்பிடுகையில், உற்பத்தி செய்யப்படும் மணல் ஏன் மிகவும் சகாயமானது மற்றும் சூழலுக்கு நட்பானது என்பது பற்றி இதன் போது பேசப்பட்டிருந்தது. இந்த கருத்தரங்கை தயாரிப்பு பரிசோதனை மற்றும் நிர்மாண ஆய்வு நிலையத்தின் முகாமையாளர் ஜனித் கவிராஜ் முன்னெடுத்திருந்தார். இந்த கேள்வி நேர நிகழ்வின் போது, உற்பத்தி செய்யப்படும் மணலை பயன்படுத்தி கொங்கிறீற் தயாரிப்பதில் காணப்படும் விசேட அம்சங்கள் பற்றி பேசப்பட்டிருந்தது. இன்றைய கால கட்டத்தில் நிர்மாணத்துறையில் பரந்தளவில் பேசப்படும் விடயமாக இது அமைந்துள்ளது.



தயாரிப்பு பரிசோதனை மற்றும் நிர்மாண ஆய்வு நிலையத்தின் முகாமையாளர் ஜனித் கவிராஜ், உற்பத்தி செய்யப்பட்ட மணல் தொடர்பான விளக்கங்களை செப்டெம்பர் மாத கேள்வி நேரம் கருத்தரங்கின் போது வழங்குகிறார்.

ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற கேள்வி நேரம் கருத்தரங்களை யசஸ் விக்ரமகே முன்னெடுத்திருந்தார். இதன் போது, உலர் சாந்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உடனடியாக பயன்படுத்தக்கூடிய நிர்மாண பொருட்களை பயன்படுத்துவதன் அனுகூலம் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தது. இந்த அமர்வின் போது சகல உலர் சாந்து கலவை தீர்வுகளான மேசன்மாருக்கான சாந்து, சுவர் மேற்பூச்சுகள், டைல் ஒட்டும் பசைகள், மட்டப்பலகை சாந்து, நீர் கசிவை தடுப்பான்கள், சுயமாக சீராகும் நில பூச்சுகள் பற்றி பேசப்பட்டிருந்தன. இவற்றின் பிரதான அனுகூலங்கள் மற்றும் துறையின் பிரதான பயன்படுத்துநர்களின் மதுநுட்பமான தெரிவாக அமைந்திருப்பதற்குரிய காரணங்கள் பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டிருந்தன. சீமெந்து அடிப்படையிலான உலர் சாந்து தயாரிப்புகள் பற்றிய விளக்கங்களுடன் இடம்பெற்ற இந்த கருத்தரங்கு, பங்குபற்றுநர்களின் ஆர்வத்துடனான பங்கேற்புடன் இடம்பெற்றதுடன், நிர்மாணத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த நவீன தயாரிப்புகளின் சூழல்சார் மற்றும் பொருளாதார சார் அனுகூலங்கள் அனுகூலங்கள் பற்றிய விளக்கங்களையும் கொண்டிருந்தன.

மூன்று அமர்வுகளுக்கும் பங்குபற்றுநர்களின் பெருமளவான வரவேற்பு கிடைத்திருந்தது. குறிப்பாக இலங்கை கட்டமைப்பு பொறியியலாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர்கள் அதிகளவில் கலந்து கொண்டதுடன், ஒவ்வொரு தலைப்புகள் தொடர்பிலும் ஆர்வத்தை செலுத்தியிருந்தனர். அங்கத்தவர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை கட்டமைப்பு பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திறன் கட்டியெழுப்பல் நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த கருத்தரங்குத் தொடரை குறிப்பிட முடியும். பொறியியல் துறையில் காணப்படும் புதிய சிந்தனைகளை பகிர்ந்து கொள்வதற்கு சிறந்த சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

கேள்வி நேரம் அமர்வுகளுக்கு மேலதிகமாக, 2018 ஆகஸ்ட் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்டமைப்பு பொறியியலாளர்கள் சங்கத்தின் வருடாந்த அமர்வுகளின் ஏக அனுசரணையாளராகவும் டோக்கியோ சீமெந்து குழுமம் திகழ்ந்தது. இலங்கை கட்டமைப்பு பொறியியலாளர்கள் சங்கத்துடன் நீண்ட காலமாக பேணி வரும் கூட்டாண்மை பங்காண்மையை மேலும் வலிமைப்படுத்துவது தொடர்பில் டோக்கியோ சீமெந்து பெருமை கொள்வதுடன், இந்த பிரதான நிகழ்வுகளின் பிரதம அனுசரணையாளராகவும் காணப்படுகின்றது. படங்கள்: ஒக்டோபர் மாத கேள்வி நேரம் கருத்தரங்கின் போது தயாரிப்பு அபிவிருத்தி முகாமையாளர் யசஸ் விக்ரமகே, உடனடியாக பயன்படுத்தக்கூடிய நிர்மாண தயாரிப்புகள் பற்றிய விளக்கங்களை வழங்குகிறார்.