சீமெந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு டோக்கியோ சீமெந்து கம்பனியின் விநியோகப் பணிகள் துரிதப்படுத்தல்

சீமெந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு டோக்கியோ சீமெந்து கம்பனியின் விநியோகப் பணிகள் துரிதப்படுத்தல்

சந்தையில் நிலவும் சீமெந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நிறுவனத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷா கப்ரால் பிசி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருகோணமலையிலுள்ள தனது சீமெந்து உற்பத்தி ஆலையை அதன் உச்ச கொள்ளளவுத் திறனில் இயக்குவதாக அவர் தெரிவித்ததுடன், மாதமொன்றுக்கு 170,000 மெட்ரிக் டொன்கள் எடை சீமெந்தை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. நாடு முழுவதிலும் துரித கதியில் சீமெந்து விநியோகத்தை நிறுவனம் மேற்கொள்ளும் என அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு உற்பத்தி உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதுடன், 30,000 மெட்ரிக் டொன் மொத்த சீமெந்தை மாதாந்தம் இறக்குமதி செய்யும் பணிகளை நிறுவனம் தனது டோக்கியோ சீமெந்து கொழும்பு டேர்மினல் ஊடாக மேற்கொள்கின்றது. அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம், மேலும் மாதாந்தம் 12,000 மெட்ரிக் டொன் சீமெந்தை இறக்குமதி செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



நாட்டின் மாபெரும் சீமெந்து உற்பத்தியாளர் எனும் வகையில், நாடு முழுவதிலும் காணப்படும் வாடிக்கையாளர்களின் சீமெந்து தேவையை நிவர்த்தி செய்வதற்கு தனது தேசிய கடமையை எப்போதும் நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதாக அந்த அறிக்கையில் கலாநிதி. கப்ரால் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பல்வேறு காரணங்களால் சந்தையில் சீமெந்து தட்டுப்பாடு எழுந்துள்ளதாகவும், இது நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மொத்த சரக்குக் கப்பல்கள் காணப்படாமை முதல் காரணியாக அமைந்துள்ளது. இரண்டாவதாக, இதுவரை காலமும் ஒரே நாளில் கடன்பத்திரங்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அவற்றை விநியோகிப்பதற்கு சில வாரங்கள் தேவைப்பட்டுள்ள நிலையில், தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் சந்தையில் தற்போதைய சீமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

திருகோணமலையிலுள்ள தனது உற்பத்தி ஆலையை நிறுவனம் தற்போது விரிவாக்கம் செய்துள்ளதுடன், அதனூடாக மேலும் 1 மில்லியன் மெட்ரிக் டொன் எடை கொண்ட சீமெந்தை உற்பத்தி செய்வதற்காக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. எதிர்காலத்தில் உள்நாட்டு நிர்மாணத் துறையில் எழும் கேள்வியை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் தயார்நிலை உறுதி செய்யப்படும். என்பதுடன், இலங்கையில் முன்னணி சீமெந்து உற்பத்தியாளர் மற்றும் விநியோகத்தர் எனும் நிலையை பேணவும் உதவியாக அமைந்திருக்கும்.