குருநாகல் குணானந்த மகா வித்தியாலயம் மற்றும் முல்லைத்தீவு பாளிநகர் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்கள் வாரத்தின் இரு நாட்கள், தமது பாடசாலைகளில் மாற்றியமைக்கப்படும் இசை அறைகளில் இசைக் கருவிகள் மற்றும் பாடசாலை இசைக் கருவிகளை இசைக்கும் பயிற்சிகளை பெறுகின்றனர்.
முன்னர், தமது பாடசாலைகளில் இசை கல்வியை தொடர வசதியை கொண்டிருக்காத இந்த மாணவர்கள், தற்போது பாரம்பரிய இசையை இந்த அறைகளிலிருந்து தற்போது பயில்கின்றனர். இதற்கான வசதியை The Music Project ஏற்படுத்தியிருந்தது.
குருநாகல் குணானந்த மகா வித்தியாலயம் மற்றும் முல்லைத்தீவு பாளிநகர் மகா வித்தியாலயம் ஆகியன கடந்த மூன்று வருட காலமாக ‘The Music Project’ திட்டத்தின் கீழ் இசை பயிற்சிகளை பெற்றுக் கொள்வதற்கு டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அனுசரணையை பெற்றிருந்தது. போதியளவு வசதிகளற்ற, பிள்ளைகளுக்கு இசையை கற்றுக் கொடுப்பதற்கு குறைந்தளவு வசதியைக் கொண்ட, கல்வி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்தங்கிய பாடசாலைகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
>
மாவத்தகம, ஸ்ரீ குணானந்த கனிஷ்ட வித்தியாலயத்தின் மேலேத்தேய இசை அணி, The Music Project ஆசிரியருடன் காணப்படுகின்றது.
மூன்று பாடசாலைகளில் 200க்கும் அதிகமான மாணவர்களின் இசைத்திறன் விருத்தியை ஏற்படுத்துவதற்கு இரண்டு வருட கால அனுசரணையை வழங்க டோக்கியோ சீமெந்து குழுமம் முன்வந்திருந்தது. தன்னார்வ ஆசிரியர்களை பயன்படுத்தி, அவர்களினூடாக இசை அமர்வுகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த திட்டத்தினூடாக, போட்டிகரத்தன்மையற்ற வகையில் கல்வி வாய்ப்புகள் பெற்றுக் கொடுக்கப்பட்டதுடன், பெறுமதி வாய்ந்த சமூகத்தின் அங்கத்தவர்களாக கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்டிருந்தது.
இதுவரையில் Music Project ஊடாக ஏழு பாடசாலைகள் இந்த திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 500க்கும் அதிகமான மாணவர்கள் இசை பயிலலில் ஈடுபட்டனர். வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்த திட்டம் பெருமளவு முன்னெடுக்கப்படுவதுடன், 80 க்கும் அதிகமான பாடசாலை ஆசிரியர்களை ஈடுபடுத்தி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் காலி ஆகிய மாவட்ட பாடசாலைகளின் 3000க்கும் அதிகமான மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளது.
முல்லைத்தீவு, பாளிநகர் மகா வித்தியாலய மார்ச் அணியினர், பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகளுக்கு பிரதம அதிதிகளை வரவேற்கின்றனர்.
பெருமளவான பிள்ளைகள் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக அமைந்திருப்பதுடன், இந்த திட்டத்தினூடாக, சிறந்த முறையில் இசையை பயின்று, மாற்று தொழில்நிலைகள் மற்றும் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும். The Music Project என்பது இலவசமாக பயிற்சிகளை வழங்குவது மாத்திரமன்றி, சாதனங்களை பெற்றுக் கொடுக்கின்றது. அத்துடன், ஊக்குவிப்பு, நம்பிக்கை ஊட்டல் மற்றும் சுய ஆளுமையை மேம்படுத்தல் போன்றவற்றையும் மேற்கொள்கின்றது.
முல்லைத்தீவு, மல்லாவி, பாளிநகர் மகா வித்தியாலயத்தில் பயிலும் பிள்ளையின் தந்தையான கதிர்காமநாதன் கருத்துத் தெரிவிக்கையில், ‘எனது பிள்ளை இசை மீது கொண்டுள்ள ஈடுபாட்டை இந்த திட்டம் முழுமையாக மாற்றியமைத்திருந்தது. பாடசாலையில் போதியளவு வசதி காணப்படவில்லை, ஆசிரியரும் காணப்படவில்லை. ஆனாலும், இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், அவர்களுக்கு தற்போது சாதனங்கள் காணப்படுகின்றன. இசையில் அதிகளவு ஈடுபாட்டை எனது பிள்ளை காண்பிக்கின்றது. இந்த திட்டத்தை முன்னெடுக்க காரணமாக அமைந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.’ என்றார்.
குருநாகல் குணானந்த மகா வித்தியாலயத்தில் பயிலும் பிள்ளையின் தாயாரான வத்சலா தெரிவிக்கையில், ‘எனது மகள் வயலின் வாசிக்க பழகி வருகின்றாள். அவளின் முன்னேற்றத்தை காண்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த Music Project இல்லாவிடின், அவளால் முன்னேறியிருக்க முடியாது. கற்றுக் கொண்டு, அனுகூலம் பெற சிறந்த வாய்ப்பாகும். எமது பிள்ளைகளுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அமைந்திருக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.’ என்றார்.
இசை கல்வியை போதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் Music Project இன் நடவடிக்கை வெற்றிகரமாக தொடர்வதற்கு Yamaha Project, JICA, UNICEF மற்றும் Plan International போன்றன தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றன. நீண்ட கால அடிப்படையில் வதிவிட இசை ஆசிரியர்களுக்கு உதவுதல் மற்றும் இசை உபகரணங்களை அன்பளிப்பு செய்தல் மற்றும் விசேட பயிற்சிப்பட்டறைகளை முன்னெடுத்தல் இசை திறமைகளை வெளிப்படுத்தல் போன்றவற்றை முன்னெடுக்கின்றது.