சுற்றாடல் அமைச்சு மன்னம்பிட்டியவில் டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் இணைந்து ‘Ivura Rakina Pawura’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது
டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் இணைந்து, மன்னம்பிட்டிய மஹாவலி கங்கைக் கரையில் ‘Ivura Rakina Pawura’ எனும் திட்டத்தை சுற்றாடல் அமைச்சு அறிமுகம் செய்துள்ளது. சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தத் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்ததுடன், இதில் சில முக்கிய அரசாங்க அதிகாரிகளும், டோக்கியோ சீமெந்து குழுமத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.
மஹாவலி கங்கைக் கரையோரத்தின் 335 கிலோமீற்றர் தூரப் பகுதியில் கும்புக் மற்றும் மீ கன்றுகளை பயிரிடும் நடவடிக்கைகளை டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு முகாமையாளர் சாலிந்த கந்தபொல மற்றும் பொலன்நறுவை மத்தும டிஸ்ட்ரிபியுட்டர்ஸ் நிறுவனத்தின் ஏ.ஜி. மத்தும பண்டார ஆகியோர் இணைந்து, அங்குரார்ப்பண தாவரக் கன்று பயிர்ச் செய்கை நிகழ்வின் போது கும்புக் மரக் கன்றுகளை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளித்திருந்தனர். பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் அமைச்சரும் மரக் கன்றுகளை விநியோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மஹாவலி கங்கையின் உணர்திறன் மிக்க நீரேந்து பகுதிகளின் நிலைபேறான முகாமைத்துவத்துக்கு இவர்கள் உதவிகளை வழங்குவார்கள்.
சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, டோக்கியோ சீமெந்து குழுமத்தின் கூட்டாண்மை நிலைபேறாண்மை முகாமையாளர் சாலிந்த கந்தபொல மற்றும் பொலன்நறுவை மத்தும டிஸ்ட்ரிபியுட்டர்ஸ் நிறுவனத்தின் ஏ.ஜி. மத்தும பண்டார ஆகியோருடன் இணைந்து Ivura Rakina Pawura அங்குரார்ப்பண நிகழ்வில் காணப்படுகின்றனர்.
சுற்றாடல் அமைச்சின் Ivura Rakina Pawura எனும் மாபெரும் செயற்திட்டமானது, தேசிய மர நடுகைத் திட்டமான ‘Husma Dena Thuru’ என்பதன் இரண்டாம் கட்டமாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தினூடாக 2 மில்லியன் மரக் கன்றுகளை பயிரிட்டுவது, நாட்டின் இயற்கையான வனாந்தரப் பகுதியை உள்வாங்குவது இலக்காக அமைந்துள்ளது. டோக்கியோ சீமெந்துக் குழுமம் தமது வனாந்தர மர நடுகை நிகழ்ச்சித் திட்டத்தின் அங்கமாக இந்த நடவடிக்கைக்கு அனுசரணை வழங்க முன்வந்திருந்தது. கும்புக், கரந்த, மீ மற்றும் இங்கினி போன்ற மருத்துவ குணங்கள் மிக்க வனாந்தர மரங்களை நடுவதைக் குறிப்பதாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது. திருகோணமலை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் இரு வனாந்தர மரக் கன்றுகள் வளர்ப்பகங்களிலிருந்து இந்த மரக் கன்றுகள் விநியோகிக்கப்படுகின்றன. அந்த வகையில், 3ஆண்டு திட்டத்துக்கு அனுசரணை வழங்குகின்றமைக்கு மேலாக, டோக்கியோ சீமெந்து வனாந்தர மரக் கன்றுகள் வளர்ப்பகங்களினூடாக Ivura Rakina Pawura திட்டத்துக்கும் அவசியமான கும்புக் மற்றும் மீ மரக் கன்றுகளை விநியோகிக்கும்.
சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, பொலன்நறுவை பிரதேசத்தைச் சேர்ந்த சமூகப் பிரதிநிதிகள் சிலர் மத்தியில் கும்புக் மரக் கன்றுகள் சிலதை விநியோகிப்பதை காணலாம்.
டோக்கியோ சீமெந்து குழுமம் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ள நிலைபேறாண்மையுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் தேசிய மீள் வனாந்தரச் செய்கைக்காக வனாந்தர மரக் கன்றுகளை நாட்டும் பணிகளும் அடங்குகின்றன. நிறுவனம் பவளப் பாறைகள் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் கண்டல் காடுகள் செய்கையையும் நிறுவனம் மேற்கொள்கின்றது. சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு என்பது, இவ்வாறான நடவடிக்கைகளினூடாக மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சமூக நலன்புரி மற்றும் சூழல் பாதுகாப்பு போன்ற பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கும், தமது கூட்டாண்மை வர்த்தக நாமத்திலும், நாட்டுக்கும், மக்களுக்கும் மற்றும் சூழலுக்கும் தொடர்ச்சியாக வலுவூட்டுவதற்கும் உதவியாக அமைந்துள்ளது.
படங்கள்:
Ivura Rakina Pawura அங்குரார்ப்பண நிகழ்வில் சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர முதலாவது கும்புக் மரத்தை நாட்டுவதை காணலாம்.