உலகத்தரம் வாய்ந்த அறிவு பகிர்வு அமர்வுக்கு டோக்கியோ சீமெந்து அனுசரணை
இலங்கை கட்டமைப்பு பொறியியலாளர்கள் சம்மேளனம் (SSE-SL)> 2018 ஆம் ஆண்டுக்கான தனது வருடாந்த அமர்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வுக்கு டோக்கியோ சீமெந்து குழுமம் அனுசரணை வழங்கியிருந்ததுடன், கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஆகஸ்ட் 14ஆம் திகதி இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதான ஆய்வு கண்டறிதல்களை பகிர்ந்து கொள்ளல் மற்றும் அறிவு பகிர்வு ஆகியவற்றை மேற்கொள்ளக்கூடிய கட்டமைப்பாக வருடாந்த அமர்வு அமைந்துள்ளது. புத்தாக்கம் மற்றும் கட்டமைப்பு பொறியியலை ஊக்குவிக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்படுகிறது. நிர்மாண சமூகத்தைச் சேர்ந்த சிவில் பொறியியலாளர்கள், செயற்திட்ட முகாமையாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் உள்நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் என 150க்கும் அதிகமான பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டின் நிகழ்வின் ஏக அனுசரணையாளராக கைகோர்த்திருந்த டோக்கியோ சீமெந்து குழுமம், கொங்கிறீற் தொடர்பில் புகழ்பெற்ற ஆய்வாளராக திகழும் ஜப்பானின், சயிடமா பல்கலைக்கழகத்தின் சிவில் மற்றும் சூழல் பொறியியல் திணைக்களத்தின் இணை பேராசிரியர் கலாநிதி. ஷிங்கோ அசமொடோ அவர்களை நிகழ்வின் பிரதான பேச்சாளராக அழைத்து வந்திருந்தது. இலங்கையின் பொறியியல் கல்விமான்களுடன் நெருக்கமான உறவை பேணி வருவதுடன், ‘வெப்பமான காலநிலையில் காணப்படும் கொங்கிறீற் சிக்கல்கள் மற்றும் தாதுப்பொருட்கள் சேர்மானங்களின் பிரயோகம்’ என்பது தொடர்பில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அனுர நானயக்கார அவர்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்த ஆய்வின் வெளிப்பாடுகளை நிகழ்வில் பகிர்ந்திருந்தார். ஜப்பான் விஞ்ஞான ஊக்குவிப்பு சங்கம் (JSPS) மற்றும் மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் ருஹுண பல்கலைக்கழகம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் ஆய்வு திட்டத்தின் அங்கமாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.
இலங்கை கட்டமைப்பு பொறியியலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் கே.எல்.எஸ். சஹாபந்து, டோக்கியோ சீமெந்து குழுமத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் கலாநிதி. எம்.ஜி.எம்.யு. இஸ்மைல் உடன் காணப்படுகிறார்.
டோக்கியோ சீமெந்து கம்பனியின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் கலாநிதி. எம்.ஜி.எம்.யு. இஸ்மைல், டோக்கியோ சீமெந்தின் புத்தாக்க பிரிவின் பிரதான செயற்பாட்டாளராக அமைந்துள்ளதுடன், SSE-SL ஒன்றிணைவை விஸ்தரித்து, மூலோபாய துறைசார் பங்காண்மையாக மாற்றியமைப்பதில் முக்கிய பங்கை வகித்து வருகிறார். ஜப்பானுடன் கைகோர்த்து உலகத்தரம் வாய்ந்த அறிவை உள்நாட்டின் நிர்மாணத்துறையின் நிபுணர்களுக்கு பெற்றுக் கொடுப்பதையிட்டு டோக்கியோ சீமெந்து குழுமம் பெருமிதம் கொள்கிறது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் திணைக்களத்தின் முன்னாள் தலைவர் பொறியியலாளர். கலாநிதி. நிஹால் சோமரட்ன A அமர்வில் உரை நிகழ்த்துகிறார்.
இந்த ஆண்டு இடம்பெற்ற அமர்வின் போது கட்டமைப்பு பொறியியல் துறையைச் சேர்ந்த முன்னணி நிபுணர்கள் மற்றும் கல்விமான்களினால் பதினொரு மூலோபாய கடதாசிகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இந்த ஆய்வு அடிப்படையிலான புத்தாக்கங்களினூடாக, எமது நிர்மாணத்துறைக்கு முக்கிய பங்களிப்பு வழங்கப்படும் என்பதுடன், தேசிய அபிவிருத்திக்கும் பங்களிப்பை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். அமர்வுகளில் சிவில் பொறியியல் திணைக்களத்தின் முன்னாள் தலைமை அதிகாரி பொறியியலாளர் கலாநிதி. நிஹால் சோமரட்ன, பேராதனை பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியியல் திணைக்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பொறியியாளர் கலாநிதி. உதய திசாநாயக்க, டோக்கியோ சுப்பர்மிக்ஸ் பிரைவட் லிமிட்டெட் பொது முகாமையாளர் பொறியியலாளர் ஜனக பெரேரா ஆகியோர் இணைந்து, டோக்கியோ சுப்பர்மிக்ஸ் பயன்படுத்துவதன் அனுகூலம் பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்தனர். இலங்கையில் ரெடி-மிக்ஸ் கொங்கிறீற் விநியோகத்தில் பாரிய விநியோகத்தராகவும், நாடு முழுவதிலும் 11 பொதியியல் ஆலைகளையும் கொண்டுள்ளது.
SSE-SL என்பது, நிர்மாணத்துறையின் கட்டமைப்பு பொறியியலாளர்கள் மற்றும் இதர நிபுணர்கள் மத்தியில் புத்தாக்கமான கொள்கைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான அறிவை மேம்படுத்துவதில் தன்னை அர்ப்பணித்துள்ள நிபுணத்துவ அமைப்பாக திகழ்கிறது. சம்மேளனத்தின் அங்கத்தவர்கள், பாரிய அபிவிருத்தி செயற்திட்டங்களில் ஆலோசகர்களாக ஈடுபட்டுள்ளதுடன், தொழிற்துறையின் கொள்கை வடிவமைப்பில் பெருமளவு பங்களிப்பை வழங்கி வழங்கி வருகின்றனர். நிபுணத்துவ அபிவிருத்தியில் இந்த சம்மேளனம் முக்கிய பங்கை வகிப்பதுடன், இலங்கை மற்றும் சர்வதேச நிபுணர்களுடன் நிர்மாணத்துடன் தொடர்புடைய அறிவை பகிர்ந்து கொள்வதற்கு பொருத்தமான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.