யாழ்ப்பாணத்தை சூழ காணப்படும் சுறா மற்றும் திருக்கை மீன்களின் இக்கட்டான வாழிடங்களை மதிப்பிடுவது

யாழ்ப்பாணத்தை சூழ காணப்படும் சுறா மற்றும் திருக்கை மீன்களின் இக்கட்டான வாழிடங்களை மதிப்பிடுவது

ஆக்கம் டேனியல் பெர்னான்டோ மற்றும் கோபிராஜ் ராமஜெயம்



சுறா மற்றும் திருக்கைமீன்கள் (அடுக்கச் செவுள் மீன்கள்) குருத்தெலும்பைக் கொண்ட விசேடமான மீன் வகைகளாகும். கடல் உணவுச் சங்கிலியில் அவை முக்கிய அங்கம் வகிப்பதுடன், பல உயர் வெப்ப மட்டத்தில் காணப்படுவதுடன், இயற்கை சமநிலையை பேண உதவுகின்றன. மீன்பிடி, நீண்ட ஆயுள் காலம், குறைந்த விருத்தி வீதம், காலம் தாழ்ந்த முதிர்வு மற்றும் குறைந்த இனப்பெருக்க வாய்ப்பு போன்ற வெளியக அழுத்தங்களால் பெரும்பாலான அடுக்கச் செவுள் மீன்கள் அதிகளவு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளன.

துரதிர்ஷ்டவசமாக, அளவுக்கதிகமாக மீன்பிடித்தல் மற்றும் இதர மனித செயற்பாடுகளால் மாசடையச் செய்யும் செயற்பாடுகள் (பவளப்பாறைகள் மற்றும் கண்டல்பகுதிகள் போன்ற அவற்றின் வாழிடப்பகுதிகளை அழிவடையச் செய்வது) போன்றன உலகளாவிய ரீதியில் சுறாக்கள் மற்றும் திருக்கை மீன்களின் வாழிடப்பகுதிகளை அபாயாத்துக்குட்படுத்தியுள்ளன. அவற்றின் செதில்கள், இறைச்சி, செவுள்கள், லிவர் எண்ணெய் மற்றும் இதர சார்புப் பொருட்கள் போன்றவற்றுக்காக இவை பெருமளவில் இலக்கு வைக்கப்பட்டு மற்றும் எழுமாற்றாகவும் பிடிக்கப்படுகின்றன. பெருமளவான மீன்பிடி செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்படாதவையாகவும், முறையற்ற வகையிலும் இடம்பெறுகின்றன. உயிரினங்கள் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளமையால், சூழல்கட்டமைப்பு சமச்சீர் பரம்பலுக்கு அவற்றின் பிரசன்னம் முக்கியமானதாக அமைந்துள்ளது. ஏதேனும் ஒரு வகை உயிரினத்தை அகற்றுவதன் காரணமாக, குறிப்பாக சுறா போன்ற உயிரனத்தை அகற்றுவதால், சூழல் கட்டமைப்பிலும் அதனைச் சார்ந்த உயிரினங்களிலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.



அண்மைக்காலமாக உலகளாவிய ரீதியில் சுறாக்கள் மற்றும் திருக்கை மீன்கள் அதிகளவு பாதுகாப்பு கவனத்தை ஈர்த்திருந்தன. எவ்வாறாயினும், மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. அவற்றை வினைத்திறனான முறையில் பாதுகாப்பதற்காக, அவற்றின் வரலாறு, தொகை நிலை, மற்றும் பிரசன்னங்களை மற்றும் நகர்வுகள் தொடர்பிலும், கடல்சார் சூழல்கட்டமைப்புகளில் அவற்றின் பங்கு தொடர்பிலும் ஆராயப்பட வேண்டியுள்ளது. இந்தத் தகவல்களுடன் எம்மால், இவற்றின் பரம்பல் வீழ்ச்சியடைவதை தடுப்பது தொடர்பிலும், அவற்றை மீட்சியடையச் செய்யவும் அவசியமான விஞ்ஞான ரீதியான பரிந்துரைகளை வழங்க எம்மால் முடியும் என்பதுடன், அதிகளவு உற்பத்தித்திறனான உயிரினங்கள் தொடர்பான நிலைபேறான மீன்பிடி செயற்பாடுகளுக்கும் உதவக்கூடியதாக இருக்கும்.

இலங்கை தீவு எனும் வகையில் அதிகளவில் கடற்றொழிலில் தங்கியுள்ளது – சுறாக்கள் மற்றும் திருக்கை மீன்களில் அதிகளவு புரதச் சத்து காணப்படுகின்றதுடன், தொழில்வாய்ப்பாகவும் கொள்ள முடியும். கடற்றொழிலில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்துக்கு உதவுவது முக்கியமானதாகும், எவ்வாறாயினும் நீண்ட கால நிலைபேறாண்மை தொடர்பில் இந்த இனங்களின் நிலைத்திருப்பு பற்றி கவனம் செலுத்த வேண்டும். ஏதேனும் வகை மீனினம் அழிவடைந்தால், வணிக ரீதியில் இந்த மீன்பிடியில் ஈடுபட்டு அதில் தங்கியிருக்கும் வாழ்வாதாரங்களும் வீழ்ச்சியடையும்.



2017 ஆம் ஆண்டு முதல், ப்ளு ரிசோர்சஸ் ட்ரஸ்ட் (BRT) அமைப்பினால் இலங்கையில் சுறா மற்றும் திருக்கை மீன்கள் தொடர்பான ஆய்வுத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதில் இலங்கையில் காணப்படும் சுறாக்கள் மற்றும் திருக்கை மீன்களின் அடக்கக்கூறுகள், அவற்றின் தரையிறங்கும் பகுதிகள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றின் வீச்சளவு தொடர்பான விடயங்கள் ஆராயப்படுவதுடன், சுறாக்கள் மற்றும் திருக்கைமீன்கள் தொடர்பான உயிரியல் மற்றும் சூழலியல் அறிவை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. மீன்பிடி நிர்வாகத்தின் வினைத்திறனை தீர்மானிப்பது தொடர்பான எதிர்கால குடித்தொகை போக்குகள் தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்கு இந்த தரவுக்கோவை அடிப்படை ஆதாரமாக அமைந்திருக்கும்.

BRT இன் தரவுகளின் பிரகாரம், இலங்கையின் அரைப் பங்கு சுறா மற்றும் திருக்கை மீன் இனங்கள் யாழ் குடா பகுதியில் சஞ்சரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தில், சிறியளவிலான இயந்திர பொறிமுறை பயன்பாடற்ற மீன்பிடிமுறை அமுலிலுள்ளது, இவர்களின் மீன்பிடி நடவடிக்கைகள் பெரும்பாலும் கரையோரப் பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகள் இந்த பால் உளுவை sharpnose guitarfish (Glaucostegus granulatus, an IUCN Red List Critically Endangered species) போன்ற உயிரினங்கள் அதிகளவு காணப்படுகின்றன.

அதனைத் தொடர்ந்து, BRT இனால் டோக்கியோ சீமெந்து குரூப் உடன் இணைந்து இலங்கையின் வட பிராந்தியத்தில் சுறாக்கள் மற்றும் திருக்கை மீன்கள் இனங்காணல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த மீன்பிடி மற்றும் அதனுடன் தொடர்புடைய மீனவ சமுதாயங்களின் புரிந்துணர்வை மேம்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தப்படுகின்றன. இந்த விஞ்ஞான ரீதியான தரவுகளுடன், சுறாக்கள் மற்றும் திருக்கை மீன்களை அளவுக்கதிகமாக பிடிப்பதை தவிர்ப்பது மற்றும் அவற்றின் மீட்சியை உறுதி செய்யும் நிலைபேறான வினைத்திறனான நிர்வாக செயற்பாடுகள் பரிந்துரைக்கப்படும்.



படைப்பாளர்களைப் பற்றி:



டேனியல் பெர்னான்டோ

இலங்கையின் கடல்சார் ஆய்வுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்பான ப்ளு ரிசோர்சஸ் ட்ரஸ்ட் இணை ஸ்தாபகரும் கடல்வாழ் உயிரியில் நிபுணராகவும் டேனியல் திகழ்வதுடன், அடுக்கச் செவுள் மீன்கள் தொடர்பான இலங்கையின் ஆய்வுத் திட்டத்துக்கு இவர் தலைமை தாங்குகின்றார். 2013 ஆம் ஆண்டு முதல் இவர்கள் அடுக்கச் செவுள் மீன்கள் நிர்வாகக் கொள்கை தொடர்பான CITES, CMS மற்றும் Indian Ocean Tuna Commission ஆகிய மாநாடுகளில் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி, விஞ்ஞானம் மற்றும் கொள்கை ஆகியவற்றுக்கிடையே காணப்படும் இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கு பங்களிப்பு வழங்குகின்றார். அத்துடன் நிலைபேறான கடற்றொழில் தொடர்பான மாற்றத்தையும் ஊக்குவிக்கின்றார். அமைச்சின் ஆலோசகராக இவர் கடமையாற்றியுள்ளதுடன், தற்போது இந்து சமுத்திரத்துக்கான IUCN Shark Specialist Group இன் பிராந்திய இணை உப தலைவராகவும், MCAF அங்கத்தவராகவும் மற்றும் CMS Scientific Council இன் பருவ கால குழுவின் உப தலைவராகவும் செயலாற்றுகின்றார்.

கோபிராஜ் ராமஜெயம்

இலங்கையின் அடுக்கச் செவுள் மீன்கள் தொடர்பான செயற்திட்டத்தில் ப்ளு ரிசோர்சஸ் ட்ரஸ்ட் உடன் இணைந்து கோபிராஜ் கடமையாற்றுவதுடன், ஒரு கடல்சார் உயிரியல் நிபுணராகவும் திகழ்கின்றார். 2017 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்து, தற்போது யாழ் குடாநாட்டைச் சூழ்ந்து காணப்படும் அதிகளவு ஆபத்தை எதிர்கொண்டுள்ள பால் உளுவை (Sharpnose guitarfish) மீன் வகைகள் தொடர்பான உயிரியல் கற்கையில் MPhil பட்டப்படிப்பை தொடர்கின்றார்.