
ஜப்பானின் UBE இன்டஸ்ரீஸ் லிமிட்டெட்டின் சீமெந்து மற்றும் நிர்மாண நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் கட்டுப்பாட்டு பிரிவின் பொது முகாமையாளரும் நிறைவேற்று அதிகாரியுமான எம்.ஓனோ இந்த நிலையத்தை திறந்து வைத்ததுடன், டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் தலைவர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால், முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம், குழும பொது முகாமையாளரும் நிறைவேற்று பணிப்பாளருமான கிறிஸ்டோபர் பெர்னான்டோ, இடைக்கால பொது முகாமையாளர் எம். தயானந்தன் மற்றும் ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி பணிப்பாளர் கலாநிதி. எம்.ஜி.எம்.யு. இஸ்மைல் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். டோக்கியோ சீமெந்தின் ஜப்பானிய வியாபார பங்காளரான UBE இன்டஸ்ரீஸ் லிமிட்டெட், இந்த மெருகேற்றத்துக்கு அவசியமான தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்கியிருந்ததுடன், நவீன தொழில்நுட்பங்களையும் எதிர்காலத்துக்கு தயாரான ஆய்வுகூட சேவைகளையும் துறைக்கு வழங்கியிருந்தது.

டோக்கியோ சீமெந்து கம்பனியின் ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி பணிப்பாளர் கலாநிதி. எம்.ஜி.எம்.யு. இஸ்மைல் இந்த ஆய்வுகூடத்தினால் வழங்கப்படும் சேவைகள் பற்றி விபரிக்கையில், ‘நிர்மாண ஆய்வு நிலையத்தினூடாக நவீன நிர்மாண செயற்திட்டங்கள் தொடர்பான பரந்தளவு பரிசோதனை வசதிகள் அனைத்தும் ஒரே கூரையின் கீழ் வழங்கப்படுகின்றன. மிகவும் முக்கியமாக ISO 17025 பரிசோதனை நியமங்களின் பிரகாரம் அமைந்துள்ளன. புதிதாக மேம்படுத்தப்பட்ட ஆய்வுகூட நிலையத்தில் காணப்படும் சாதனங்கள் நவீன மயமானவையாக அமைந்துள்ளதுடன், இவற்றில் Rapid Chloride Penetration Tester மற்றும் Water Penetration Tester போன்றன அடங்கியுள்ளன. இதனூடாக கொங்கிறீற்றின் நீடித்த பாவனையை உறுதி செய்து கொள்ள முடியும். எமது தயாரிப்புகள் மீதான சேவைகள் மாத்திரம் எமது வாடிக்கையாளர்களுக்கு மட்டும் நாம் வழங்காமல், முழு துறைக்கும் துல்லியமான மற்றும் சுயாதீனமான பரிசோதனைகளை எந்தவொரு சீமெந்து மற்றும் கொங்கிறீற் கலவைக்கும் வழங்குகின்றன. தற்போது முதல் இந்த நிலையம் தனது சேவைகளை உள்நாட்டு நிர்மாணத்துறைக்கு வழங்க தயாராகவுள்ளதுடன், இந்த துறை எதிர்கொண்டு வரும் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கவும் முன்வந்துள்ளது’ என்றார்.

கொங்கிறீற் மற்றும் சீமெந்து பரிசோதனை பிரிவில் டோக்கியோ சீமெந்து கம்பனி அதிகளவு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. 2012 இல் தனது நவீன ஆய்வுகூடத்தை தம்புளையில் அமைந்துள்ள ஏ.வை.எஸ். ஞானம் கொன்ஸ்டரக்ஷன் பயிற்சி நிலையத்தில் நிறுவியிருந்தது. தரக்கட்டுப்பாட்டுக்கு தமது அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக இது அமைந்துள்ளது. 2015 இல் ISO 17025 தரப்படுத்தலை பெற்றுக் கொண்ட கொங்கிறீற் மூலப்பொருட்கள் மற்றும் கொங்கிறீற்றின் எந்திரவியல் உள்ளடக்கங்கள் போன்றவற்றை பரிசோதிப்பதற்கான ஒரே ஆய்வுகூடமாக இது அமைந்துள்ளது. நிர்மாணத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சியை தொடர்ந்து, கடந்த ஆண்டு இந்த ஆய்வுகூடத்தை கொழும்பு நகருக்கு இடம்மாற்ற நிறுவனம் தீர்மானித்தது. இதனூடாக வளர்ந்து வரும் பல்-தேசிய வாடிக்கையாளர் கட்டமைப்புக்கு தனது சேவைகள் மற்றும் வசதிகளை பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த விஞ்ஞானிகள் மற்றும் தகைமை வாய்ந்த நிபுணர்களினால் சகல பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படுவதுடன், வினைத்திறன் வாய்ந்த ஆய்வுகூட சேவைகள் வழங்குநராக ஆய்வு நிலையத்தின் கீர்த்தி நாமம் மேலும் உறுதி செய்யப்படுகிறது. தனது செயற்பாடுகளை மேலும் விஸ்தரிப்பதனூடாக அடுத்த தலைமுறை நிர்மாண தயாரிப்புகளில் பணியாற்றக்கூடியதாக இருக்குமென்பதுடன், ஆய்வு நிலையத்தை துறையில் அங்கிகாரம் பெற்ற பரிசோதனை நிலையமாக தரமுயர்த்துவதாக அமைந்திருக்கும்.

நிர்மாண ஆய்வு நிலையம் கொழும்பின் மையப்பகுதியில் பேஸ்லைன் வீதியில் அமைந்துள்ளது. இந்நிலையத்துடன் 0112 445 105 ஊடாக தொடர்பு கொள்ள முடியும். கிடைக்கும் பரிசோதனை வசதிகள் மற்றும் துறைசார்ந்த வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் பற்றிய விபரங்களை இந்த தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும்.