தம்புளை ஏ.வை.எஸ்.ஞானம் நிர்மாண பயிற்சி நிலையத்தின் 10 ஆவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலா ஓயா இராணுவ தொழிற்பயிற்சி நிலையத்தின் கட்டளைத் தளபதி டபிள்யு.எம்.ஜே.ஆர்.கே. சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலா ஓயா இராணுவ தொழிற்பயிற்சி நிலையத்தினூடாக ஏ.வை.எஸ்.ஞானம் நிர்மாண பயிற்சி நிலையத்தில் பயிற்சிகளைப் பூர்த்தி செய்த இராணுவ வீரர்களுக்கு சர்வதேச ரீதியில் மற்றும் உள்நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட NVQ சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பிரதம அதிதி கட்டளைத் தளபதி டபிள்யு.எம்.ஜே.ஆர்.கே. சேனாரத்ன பயிற்சியை பூர்த்தி செய்தவருக்கு NVQ சான்றிதழை வழங்குகின்றார்.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட கட்டளைத் தளபதி டபிள்யு.எம்.ஜே.ஆர்.கே. சேனாரத்னவுடன், இலங்கையின் தேசிய நிர்மாண சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அதுல கலகொட, தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் மாத்தளை மாவட்ட முகாமையாளர் ஜனக ரணராஜா மற்றும் டோக்கியோ சீமெந்து கம்பனி பிரைவட் லிமிடெட்டின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மேசன் பிரிவில் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட NVQ சான்றிதழை பெற்றுக் கொள்வதனூடாக பெற்றுக் கொள்ளக்கூடிய அனுகூலங்கள் பற்றியும், அதனூடாக பெற்றுக் கொள்ளக்கூடிய புதிய வருமானமீட்டக்கூடிய வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைக்கு சேர்க்கக்கூடிய பெறுமதிகள் பற்றியும், ஏ.வை.எஸ்.ஞானம் நிர்மாண பயிற்சி நிலையத்தின் பயிற்சி மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் அனைத்தையும் மேற்பார்வை செய்திருந்த டோக்கியோ சீமெந்து குழுமத்தின் பொறியியல் ஆலோசகர் மௌலி குணரத்ன தெளிவுபடுத்தியிருந்தார்.
அதுல கலகொட பயிற்சியை பூர்த்தி செய்தவருக்கு NVQ சான்றிதழை வழங்குகின்றார்.
பயிற்சி நிலையத்தினால் வழங்கப்படும் பெறுமதி வாய்ந்த சேவையினூடாக, நிர்மாணத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முறையான பயிற்சிகளையும், நிபுணத்துவம் வாய்ந்த சான்றுகளையும் பெற்றுக் கொள்ள முடியும். ஸ்தாபிக்கப்பட்டது முதல் 1000 க்கும் அதிகமானவர்கள் பயிற்சிகளைப் பெற்றுள்ளதுடன், மேசன் பணியில் நிபுணத்துவத்தையும் பெற்றுள்ளனர். டோக்கியோ சீமெந்து குழுமத்தின் பிரதான சமூகப்பொறுப்புணர்வு திட்டமாக கருதப்படுகின்றது. நாட்டின் சகல பாகங்களையும் சேர்ந்த மேசன்மாரின் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஏ.வை.எஸ்.ஞானம் நிர்மாண பயிற்சி நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது.