
டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் ‘Fountain of Life’ குடிநீர் வழங்கும் திட்டம் அனுராதபுர மாவட்டத்தின் வெஹெரகல மற்றும் தச்சிதாமன பகுதிகளை சென்றடைந்துள்ளது.
வெஹெரகல பிரதேசத்தைச் சேர்ந்த 268 குடும்பங்களின் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் மற்றும் தச்சிதாமன பிரதேசத்தைச் சேர்ந்த 48 குடும்பங்களின் 200 க்கும் அதிகமானவர்கள் இந்தத் திட்டத்தினூடாக பயன் பெற்றுள்ளனர். கொடிய சிறுநீரக நோய் பரவல் அதிகளவு காணப்படும் இந்தப் பகுதியில் இவர்கள் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த நிலையில், இந்தத் திட்டத்தினூடாக இவர்களுக்கு தூய குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.