2019

பௌண்டேசன் ஆஃப் குட்னஸ் (FoG) அறக்கட்டளை சமீபத்தில் டோக்கியோ சீமெந்து குழுமத்துடன் நிறுவனத்தின் பவளப்பாதுகாப்பு திட்டத்தை தெற்கு கடற்கரையில் ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.   டோக்கியோ சீமெந்து மற்றும் பௌண்டேசன் ஆஃப் குட்னஸ் (FoG) ஆகியவற்றுக்கு இடையேயான நீண்டகால இணைப்பானது, சீனிகம மற்றும் ஹிக்கடுயிவில் உள்ள உலகப் புகழ்பெற்ற பவளப்பாறைகளைப் பாதுகாப்பதில் தீவிரப் பங்காற்றுவதற்காக, ‘டைவ் லங்கா, டைவ் சீனிகம’ என்ற தொண்டு நிறுவனத்திம் இணைந்து கொண்டது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம், பவளப்பாறைகள் பாதுகாப்பில் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முயற்சியில் இலங்கை கடற்படை, வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை (WRCT) மற்றும் புளூ ரிசோர்சஸ் டிரஸ்ட் (BRT) ஆகியவற்றின் வரிசையில் குட்னஸ் அறக்கட்டளையும் இணைந்துள்ளது.