நீங்கள் உங்களது கட்டுமானத்திட்டத்தினை நிறைவு செய்வதற்கு பொருத்தமான தீர்வுகளை தேடுகின்றீர்களானால் ,டோக்கியொ சீமெந்து குழமம் உங்களது நேரத்தினையும் பணத்தினையும் மீதப்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதுமையான சீமெந்தினை அடிப்படையாகக் கொண்ட பல்வகைப்பட்ட உலர் சீமெந்துக் கலவை தயாரிப்புக்களை வழங்குகின்றது. உள்நாட்டின் தன்மைகளுக்கேற்பவும் நீண்ட கால பயன்பாட்டிற்கு உதவும் வகையிலும் வழங்குவதற்கு நாம் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தினை பயன்டுத்துகின்றோம்.
உலர் சீமெந்துக் கலவை தயாரிப்புக்கள் என்றால் என்ன..?
கட்டுமான தொழிற்துறையில் உலர் சீமெந்துக் கலவை என்பது சீமெந்து மற்றும் மணல் இனை வெவ்வேறு விகிதங்களில் தண்ணீரைக் கலந்து உபயோகிக்கப்படுவதாகும். உலர் சீமெந்துக் கலவையானது மேசன் பணிகள், தரைப்பணிகள், ப்லாஸ்டரிங் மற்றும் சரியான முழுமைக்காக ஈரமான நிலையில் பயன்படுத்தப்படுகின்றது.
தள சீமெந்துக் கலவை போலல்லாது உலர் கலவை என்பது உலர் வடிவத்தில் கலக்கப்பட்ட மூலப்பொருட்களை கொண்டுள்ளதுடன் மேலும் குறிப்பிட்ட கட்டுமானத்திற்கு பொருத்தமான சேர்க்கைகள் மற்றும் பல்பகுதியங்களைக் கொண்டிருக்கும்.
உலர் சீமெந்துக் கலவை பல்வேறு சூழ்நிலைகளில் ஏற்படும் பயன்பாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மிகச்சிறந்த தொழில்நுட்பப் பண்புகளை வழங்குகின்றன. உலர் சீமெந்துக் கலவை உற்பத்திகள் கட்டுமானத்தின் போது எளிமையாக கையாளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் அதனூடாக் கட்டுமானத்தின் போது பொதுவாக ஏற்படும் சிக்கல்கள் குறைவடைவது அதிக செலவு சேமிக்கப்படுகின்றது.
தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தயாரிப்பாக உலர் சீமெந்துக் கலவையானது ப்லாஸ்டரிங் ,மேசன் பணிகள், டைல் பசை,தரை செம்மையாக்கல் மற்றும் திருத்தும் பணிகளுக்காக சீமெந்தினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. உலர் சீமெந்துக் கலவையானது முன் பொதி செய்யப்பட்ட வடிவில் சந்தையில் கிடைக்கின்றது. மேலும் எளிமையான ஓர் கலவையாக மற்றும் எளிதில் கையாளக்கூடிய வகையில் இருப்பதினால் மிகச்சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடிவதுடன் பாரம்பரிய பயன்பாட்டு முறைகளுடன் ஒப்பிடுகையில் அதிகளவான சிக்கனத்தினையும் மதிப்பினையும் வழங்குவதினால் அவை பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புகளாக அழைக்கப்படுகின்றது.
டோக்கியோ சுபர் இன் பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புக்கள் ஓர் வினைத்திறன்மிக்க கட்டட அமைப்பாளரை மனதிற்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் கட்டுமானத்தின் போது ஒவ்வொரு கட்டத்திற்கும் தேவையான மூலங்பொருட்களுக்காக உங்கள் காலத்தினை விரயம் செய்தது ஒரு காலமாகும். ஆனால் தற்போது ‘’கைகளினால் மூலப்பொருட்களை குழைக்கும் ‘’ சீரற்ற தரத்தினைத் தரும் பாரம்பரிய முறைகளிலிருந்து விலகி அதிக நேர சேமிப்புடன் உங்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியும்.
டைல் பசைகள் ,நீர்க் கசிவினை தடுக்கும் கலவை, சுவர் ப்ளாஸ்டர்கள், செம்மைப்படுத்தும் கலவைகள் மற்றும் இலகுரக கொங்கிரீட் தீர்வுகள் உட்பட பல்வேறு தயாரிப்புக்களுடன் டோக்கியோ சுபர் பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புக்கள் உங்களது கட்டுமான அமைப்பு முறைகளை வினைத்திறனுடன் மேற்கொள்ள உதவுவதன் ஊடாக சந்தையில் மாபெரும் புரட்சியினை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்ட பயன்பாடுகள் நிறைந்த எமது ஒவ்வொரு தயாரிப்புக்களையும் நீங்கள் பார்வையிடுவதன் ஊடாக எமது தயாரிப்புக்கள் மூலப்பொருட்களின் விரயத்தினை 30 வீதத்தினால் குறைப்பதனையும் 20 வீதத்தினால் தொழிலாளர் மற்றும் மூலப்பொருட்களுக்கான செலவினை குறைப்பதனையும் கண்டுகொள்ள முடியும்.