Concrete
nations largest network
நீங்கள் ஏன் டோக்கியோ சுபர் மிக்ஸ் தயார் நிலை கொங்கிரீட்டை தெரிவு செய்ய வேண்டும்..?
பல தசாப்தங்களுக்கும் மேலான நிபுணத்துவத்துடன் டோக்கியோ சுபர் மிக்ஸ் நாடளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான கட்டுமானப் பணிகளுக்கு தனது பங்களிப்பினை வழங்கியுள்ளது. இது காலத்தின் தேவைக்கமைய அவர்களது கட்டுமானத்திறன்களை விரிவுபடுத்த உதவியுள்ளதை மறுக்க முடியாது.
டோக்கியோ சுபர் மிக்ஸ் இலங்கையின் முன்னணி கட்டுமானநிறுவனங்கள் மற்றும் கட்டுமான ஆலேசகர்களின் நம்பகமான தேர்வாக இருப்பதில் பெருமிதம் கொள்கின்றது. உள்நாட்டு திட்டங்களுக்கு மட்டுமல்லாது நாட்டின் கட்டுமான வரையறைகளை மாற்றியமைத்த சர்வதேச ஒத்துழைப்புத் திட்டங்களுக்கும் தனது பங்களிப்பினை வழங்கியுள்ளது.
இலங்கையின் பல்வேறு திருப்புமுனைகளை ஏற்படுத்திய கட்டுமானத்திட்டங்களுக்கு பின்னால் சர்வதேச கட்டுமான ஆலோசகர்களினால் பரிந்துரைக்கப்படும் சில தரங்களை பூர்த்தி செய்யும் திறனுடன் நாம் அவர்களுக்கான முதலாவது மற்றம் ஒரேயொரு தீர்வு வழங்குனர்களாக இருந்துள்ளோம்.
டோக்கியோ சுப்பர் மிக்ஸ் இன் தரம், வேலைத்திறன், வலு மற்றும் நீடித்துழைக்கும் தன்மை ஆகிய மூன்று முக்கிய வகைகளின் கீழ் அதன் ஆற்றல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
Our Components
நாட்டின் மிகவும் நம்பிகையான தயார் நிலை கொங்கிரீட்டான டோக்கியோ சுபர் மிக்ஸ் ஆனது இலங்கையின் உயர்தர சீமெந்து தயாரிப்பாளரான டோக்கியோ சீமெந்துக் குழுமத்தினால் தயாரிக்கப்படுகின்றது. இலங்கையிலுள்ள வேறேந்த தயார் நிலை கொங்கிரீட் உற்பத்தியாளரையும் போலல்லாது ஆரம்பம் முதல் இறுதி வரையான ஈடு இணையற்ற ஒருங்கிணைப்பு மற்றும் முழு உற்பத்தி செயல்முறை கட்டுப்பாட்டினையும் கொண்டு அதன் சேவையை வழங்குகின்றது.
நாம் வழங்கும் ஒவ்வொரு கொங்கிரீட் தீர்வும் BS882, BS1881 மற்றும் SLS107 சான்றிதழ் கொண்ட மிக உயர்தரமான மூலப்பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்படுவதுடன் அனைத்து மூலப்பொருட்களும் நம்பிக்கையான வழங்குனர்களிடமிருந்து பெறப்பட்டு தொடர்ச்சியாக பரிசோதனை செய்யப்படுகின்றது.
அனைத்து தயாரிப்புக்களும் அதிநவீன இயந்திரங்களைக் கொண்ட பீ.எல்.சீ கட்டுப்பாட்டு கொங்கிரீட் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இவ்வாறு தயாரிக்கப்படும் கொங்கிரீட்டின் தரம் ஐ.எஸ்.ஓ 9001 சான்றளிக்கப்பட்ட கொங்கிரீட் தயாரி;ப்பு செயல்முறையினை பின்பற்றுவதினால் அதன் தரம் மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றது.
சீமெந்து சந்தையின் சான்றளிக்கப்பட்ட முன்னோடியான நிப்போன் சிமென்ட் ப்ரே இனை மட்டமே பயன்படுத்தும் எங்கள் உறுதிப்பாடே டோக்கியோ சுப்பர் மிக்ஸ் இன் நிலையான தரத்தினை உறுதிப்படுத்துகின்றது.
நிப்போன் சிமென்ட் ப்ரோ என்பது ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிளிங்கரினைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஓர் சிறப்பியல்பு வாய்ந்த சீமெந்தாகும். இது பாரிய கட்டுமானங்கள் உட்பட வானுயரக் கட்டிட கட்டுமானங்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது இலங்கையில் கிடைக்கக்கூடிய அதியுயர் வலுத்தரத்தினைக் கொண்ட டோக்கியோ சுபர் மிக்ஸ் தயார் நிலை கொங்கிரீட்டினை வெற்றிகரமாக தயாரிக்க உதவியது. அதாவது எமது போட்டியாளர்களினால் எட்ட முடியாத தரமான 100 இனை நாம் கொண்டிருக்கும் அதே வேளை எமது போட்டியாளர்களினால் இதுவரை தரம் 70 இனை எட்ட முடியவில்லை.
டோக்கியோ சுபர் மிக்ஸ் ஆற்று மணல் மற்றும் செயற்கை மணலையே பயன்படுத்துகின்றது. இது கொங்கிரீட்டின் தரத்தினை பராமரிக்க உதவுகின்றது. தயாரிக்கப்பட்ட மணல் மற்றும் திரட்டு ஆகியவை கொங்கிரீட் கலவையை மேலும் மேம்படுத்தவதற்காக துகள் அளவுகளை தரப்படுத்த எமக்கு உதவுகின்றன.
டோக்கியோ சுபர் மிக்ஸ் அதன் எந்தவொரு கொங்கிரீட் தீர்வுகளுக்கும் கடல் மணலை பயன்படுத்துவதில்லை என உத்தரவாதம் அளிக்கின்றது. ஏனெனில் கடல் மணல் கொங்கிரீட்டின் தரம் மற்றும் வலிமையில் குறைகளை எற்படுத்த முடியும் என்பதினால் ஆகும்.
எமது நிபுணர்கள் மற்றும் செயல்முறைகள்
எமது வழங்கும் வாக்குறுதியினை உறுதிப்படுத்துவதற்காக வழங்குனர்களின் தொழிற்சாலை மதிப்பீடுகள் முதல் மூலப்பொருட்களின் அதிர்வெண் பரிசோதனைகள் வரையும் இறுதித்தயாரிப்பு முன்மாதிரிகளை பரிசோதித்தல் போன்ற பல வகையான தரக்கட்டப்பாட்டு வழிமுறைகளை பயன்படுத்துகின்றோம். எமது அனைத்து கொங்கிரீட் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அதியுயர் தொழில்நுட்பத்தினைக்கொண்ட கொங்கிரீட் தயாரிப்பு மற்றும் பரிசோதனை ஆய்வு கூடங்களுடன் நாம் தயாரித்து உங்களுக்கு வழங்கும் கொங்கிரீட் இனை இணையற்ற வெளிப்படைத்தன்மையுடன் வழங்குகின்றோம்.
எமது கலவைத்திட்டம் மற்றும் உபகரணங்கள்
எமது முழுமையான தானியங்கி உற்பத்தி செயல்முறை ஓர் அதிநவீன மென்பொருள் வழியாக கண்காணிக்கப்படுகின்றது. இது உத்தரவாதமிக்க நிலைத்தன்மைக்கான சரியான மூலப்பொருள் அளவு சேர்க்கப்படுவதை கண்காணிக்கப்படுகின்றது. மேலும் சேர்க்கப்படும் மூலப்பொருட்களின் அளவை துல்லியமாக கணக்கிடக்கூடிய எடைப்பாலங்களை நாம் கொண்டுள்ளோம்.
கலவை வடிவமைப்பினை பாதிக்கும் மூலப்பொருள் மாசுப்படுவதை தடுக்க சீமெந்து மற்றும் எரி சாம்பல் தனித்தனியாக சேமிக்கப்படுகின்றது. மேலும் வெப்பநிலை கட்டுப்பாட்டு கொங்கிரீட் பொன்ற சிறப்பு கொங்கிரீட் தீர்வுகளுக்காக குளிர் பனி, நுரைப் பணி மற்றும் குளிர்ந்த நீர் சேமிப்பு வசதிகளும் எம்மிடமுள்ளது. பாரியளவிலான கொங்கிரீட் தொகுதி உருவாக்கத்தின் போது தடையற்ற மின் வழங்களை உறுதிசெய்வதற்காக அனைத்து தொழிற்சாலைகளும் காப்பு மின் ஜெனரேட்டர்களைக் கொண்டுள்ளது.
வேகமாக வளர்ந்து வரும் மற்றும் பரந்து விரிந்த சேவை வலைமைப்பே எம்மை இத்துறையில் தனித்துவமான சேவை வழங்குனர்களாக நிலைநிறுத்தியுள்ளது. இது கொங்கிரீட் கலக்கும் லொரிகள் மற்றும் பம்ப் கார்கள் கொண்ட மிகப்பெரிய பன்னூர்தி வலையமைப்பு நாடு முழுவதும் தனது சேவையை வழங்குகின்றது. பம்ப் கார்கள், நிலையான பம்புகள் மற்றும் மொத்தமாக சீமெந்தினை காவிச் செல்லும் லாரிகளை கொண்ட எமது பன்னூர்தி வலையமைப்பானது வெப்பநிலை கட்டுப்பாட்டு கொங்கிரீட்டினை பல்வேறு தளங்களுக்கு கொண்டு செல்ல சிறப்பு காப்பிடப்பட்ட உருளைகளுடன் கூடிய 100 இற்கும் மேற்பட்ட டிரக் மிக்சர்களைக் கொண்டுள்ளது. இலங்கையின் கட்டுமானத்துறைக்கு சரியான நேரத்தில் தனது சேவையை வழங்குவதனை அறிமுகப்படுத்தி வேகமான மற்றும் நம்பிக்கையான சேவையை வழங்கும் எமது வலுவான விநியோக பன்னூர்தி வலையமைப்பு குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம்.
டோக்கியோ சுப்பர் மிக்ஸ் தயார் நிலை கொங்கிரீட் தயாரிக்கும் நாடுமுழுவதிலும் அமைந்துள்ள எமது தொழிற்சாலைகள் அனைத்தும் ஐ.எஸ்.ஓ 9001 சான்றிதழை ஐக்கிய பிரித்தானிய அங்கீகார சேவை அங்கீகாரத்துடன் பிரித்தானியாவில் சான்றளிக்கப்பட்டது.