

பாடசாலை மாணவர்கள், பிரதேசவாசிகள், திருகோணமலை ரொட்டரி கழக (Club – 1598) அங்கத்தவர்கள், முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய படை வீரர்கள், இலங்கை பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம், திருகோணமலை பட்டினமும், சூழலும், மூதூர், கிண்ணியா மற்றும் குச்சவெளி பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகம் போன்ற அரசாங்க நிறுவனங்களின் அதிகாரிகள், இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் மீன்பிடித்திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகளும் இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். பிரதேசத்தில் காணப்படும் இதர நிறுவனங்களான பிரீமா, லங்கா ஐஓசி மற்றும் உள்ளூர் நீச்சல் கழகங்கள் போன்றனவும் இந்த நடவடிக்கையில் இணைந்து தமது பங்களிப்பை வழங்கியிருந்தன.

திருகோணமலை குடாவின் அழகிய கடற்கரைகளின் வனப்பை மீள நிறுவும் நோக்குடன், திருகோணமலையில் காணப்படும் டோக்கியோ சீமெந்து தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை பிரதிநிதிகளுடன் கைகோர்த்து இந்த திட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த நடவடிக்கைகாக ஊடகங்கள் வழங்கியிருந்த பிரச்சாரங்களுக்கு டோக்கியோ சீமெந்து நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன், இந்த செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பெருமளவானோரை ஈர்ப்பதற்கு இந்த பிரச்சார உதவிகள் பயனுள்ளதாக அமைந்திருந்தது.