Filtered Press Release : 2018 Apr


News Image
டோக்கியோ சீமெந்து கருத்தரங்கில் நிர்மாணத்துறை நிபுணர்களுடன் ஜப்பானிய தொழில்நுட்பவியலாளர்கள் அறிவுப் பகிர்வு

டோக்கியோ சீமெந்து நிறுவனம் துறையின் முக்கிய பிரமுகர்களை இணைத்து அறிவுப் பகிர்வு கருத்தரங்கு ஒன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கருத்தரங்குக்கு ‘கொ ங்கிறீற் இடல் தொழில்நுட்பத்தில் காணப்படும் புதிய போக்குகள்’ (‘New Trends in Concreting Technologies’) vd பெயரிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் UBE INDUSTRIES LTD இன் ஜப்பானிய சிறப்பு நிபுணர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு களுத்துறை அனந்தரா ரிசோர்ட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வை டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் புதிய துணை நிறுவனமான

டோக்கியோ சீமெந்து நிறுவனம் துறையின் முக்கிய பிரமுகர்களை இணைத்து அறிவுப் பகிர்வு கருத்தரங்கு ஒன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கருத்தரங்குக்கு ‘கொ ங்கிறீற் இடல் தொழில்நுட்பத்தில் காணப்படும் புதிய போக்குகள்’ (‘New Trends in Concreting Technologies’) vd பெயரிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் UBE INDUSTRIES LTD இன் ஜப்பானிய சிறப்பு நிபுணர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு களுத்துறை அனந்தரா ரிசோர்ட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வை டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் புதிய துணை நிறுவனமான டோக்கியோ சுப்பர்மிக்ஸ் (பிரைவட்) லிமிட்டெட் ஏற்பாடு செய்திருந்தது. டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் ரெடி மிக்ஸ் கொங்கிறீற் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புகள் வியாபாரத்தை முன்னெடுப்பதற்குரிய பிரிவாக இந்த துணை நிறுவனம் அமைந்துள்ளது.



இந்த கருத்தரங்கின் போது, ஜப்பானிய நிர்மாணத்துறையில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தன. மேலும், சீமெந்து சார் பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களை இலங்கையின் நிர்மாணத்துறையில் எந்த வகையில் பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டிருந்தது. அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட தீர்மானமெடுப்போர், பொறியியல் ஆலோசகர்கள் மற்றும் திட்ட முகாமையாளர்கள் போன்றவர்களுக்கான உயர் மட்ட் குழுநிலை சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் ஒன்றும் இந்த நிகழ்வில் உள்ளடங்கியிருந்தது.

ஜப்பானிய சிவில் பொறியியல் நிபுணர்களான கலாநிதி. கெய்சுகி டகாஹாஷி, பொறியியலாளர். டோமொகி இடோ மற்றும் கலாநிதி. ஹிரோகட்சு மொரி ஆகியோர் UBE INDUSTRIES சார்பாக இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன், புதிய சிந்தனைகளை பகிர்ந்த வண்ணம் கருத்தரங்களை முன்னெடுத்திருந்தனர். இதில் உள்நாட்டின் எழுபத்தைந்து பொறியியல் நிபுணர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வுகளில் டோக்கியோ சீமெந்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பணிப்பாளர் கலாநிதி. எம்.ஜி.எம்.யு.இஸ்மைல் மற்றும் டோக்கியோ சுப்பர்மிக்ஸ் பிரைவட் லிமிட்டெட் பொது முகாமையாளர் பொறியியலாளர் ஜானக பெரேரா ஆகியோர் வளவாளர்களாக செயலாற்றியிருந்தனர்.

UBE Industries இன் சிரேஷ்ட ஆய்வாளரான கலாநிதி. கெய்சுகே டகஹாஷி ஆரம்ப அமர்வை ‘உயர் வெப்ப காலநிலையில் கொங்கிறீற் இடல்’ எனும் தலைப்பில் முன்னெடுத்திருந்தார். இது இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. இலங்கை அடங்கலாக தெரிவு செய்யப்பட்ட தெற்காசிய நாடுகளில் இந்த தலைப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஆய்வை முன்னெடுக்கும் ஜப்பானின் சைட்டமா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களில் ஒரு அங்கத்தவராக கலாநிதி. டகாஹாஷி திகழ்கிறார். இந்த ஆய்வில் மொரட்டுவை மற்றும் ருஹுண பல்கலைக்கழகங்களின் சிவில் பொறியியல் திணைக்களங்களும் பிரதிநிதித்துவம் வகிக்கின்றன.



உயர் வலிமையான கொங்கிறீற் எனும் அமர்வை UBE Industries இன் கொங்கிறீற் அபிவிருத்தி குழுமத்தின் குழும முகாமையாளர் பொறியியலாளர் டொமோகி இடோ முன்னெடுத்திருந்தார். இவர் விசேட நிர்மாண மூலப்பொருட்கள் அபிவிருத்தி பிரிவில் நிபுணராக திகழ்கிறார். உயர் வினைத்திறன் வாய்ந்த கொங்கிறீற் தயாரிப்புக்கு விசேடமாக வடிவமைக்கப்பட்ட சீமெந்தை தயாரிப்பதன் முக்கியத்துவம் பற்றி அவர் கலந்துரையாடினார். குறிப்பாக நவீன உயர்ந்த கட்டிடங்கள் நிறுவுகைக்கு அவசியமான நீண்ட கால வலிமை, வலுத்திறன், இரசாயன தாக்கங்களுக்கு எதிராக தாக்குபிடிக்கும் தன்மை மற்றும் நீடித்த உழைப்பு போன்றவற்றை எய்துவது பற்றி குறிப்பிட்டிருந்தார்.

UBE Industries இன் நிர்மாணப் பொருட்கள் அபிவிருத்தி பிரிவின் சிரேஷ்ட ஆய்வாளரான கலாநிதி. ஹிரோகட்சு மோரி தனது அமர்வின் போது ‘சுயமாக மட்டமடையும் சேர்மானங்கள்’ பற்றி விளக்கமளித்திருந்தார். நிர்மாணத்துறையில் வௌ;வேறு பிரயோகங்களின் போது பயன்படுத்தப்படும் சுயமாக மட்டமடையும் தயாரிப்புகள் பற்றி கலந்துரையாடியிருந்தார்.

நாடளாவிய ரீதியில் பரந்தளவு ஆலைகளை கொண்டுள்ள இலங்கையின் மாபெரும் கொங்கிறீற் உற்பத்தியாளரான டோக்கியோ சுப்பர்மிக்ஸ், சிக்கலான செயற்திட்டங்களாக கருதப்படும் Altair மற்றும் தெற்கு மற்றும் வெளிச்சுற்று அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகளை முன்னெடுத்திருந்த ஜப்பானின் டய்செய் கோர்பரேஷனின் கேள்விகளுக்கு பொருத்தமான கலவைகளை முதன் முறையாக தயாரித்து வழங்கியிருந்தது. Avic Astoria, Capital Twin Peaks மற்றும் Square போன்றவற்றில் பயன்படுத்தப்பட்ட NIPPON CEMENT PROஇன் Grade-70 Self Compacting கொங்கிறீற்றை டோக்கியோ சுப்பர்மிக்ஸ் பயன்படுத்துகிறது. Grade-85 உயர் வலிமையான கொங்கிறீற் உற்பத்திக்கான பொதியிடல் உற்பத்தி பிரிவை நிறுவனம் உரிமை கொண்டுள்ளதுடன், இலங்கையில் சினமன் லைஃவ் நிர்மாணத்துக்காக Hyundai Engineering பயன்படுத்திய உயர் வகுப்பு உயர் வலிமை கொங்கிறீற் கலவையாக இது அமைந்துள்ளது.

ஜப்பானுடன் டோக்கியோ சீமெந்து குழுமம் பேணி வரும் நீண்ட கால உறவை மேலும் வலிமைப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது. தேசத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் முக்கிய பங்கை வகிக்கும் பங்காளர் எனும் வகையில், தனது வெளிநாட்டு பங்காண்மைகளினூடான தொழில்நுட்ப நிபுணத்துவ அறிவை உள்நாட்டில் பெற்றுக் கொடுப்பதற்கு டோக்கியோ சீமெந்து குழுமம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும்.


காப்பகம்

2023JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2022JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2021JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2020JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2019JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2018JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2017JanFebMarAprMayJunJulAugSepOctNovDec