சமீபத்திய செய்தி வெளியீடுகள்

News Image
BUILD BEYOND 2026 தொழில்நுட்ப மாநாட்டில், எதிர்காலத்திற்குத் தயாரான கட்டுமானத்துறைக்கான உத்வேகத்தை டோக்கியோ சீமெந்து வழங்குகிறது

டோக்கியோ சீமெந்து நிறுவனம் Build Beyond 2026 மாநாட்டை முன்னெடுத்திருந்தது. முன்னணிப் பேராசிரியர்கள், சிவில் மற்றும் கட்டமைப்பு பொறியியல் வல்லுநர்கள் மற்றும் இலங்கையின் கட்டுமானத்துறை சார்ந்த தொழில்முறை நிபுணர்களை ஒன்றிணைத்த ஒரு முதன்மையான அறிவுப் பகிர்வு மாநாடாக இது அமைந்திருந்தது. இந்நிகழ்வில், IIT டெல்லி – அபுதாபி வளாகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கட்டுமானத் தொழில்நுட்ப நிபுணர் பேராசிரியர் சஷாங்க் பிஷ்னோய் மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பிரியான் மெண்டிஸ் ஆகியோரின் முதன்மை உரைகள் இடம்பெற்றிருந்தன. இந்தமாடு,

டோக்கியோ சீமெந்து நிறுவனம் Build Beyond 2026 மாநாட்டை முன்னெடுத்திருந்தது. முன்னணிப் பேராசிரியர்கள், சிவில் மற்றும் கட்டமைப்பு பொறியியல் வல்லுநர்கள் மற்றும் இலங்கையின் கட்டுமானத்துறை சார்ந்த தொழில்முறை நிபுணர்களை ஒன்றிணைத்த ஒரு முதன்மையான அறிவுப் பகிர்வு மாநாடாக இது அமைந்திருந்தது. இந்நிகழ்வில், IIT டெல்லி – அபுதாபி வளாகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கட்டுமானத் தொழில்நுட்ப நிபுணர் பேராசிரியர் சஷாங்க் பிஷ்னோய் மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பிரியான் மெண்டிஸ் ஆகியோரின் முதன்மை உரைகள் இடம்பெற்றிருந்தன.

இந்தமாடு, டோக்கியோ சீமெந்து குழுமத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட Build Beyond பொறியியல் தொழில்நுட்ப உச்சிமாநாட்டின் இரண்டாவது பதிப்பாகும். இது கல்வித்துறையினருக்கும் தொழில்துறையினருக்கும் இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதற்காகவும், சீமெந்து மற்றும் கொங்கிரீட் துறையிலான உலகளாவிய போக்குகள், கண்டுபிடிப்புகள் மற்றும் வளர்ந்து வரும் அதிநவீன தொழில்நுட்பங்களை வெளிப்படுத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் கலந்துரையாடல்கள், மிகவும் நிலைபேறான மற்றும் செலவு குறைந்த கட்டுமான நடைமுறைகளை நோக்கி வழிநடத்தும் பொருள் அறிவியல் ரீதியிலான முன்னேற்றங்களை மையமாகக் கொண்டிருந்தன.



மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பிரியான் மெண்டிஸ் Build Beyond 2026 மாநாட்டில் உரையாற்றுகிறார்.

இவ்விழா, அரச துறை அதிகாரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வித்துறையினர், பொறியியல் மாணவர்கள் மற்றும் பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பங்கேற்பை ஈர்த்திருந்ததுடன், கட்டுமானத்துறை முழுவதும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான ஒரு விறுவிறுப்பான தளத்தையும் உருவாக்கியிருந்தது. இந்தமாநாட்டின் ஒரு முக்கிய அம்சமாக, பல புகழ்பெற்ற தொழில்துறை தலைவர்கள் பங்கேற்ற “ஒரு நெகிழ்ச்சியான மற்றும் நிலைபேறான கட்டுமான எதிர்காலத்தை கட்டியெழுப்புதல்” என்ற தலைப்பிலான உயர்மட்டக் குழு விவாதம் அடங்கியிருந்தது.



Build Beyond 2026 மாநாட்டில் குழுநிலை கலந்துரையாடலில், பொறியியலாளர் ஆனந்த செனரத், பொறியியலாளர். நிசங்க விஜேரத்ன, பொறியியலாளர். ஷிரோமல் பெர்னான்டோ மற்றும் கலாநிதி. ரொஹான் கருணாரட்ன ஆகியோர் பங்கேற்றுள்ளதுடன், நிகழ்வை பேராசிரியர் குஷான் விஜேசுந்தர நெறிப்படுத்தியிருந்தார்.

இக்குழு விவாதத்தில், இலங்கை கட்டுமானத் துறை சம்மேளனத்தின் பொதுச் செயலாளரும்/பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் சிவில் மற்றும் கட்டமைப்பு பொறியியல் ஆலோசகர்கள் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும், பிரதித் தலைவருமான பொறியியலாளர் நிஸங்க விஜேரத்ன; CTBUH ஸ்ரீ லங்காவின் தலைவரும், இலங்கை பசுமைக் கட்டிடப் சம்மேளனத்தின் உப தலைவரும், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கௌரவ சிரேஷ்ட விரிவுரையாளரும், மொரட்டுவப் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ வெளிவாரி விரிவுரையாளருமான பொறியியலாளர் ஷிரோமல் பெர்னாண்டோ; இலங்கை கட்டமைப்புப் பொறியியலாளர்கள் சங்கத்தின் (SSE-SL) உறுப்பினரும் முன்னாள் தலைவரும், இலங்கை ஆலோசனைக் பொறியியலாளர்கள் சங்கத்தின் சம்மேளன உறுப்பினருமான பொறியியலாளர் ஆனந்த சேனாரத்; மற்றும் இலங்கை கட்டடக் கலைஞர் நிறுவனத்தின் (CIOB) தலைவரும், தெற்காசிய லீன் கட்டுமானச் சங்கத்தின் தலைவருமான கலாநிதி ரொஹான் கருணாரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த அமர்வை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட சிவில் பொறியியல் துறையின் தலைவர் பேராசிரியர் குஷான் விஜேசுந்தர நெறிப்படுத்தியிருந்தார்.



Build Beyond 2026 மாநாட்டில் பங்கேற்றிருந்த கல்வித்துறை, தொழிற்துறை நிபுணர்கள் மற்றும் இலங்கையின் சிவில் மற்றும் கட்டமைப்பு பொறியியல் துறைகளின் நிபுணர்களை காணலாம்

IIT டெல்லி – அபுதாபி வளாகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கட்டுமானத் தொழில்நுட்ப நிபுணர் பேராசிரியர் சஷாங்க் பிஷ்னோய் குறைந்த காபன் நிர்மாண தொழில்னுட்பங்கள் தொடர்பில் இரு பிரதான விளக்கவுரைகளை ஆற்றியிருந்தார். முதல் உரை, “குறைந்த கார்பன் சீமெந்துகளின் மேம்பாடும் பயன்பாடும்’ என்ற தலைப்பிலான அவரது முதல் உரை, சுண்ணாம்புக்கல் பதப்படுத்தப்பட்ட களிமண் சீமெந்து (Limestone Calcined Clay Cement – LC3) தொழில்நுட்பத்திலான அவரது கண்டுபிடிப்புகள் மற்றும் இந்திய தர நிர்ணய பணியகத்தினால் (Bureau of Indian Standards) ஏற்றுக்கொள்ளப்பட்ட LC3 தரநிலையின் உருவாக்கம் ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்தது. இரண்டாவது விளக்கவுரை, “குறைந்த கார்பன் கொங்கிரீட்டுகளின் வடிவமைப்பு மற்றும் பயன்பாடு” (Design and Application of Low Carbon Concretes) என்ற தலைப்பில், இலங்கையின் கட்டுமானத் துறை சார்ந்த நிலைபேறான கொங்கிரீட் தீர்வுகள் குறித்து விரிவாக ஆராய்ந்தது.

மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பிரியான் மெண்டிஸ், “நிகர பூஜ்ஜியம்: மூலப்பொருட்கள் முதல் புதிய கட்டமைப்புப் பயன்பாடுகள் வரை” (Net Zero: Materials to Novel Structural Applications) என்ற தலைப்பில் தனது முதன்மை உரையை நிகழ்த்தினார். நவீன வானளாவிய கட்டிடங்கள் மற்றும் பெருமளவிலான உட்கட்டமைப்புகளில் ஆயுட்காலம், வலிமை மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தங்களுக்கு எதிரான பின்னடைவுத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் அதியுயர் செயல்திறன் கொண்ட கொங்கிரீட்டின் முக்கியத்துவத்தை அவர் விளக்கமளித்தார். கொங்கிரீட் கட்டமைப்புகள் மற்றும் கட்டமைப்பு சுமைகள் தொடர்பான பல அவுஸ்திரேலிய மற்றும் சர்வதேச தர நிர்ணயக் குழுக்களில் பணியாற்றிய தனது அனுபவம் மற்றும் சர்வதேச ரீதியிலான உண்மைநிலை ஆய்வுகளின் அடிப்படையில், புர்ஜ் கலீஃபா, மெர்டேகா 118, யுரேகா டவர் மற்றும் தாமரை கோபுரம் உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற அடையாளக் திட்டங்களின் கட்டுமானப் பணிகளில் தனக்கிருந்த பங்களிப்புகள் குறித்த முக்கிய நுண்ணறிவுகளைப் பேராசிரியர் மெண்டிஸ் பகிர்ந்து கொண்டார்.





டோக்கியோ சீமெந்து குழுமத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, R&D பணிப்பாளர் கலாநிதி. எம்.ஜி.எம்.யு. இஸ்மைல், புத்தாக்கங்கள் பிரிவின் பணிப்பாளர் பிரவீன் ஞானம் ஆகியோர் சீமெந்து மற்றும் கொங்கிரீட் தொழில்னுட்பங்கள் பற்றிய நிறுவனத்தின் பிந்திய முன்னேற்றங்கள் பற்றிய விளக்கங்களை பகிர்ந்து, நிலைபேறான மற்றும் புத்தாக்கமான நிர்மாணத் தீர்வுகளில் தமது கவனத்தை மீள உறுதி செய்திருந்தனர்.

உலகத்தரம் வாய்ந்த அறிவுப் பகிர்வு முயற்சிகள் மற்றும் சர்வதேச நிபுணத்துவத்திற்கான வாய்ப்புகள் ஆகியவற்றின் ஊடாக, உள்நாட்டுக் கட்டுமானத் துறையை வலுப்படுத்துவதற்கான டோக்கியோ சீமெந்து குழுமத்தின் அர்ப்பணிப்பை இந்தமாநாடு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சீமெந்து, கொங்கிரீட் மற்றும் சீமெந்து அடிப்படையிலான புதுமையான தயாரிப்புகளின் இலங்கையின் மிகப்பெரிய உற்பத்தியாளர் என்ற வகையில், டோக்கியோ சீமெந்து குழுமம் தரம், புத்தாக்கம் மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றில் தனது மாறாத கவனத்தைச் செலுத்தி, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு முதன்மைப் பங்காளராகத் தன் நிலையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. –

படங்கள்:

Build Beyond 2026 மாநாட்டில் IIT டெல்லி – அபுதாபி வளாகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கட்டுமானத் தொழில்நுட்ப நிபுணர் பேராசிரியர் சஷாங்க் பிஷ்னோய் பிரதான உரையை ஆற்றுகிறார்.

News Image
டோக்கியோ சீமெந்து உலக சூழல் தினத்தை முன்னிட்டு பசுமையான இலங்கைக்காக 100,000 கண்டல் தாவரங்களை பயிரிட்டுள்ளது

டோக்கியோ சீமெந்து கண்டல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் அங்கமாக, இலங்கையின் கரையோரப் பகுதிகளில் 100,000 கண்டல் தாவரக் கன்றுகளை பயிரிட்டு முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை பூர்த்தி செய்துள்ளது. உலக சூழல் தினத்தை முன்னிட்டு இந்த அர்த்தமுள்ள பங்களிப்பை டோக்கியோ சீமெந்து மேற்கொண்டிருந்தது. டோக்கியோ சீமெந்து, இலங்கை கடற்படை, மீன்பிடி சமூகங்கள் மற்றும் பாதுகாப்பு குழுக்கள் ஆகியவற்றுக்கிடையே நீண்ட காலமாக பேணப்படும் ஒன்றிணைந்த செயற்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இந்த சாதனை அமைந்திருந்தது. 2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட டோக்கியோ சீமெந்து

டோக்கியோ சீமெந்து கண்டல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் அங்கமாக, இலங்கையின் கரையோரப் பகுதிகளில் 100,000 கண்டல் தாவரக் கன்றுகளை பயிரிட்டு முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை பூர்த்தி செய்துள்ளது. உலக சூழல் தினத்தை முன்னிட்டு இந்த அர்த்தமுள்ள பங்களிப்பை டோக்கியோ சீமெந்து மேற்கொண்டிருந்தது. டோக்கியோ சீமெந்து, இலங்கை கடற்படை, மீன்பிடி சமூகங்கள் மற்றும் பாதுகாப்பு குழுக்கள் ஆகியவற்றுக்கிடையே நீண்ட காலமாக பேணப்படும் ஒன்றிணைந்த செயற்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இந்த சாதனை அமைந்திருந்தது.

2012 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட டோக்கியோ சீமெந்து கண்டல் தாவர மீளநிறுவல் செயற்திட்டம், திருகோணமலை, சீன குடா பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் தொழிற்சாலை வளாகத்தில் கண்டல் தாவரக் கன்றுகள் வளர்ப்பகமொன்றை நிறுவியிருந்தது. இந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்ட எதிர்பார்ப்பு, யுத்தம் காரணமாக அகற்றப்பட்ட சேர்ந்த கரையோரப் பகுதிகளில் கண்டல் தாவர வனாந்தரப் பகுதிகளை மீள நிறுவுவதாக அமைந்திருந்தது. பாதுகாப்பு நிபுணர்களின் வழிகாட்டல்களில், டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து தொழிற்சாலையை அண்மித்த 20 ஏக்கர் பகுதியில் 17000 க்கும் அதிகமான தாவரக் கன்றுகள் பயிரிடப்பட்டதுடன், இதில் தொழிற்சாலை ஊழியர்கள், கடற்படையினர் மற்றும் பிரதேசத்தின் மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் காணப்படும் கண்டல் தாவர கன்றுகள் வளர்ப்பகத்தில் ஒரே நேரத்தில் 10,000 கன்றுகளை பேண முடியும்.

காலப் போக்கில் இந்தத் திட்டம் படிப்படியாக வியாபித்து, இலங்கையின் வடகிழக்கு கரையோரத்தில் நிலைத்திருக்கும் பங்களிப்பை வழங்கியிருந்தது. இந்த கன்றுகள் வளர்ப்பகத்தினால் எட்டு விதமான இனங்களில் சுமார் 7500 க்கும் அதிகமான கன்றுகள் வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் பிரதான பங்காளராக கடற்படை இணைந்துள்ளதுடன், கிழக்கு, வடக்கு மற்றும் வட கிழக்கு கரையோரப் பகுதிகளில் மீள் செய்கை செயற்பாடுகளுக்கு முக்கிய உதவிகளை வழங்குகின்றது.

கடற்தொழில், சுற்றுலா மற்றும் உயிரியல் பரம்பல் போன்ற கரையோர வாழ்வாதாரங்களுக்கு கண்டல் தாவர சூழல்கட்டமைப்பு முக்கிய பங்காற்றுகிறது. கரையோரப் பகுதிகளை மண் அரிப்பு, வெள்ளப் பெருக்கு மற்றும் புயல் தாக்கங்கள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது. எவ்வாறாயினும், அபிவிருத்தி அழுத்தங்கள் மற்றும் சட்ட விரோத குடியேற்றங்கள் போன்றவற்றினால் இந்த சூழல்கட்டமைப்புகள் பெருமளவு இடர்களுக்கு முகங்கொடுத்துள்ளன. இதனால் இலங்கை போன்ற நாடுகளுக்கு அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது முக்கியமான சூழல்சார் முன்னுரிமையாக அமைந்துள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பில் டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நிலைபேறாண்மை செயற்பாடுகளுக்கான கூட்டாண்மை முகாமையாளர் சலிந்த கந்தபொல கருத்துத் தெரிவிக்கையில், “மீள செய்கை செயற்பாடுகளில், இந்த சூழல்கட்டமைப்பை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது முக்கியமானதாகும். 100,000க்கும் அதிகமான கண்டல் தாவரங்களை பயிரிட்டுள்ளமையானது, இலங்கையின் கரையோரப் பகுதி, உயிரியல் பரம்பல் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தல் போன்றவற்றை பாதுகாப்பதற்கான மேற்கொள்ளப்பட்டுள்ள பெருவாரியான பங்களிப்பாக அமைந்துள்ளது.” என்றார்.





வட குடாநாட்டுப் பகுதியில் கண்டல் தாவர மீள நிறுவும் முயற்சிகளில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர்.

நன்னீர் மற்றும் கடல் நீர் ஆகியன கலக்கும் பகுதிகளில் வாழும் விசேடத்துவம் வாய்ந்த சூழல்கட்டமைப்புகளாக கண்டல் தாவரங்கள் அமைந்துள்ளன. அவற்றின் பரந்து விரிந்த வேர்க் கட்டமைப்புகள், வண்டல் படிவுகளைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலமும் அலைகளின் தாக்கத்தைக் குறைப்பதன் மூலமும் கடற்கரைப் பகுதிகளை நிலைப்படுத்துகின்றன. அதேவேளை, இவை பரந்த அளவிலான தாவர மற்றும் விலங்கினங்களுக்குப் பாதுகாப்பான வாழிடங்களையும் உருவாக்குகின்றன.

சுனாமி, கடற்கரை அரிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கண்டல் தாவரங்களின் அரண் போன்ற பாதுகாப்புப் பெறுமதி நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் செழிப்பாகக் காணப்படும் கண்டல் தாவர வளையங்கள், மனித சமூகங்களுக்கும் உட்கட்டமைப்புகளுக்கும் ஏற்படும் சேதங்களைக் குறைக்கப் பெரிதும் உதவியுள்ளன. அத்துடன், இக்கண்டல் காடுகள் இயற்கையான காற்றுத் தடுப்பான்களாகச் செயல்படுவதுடன், உள்ளூர் சுற்றுச்சூழல் நிலைமைகளைச் சீராகப் பேணுவதற்கும் பங்களிக்கின்றன.

இச் சூழல்கட்டமைப்புகள் பல மீன் இனங்களின் முக்கியமான இனப்பெருக்க மற்றும் குஞ்சுவளர்ப்புத் தளங்களாகச் செயல்படுகின்றன. அவற்றின் அடர்ந்த வேர்ப் பின்னல்கள், வேட்டையாடும் பிற உயிரினங்களிடமிருந்து பாதுகாப்பை வழங்குவதுடன், செறிவான ஊட்டச்சத்து மூலமாகவும் விளங்குகின்றன. கண்டல் காடுகள் நூற்றுக்கணக்கான வலசைபோகும் பறவையினங்கள், ஊர்வன, இருவாழ்விகள், பாலூட்டிகள், தேனீக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் போன்ற உயிரினங்கள் கூடு கட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கும் முதன்மையான தளங்களாக விளங்குவதுடன், பல்லுயிர்ப் பெருக்கத்தின் மிக முக்கியமான களஞ்சியங்களாகவும் திகழ்கின்றன.

கண்டல் தாவர மறுவளர்ப்புத் திட்டம், டோக்கியோ சீமெந்து நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் ஒன்றாகும். இந்நிறுவனம் இலங்கை கடற்படை மற்றும் கடல்சார் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து பவளப்பாறை மறுசீரமைப்புத் திட்டங்களுக்கும் ஆதரவளித்து வருவதுடன், இலங்கையின் கடற்கரைச் சூழல்கட்டமைப்புகளின் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பிற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றது. சமூகப் பொறுப்புணர்விற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பானது இத்தகைய உன்னத முயற்சிகள் மூலமாகவே உயிர் பெறுகின்றது. இதன் ஊடாக, நாட்டை, அதன் மக்களை மற்றும் சூழலை வளப்படுத்துவதற்கான தங்களது தொடர்ச்சியான இலக்கின் ஒரு பகுதியாக, சமூக நலனையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் அவர்கள் தங்களின் நிறுவன விழுமியங்களுடன் வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளனர்.

News Image
டோக்கியோ சீமெந்து குழுமத்தினால் நியுசிலாந்து ரக்பியுடன் இணைந்து 2026 ஆம் ஆண்டின் ‘Ivuru Rakina Pawuru’ ஆரம்பம்

டோக்கியோ சீமெந்து குழுமம், மஹாவலி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து, Ivuru Rakina Pawuru திட்டத்தின் 2026 ஆம் ஆண்டின் மர நடுகைத் திட்டத்தை கண்டி பொல்கொல்ல வாவியின் அருகில் ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த 85 கிலோகிராம்களுக்கு உட்பட்ட நியுசிலாந்து ரக்பி அணியின் அங்கத்தவர்களும் இந்தத் திட்டத்தில் பங்கேற்றிருந்தனர். மகாவலி ஆற்றின் கரையோரப் பகுதிகளை பாதுகாத்து மீள நிறுவுவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்த இந்தத் திட்டம், அதன் பெறுமதிக்காக சர்வதேச சென்றடைவை பெற்றுள்ளதையும் அவதானிக்க

டோக்கியோ சீமெந்து குழுமம், மஹாவலி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து, Ivuru Rakina Pawuru திட்டத்தின் 2026 ஆம் ஆண்டின் மர நடுகைத் திட்டத்தை கண்டி பொல்கொல்ல வாவியின் அருகில் ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த 85 கிலோகிராம்களுக்கு உட்பட்ட நியுசிலாந்து ரக்பி அணியின் அங்கத்தவர்களும் இந்தத் திட்டத்தில் பங்கேற்றிருந்தனர். மகாவலி ஆற்றின் கரையோரப் பகுதிகளை பாதுகாத்து மீள நிறுவுவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்த இந்தத் திட்டம், அதன் பெறுமதிக்காக சர்வதேச சென்றடைவை பெற்றுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, மத்திய சூழல் அதிகாரசபை, இலங்கை ரக்பி சம்மேளனத்தின் உயரதிகாரிகள், கண்டி, பொல்கொல்ல மாதிரி பாடசாலையின் மாணவர்கள் மற்றும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அவர்களுடன் நியுசிலாந்து 85 கிலோகிராம்களுக்கு உட்பட்ட ரக்பி அணி வீரர்களும் பங்கேற்று, 100 கும்புக் மரக் கன்றுகளை நாட்டியிருந்தனர்.

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் Ivuru Rakina Pawuru நிகழ்ச்சித் திட்டம், 2017 ஆம் ஆண்டு முதல் சுற்றாடல் அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. மருத மரம் மற்றும் இலுப்பை போன்ற தாவரக் கன்றுகளை மகாவலி கரையோரப் பகுதிகளில் நிறுவி, மீள்வனாந்தரச் செய்கையை மேற்கொள்வதில் பங்களிப்பு வழங்கி, முக்கியமான நீரேந்து பகுதிகளின் நிலைபேறான முகாமைத்துவத்தை பேணுவதில் ஆதரவளிக்கப்படுகிறது.





டோக்கியோ சீமெந்து குழுமம் தனது வனாந்தர மர வளர்ப்பு செயற்பாடுகளுக்கு அனுசரணை வழங்கும் வகையில் Ivuru Rakina Pawuru திட்டம் அமைந்துள்ளது. மருத மரம், கிரஞ்ச, இலுப்பை மற்றும் தெட்ட மரம் போன்ற மருத்துவ பெறுமதிகளைக் கொண்ட காட்டு மரங்களை விநியோகிப்பதில் திருகோணமலை மற்றும் மஹியங்கனை போன்ற பகுதிகளில் அமைந்துள்ள டோக்கியோ சீமெந்து வனாந்தர மரக் கன்றுகள் வளர்ப்பகங்கள் ஈடுபட்டுள்ளன. இயற்கை உயிரியல் பரம்பலை மீள நிறுவுவதில் இந்த தாவர வகைகள் உதவுவதுடன், ஆற்றங்கரையோரப் பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதிலும் பங்களிப்பு வழங்கும். அவை பல்வேறு சமூக மற்றும் அரச ஸ்தாபனங்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படுவதுடன், மகாவலி வலயங்கள் அடங்கலாக, நாடளாவிய ரீதியில் மீள் வனாந்தரச் செய்கை செயற்பாடுகளுக்காக அவை பயன்படுத்தப்படுகின்றன.





நிறுவனத்தின் பரந்தளவு நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரலின் அங்கமாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது. அதனூடாக, சமூக நலன்பேணல் மற்றும் சூழல் பாதுகாப்பு செயற்பாடுகளை தனது கூட்டாண்மை செயற்பாடுகளில் வெற்றிகரமாக சேர்த்துள்ளது. தேசத்தை, மக்களை மற்றும் சூழலை வளப்படுத்தும் தமது தொடர்ச்சியான செயற்பாடுகள், இது போன்ற தொலைநோக்குச் செயற்பாடுகளினூடாக வலுவூட்டப்பட்டுள்ளதுடன், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னணி பங்காளராக டோக்கியோ சீமெந்து குழுமம் தம்மை நிலைநிறுத்தியுள்ளது.

News Image
டோக்கியோ சீமெந்து தனது 2026 விற்பனையாளர் மாநாட்டில் சிறப்பாக செயலாற்றியவர்களுக்கு மகுடம் சூட்டியது

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி, தனது வருடாந்த விற்பனையாளர் மாநாட்டில் சிறப்பாக செயலாற்றியிருந்தவர்களுக்கு மகுடம் சூட்டியது. இந்த நிகழ்வு அண்மையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்றது. இதில், சிறந்த விற்பனையாளர் 2026 எனும் உயர் விருதை யாழ்ப்பாணம் சிற்றி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ் பெற்றுக் கொண்டது. இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை கிளிநொச்சி சண்முகம் ஸ்ரோர்ஸ் மற்றும் குருநாகல் நஷனல் டிரேடிங் ஸ்ரோர்ஸ் ஆகியன பெற்றுக் கொண்டன. மொத்தமாக 135 சிறந்த விற்பனையாளர்களுக்கு இந்த நிகழ்வில் விருதுகள்

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சி, தனது வருடாந்த விற்பனையாளர் மாநாட்டில் சிறப்பாக செயலாற்றியிருந்தவர்களுக்கு மகுடம் சூட்டியது. இந்த நிகழ்வு அண்மையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்றது. இதில், சிறந்த விற்பனையாளர் 2026 எனும் உயர் விருதை யாழ்ப்பாணம் சிற்றி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ் பெற்றுக் கொண்டது. இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை கிளிநொச்சி சண்முகம் ஸ்ரோர்ஸ் மற்றும் குருநாகல் நஷனல் டிரேடிங் ஸ்ரோர்ஸ் ஆகியன பெற்றுக் கொண்டன. மொத்தமாக 135 சிறந்த விற்பனையாளர்களுக்கு இந்த நிகழ்வில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

டோக்கியோ சீமெந்து குரூப் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. ஹர்ஷ கப்ரால் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். குழுமத்தின் முகாமைத்துவ குழு மற்றும் விற்பனைகள் மற்றும் சந்தைப்படுத்தல் அணிகளின் பிரதிநிதிகள் என பலரும் இணைந்து கொண்டனர். டோக்கியோ சீமெந்து விநியோக நாளிகையின் சகல அங்கத்தவர்களையும் இந்நிகழ்வு ஒன்றிணைத்திருந்ததுடன், சகலருக்கும் நினைவில் நிலைத்திருக்கும் ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது. இந்த மாபெரும் கொண்டாட்ட நிகழ்வில் களிப்பூட்டும் நிகழ்வுகள் அடங்கியிருந்ததுடன், டோக்கியோ சீமெந்து விற்பனை வலையமைப்பின் சிறந்த சாதனைகளை கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது.

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ கப்ரால் நிகழ்வில் உரையாற்றுகையில், நிறுவனத்திற்கும் அதன் நாளிகை பங்காளர்களுக்குமிடையே காணப்படும் உறவின் வலிமையை பாராட்டியிருந்தார். நம்பிக்கை மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இது கட்டியெழுப்பப்பட்டதுடன், சவால்களை ஒப்பற்ற நம்பிக்கையுடன் கடந்து வந்திருந்தமையையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம் நாடு முழுவதையும் சேர்ந்த சகல விற்பனையாளர்களுக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்திருந்ததுடன், அண்மைக் காலங்களில் நிலவிய வியாபார தடங்களுக்கு மத்தியிலும், தொழிற்துறையின் தலைமைத்துவத்தை டோக்கியோ சீமெந்து நிறுவனத்துக்கு தக்க வைத்துக் கொள்ள ஏதுவாக அமைந்திருந்ததை குறிப்பிட்டார். நிறுவனத்தின் விற்பனை பங்காளர் வலையமைப்புடன் தொடர்ந்தும் இணைந்திருப்பதற்கான டோக்கியோ சீமெந்தின் உறுதியான அர்ப்பணிப்பை அவர் மீள உறுதி செய்திருந்ததுடன், அவர்களுக்கு வெற்றிகரமாக உதவுவதற்கும் உறுதியளித்திருந்தார். டோக்கியோ சீமெந்து மற்றும் அதன் விற்பனையாளர்களுக்கிடையே நீண்ட காலமாக நிலைத்திருக்கும் பங்காண்மையை பாராட்டியதுடன், பகிரப்பட்ட வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான கட்டமைப்பை ஏற்படுத்தும் வகையில் நிறுவனம் செயலாற்றுவதாகவும் குறிப்பிட்டார்.





சிறந்த விற்பனையாளர் 2026 – யாழ்ப்பாணம் சிற்றி ஹார்ட்வெயார் அன்ட் ஸ்ரோர்ஸ் சார்பாக வழங்கப்பட்ட விருதை டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. ஹர்ஷ கப்ரால் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம் ஆகியோரிடமிருந்து பெற்றுக் கொள்வதை காணலாம்.



இரண்டாமிடம் – டோக்கியோ சீமெந்து விற்பனையாளர் மாநாடு 2026 – கிளிநொச்சி, சண்முகம் ஸ்ரோர்ஸ்



மூன்றாமிடம் – டோக்கியோ சீமெந்து விற்பனையாளர் மாநாடு 2026 – குருநாகல், நஷனல் டிரேடிங் ஸ்ரோர்ஸ்


தனது பெறுமதி வாய்ந்த விற்பனை விநியோக வலையமைப்பின் சாதனைகளை கொண்டாடும் வருடாந்த நிகழ்வாக விற்பனையாளர் மாநாடு அமைந்துள்ளது. உள்நாட்டில் கட்டியெழுப்பப்பட்ட வியாபாரம் எனும் வகையில், தேசிய பொருளாதாரத்துக்கு தனது பெறுமதி சங்கிலியினூடாக வலுவூட்ட டோக்கியோ சீமெந்து குழுமம் எதிர்பார்ப்பதுடன், அதில் நிறுவனத்தின் விற்பனையாளர்கள் முக்கியமான பங்களிப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஒன்றிணைந்து குழுமம், பெருமைக்குரிய மற்றும் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமங்களான NIPPON CEMENT, TOKYO SUPER, NIPPON CEMENT PRO மற்றும் ATLAS CEMENT ஆகியவற்றை கட்டியெழுப்பியுள்ளது. அதன் முன்னணி தயாரிப்பான TOKYO SUPER Cement அண்மையில், பெருமைக்குரிய SUPERBRANDS அந்தஸ்த்தை பெற்றுக் கொண்டு, தரம், புத்தாக்கம் மற்றும் வினைத்திறன் சிறப்பு ஆகியவற்றுக்கான தனது சிறந்த அர்ப்பணிப்பிற்கு கௌரவிப்பை பெற்றுக் கொண்டது. TOKYO SUPERMIX ரெடி-மிக்ஸ்ட் கொங்கிறீட் வலையமைப்பு நிறுவனத்தின் செயற்பாடுகளின் முக்கியன செயலாற்றும் கட்டமைப்பாக அமைந்துள்ளதுடன், புத்தாக்கமான உலர் மோடார் தயாரிப்புகளான TOKYO SUPERBOND, TOKYO SUPERSEAL மற்றும் TOKYO SUPERCAST போன்றனவும் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. இவை தத்தமது பிரிவுகளில் சந்தை முன்னோடிகளாக அமைந்துள்ளன.

இலங்கையின் வளர்ச்சியை தீர்மானிக்கும் செயற்திட்டங்களுக்கு உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகளை வழங்கி, தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளின் முன்னணி பங்காளர் எனும் தனது நிலையை உறுதியாக பேணியுள்ளது. தரத்தை தொடர்ச்சியாக கட்டியெழுப்புவதில் நிறுவனம் தொடர்ந்தும் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், தொழிற்துறையின் புத்தாக்கமான புரட்சியாளராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.



படங்கள்: டோக்கியோ விற்பனையாளர் மாநாடு 2026 இல் உயர் விருது வெற்றவர்கள் – தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி. ஹர்ஷ கப்ரால், முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம் மற்றும் குழும சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் தசந்த உடவத்த ஆகியோர் காணப்படுகின்றனர்.

News Image
டோக்கியோ சுப்பர் இலங்கையில் SUPERBRANDS அந்தஸ்த்தைப் பெற்ற ஒரே சீமெந்து வர்த்தக நாமம்

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முன்னணி வர்த்தக நாமமான டோக்கியோ சுப்பர் சீமெந்து, தரம், புத்தாக்கம் மற்றும் வினைத்திறன் சிறப்பு போன்வற்றுக்கான சிறந்த அர்ப்பணிப்புக்காக 2025 ஆம் ஆண்டுக்கான பெருமைக்குரிய SUPERBRANDS அந்தஸ்த்தை பெற்றுள்ளது. சந்தையில் காணப்படும் மிகவும் பெறுமதி வாய்ந்த மற்றும் வலிமையான வர்த்தக நாமங்களின் சிறந்த வர்த்தக நாம கதைகளைக் கொண்டாடும் வகையில், அண்மையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் வைபவத்தின் போது, இந்த கௌரவிப்பு டோக்கியோ சுப்பருக்கு வழங்கப்பட்டிருந்தது. உயர்தரத் தரநிலைகள் மற்றும் செயல்திறனை அடிப்படையாகக்

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முன்னணி வர்த்தக நாமமான டோக்கியோ சுப்பர் சீமெந்து, தரம், புத்தாக்கம் மற்றும் வினைத்திறன் சிறப்பு போன்வற்றுக்கான சிறந்த அர்ப்பணிப்புக்காக 2025 ஆம் ஆண்டுக்கான பெருமைக்குரிய SUPERBRANDS அந்தஸ்த்தை பெற்றுள்ளது. சந்தையில் காணப்படும் மிகவும் பெறுமதி வாய்ந்த மற்றும் வலிமையான வர்த்தக நாமங்களின் சிறந்த வர்த்தக நாம கதைகளைக் கொண்டாடும் வகையில், அண்மையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் வைபவத்தின் போது, இந்த கௌரவிப்பு டோக்கியோ சுப்பருக்கு வழங்கப்பட்டிருந்தது.

உயர்தரத் தரநிலைகள் மற்றும் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ள டோக்கியோ சுப்பர், கட்டுமானத் துறையில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிகவும் பிரபலமான சீமெந்து வர்த்தகநாமமான டோக்கியோ சுப்பர் OPC மற்றும் சந்தையிலுள்ள மிகவும் சூழல்நேயம் மிக்க சீமெந்து வர்த்தகநாமமான டோக்கியோ சுப்பர் BHC ஆகிய பெயர்களில் இது நுகர்வோரை சென்றடைகிறது. 2025 ஆம் ஆண்டின் SUPERBRANDS 2025 எனும் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்ற ஒரே சீமெந்து வர்த்தகநாமம் டோக்கியோ சுப்பர் ஆகும். மேலும், Waterproofers தயாரிப்புகள், Wall plasters தயாரிப்புகள், Mortars தயாரிப்புகள் மற்றும் சந்தையில் முன்னணியிலுள்ள Tile adhesives கள் உள்ளிட்ட நவீன கட்டுமான தீர்வுகளையும் டோக்கியோ சுப்பர் வழங்கி வருகின்றது.

நாட்டின் நன்மதிப்பைப் பெற்ற வர்த்தகநாமங்களில் ஒன்றாகத் திகழும் டோக்கியோ சுப்பர், இலங்கையின் முன்னேற்றத்துடன் நெருங்கிய தொடர்புடைய டோக்கியோ சீமெந்து குழுமத்தினால் சந்தைப்படுத்தப்படுகிறது. கடந்த 44 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் கட்டுமானத் துறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி வரும் இக்குழுமம் பெற்றுள்ள பல கௌரவமான விருதுகளின் வரிசையில், SUPERBRANDS அங்கீகாரம் சமீபத்திய இணைப்பாகும். இலங்கையில் பொதுப் பட்டியலிடப்பட்ட ஒரே சீமெந்து உற்பத்தியாளரான டோக்கியோ சீமெந்து குழுமம், சீமெந்து, ரெடி-மிக்ஸ் கொன்கிறீட் மற்றும் சீமெந்து அடிப்படையிலான உலர் கலவை தயாரிப்புகளில் சந்தை முன்னணியில் உள்ளது. நாட்டின் அடையாளச் சின்னங்களாகத் திகழும் பாரிய கட்டுமானங்கள் மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு உயர்தர சீமெந்து மற்றும் கொன்கிறீட்டை விநியோகிப்பதன் மூலம், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு நம்பகமான பங்காளியாக டோக்கியோ சீமெந்து குழுமம் தனது சந்தை ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

லண்டனை அடிப்படையாகக் கொண்ட Superbrands Worldwide இன் உள்நாட்டு பிரதிநிதியாக SUPERBRANDS Sri Lanka திகழ்கிறது. 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் மாபெரும் சுயாதீன வர்த்தகநாமங்களின் அங்கீகாரத்தை தீர்மானிக்கும் உயர்மட்ட அமைப்பாக திகழ்கிறது. வர்த்தகநாமமிடல், விளம்பரம், சந்தைப்படுத்தல், வடிவமைப்பு, தயாரிப்பு மேலாண்மை, மக்கள் தொடர்பு மற்றும் வணிக மேலாண்மை ஆகிய துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களைக் கொண்ட ஒரு சுயாதீனக் குழுவினால் ‘சூப்பர் பிராண்ட்ஸ்’ தெரிவு செய்யப்படுகின்றது. இந்தத் தரவரிசையில் மிக உயர்ந்த மதிப்பீட்டைப் பெறும் வர்த்தகநாமங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ‘SUPERBRANDS’ அந்தஸ்து வழங்கப்படுவதுடன், இந்தத் திட்டத்தில் இணைந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது. இது ஒரு வர்த்தகநாமத்தின் மதிப்பையும் கௌரவத்தையும் அதிகரிப்பதோடு, ஏனைய போட்டியாளர்களிடமிருந்து அதனைத் தனித்துவப்படுத்திக் காட்டுகின்றது.

Photo: (இடமிருந்து) பிராங்க் கேப்ரியல் – பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்), LMD, ஷரிபுல் இஸ்லாம் – தவிசாளர், Superbrands ஸ்ரீ லங்கா, டி.எஸ்.(பில்லி) வல்பொல – பணிப்பாளர் சந்தைப்படுத்தல், டோக்கியோ சீமெந்து குழுமம், நிபுன பெரேரா – சந்தைப்படுத்தல் முகாமையாளர் கூட்டாண்மை மற்றும் பெறுமதி சேர் தயாரிப்புகள், டோக்கியோ சீமெந்து குழுமம், பிரையன் இம்மானுவேல் – முகாமைத்துவ பணிப்பாளர், LMD

News Image
டோக்கியோ சீமெந்து குழுமம் முன்னெடுத்திருந்த சமூகப் பொறுப்புணர்வு செயற்பாட்டுக்காக SLIM வர்த்தக நாமச் சிறப்பு 2025 விருதுகள் வழங்கலில் கௌரவிப்பைப் பெற்றது

சமூக முன்னேற்றம் மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றுக்காக டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நீண்ட கால அர்ப்பணிப்புக்காக அண்மையில் நடைபெற்ற SLIM வர்த்தக நாமச் சிறப்பு 2025 விருதுகள் வழங்கலில் ஆண்டின் சிறந்த சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான மெரிட் விருதை சுவீகரித்தது. இந்த கௌரவிப்பினூடாக, அர்த்தமுள்ள, அளவிடக்கூடிய சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளினூடாக தேசிய மாற்றத்தை முன்னெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன குழுமத்தின் சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் செயற்பாடுகள் கௌரவிப்பைப் பெற்றது. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட சூழல்

சமூக முன்னேற்றம் மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றுக்காக டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நீண்ட கால அர்ப்பணிப்புக்காக அண்மையில் நடைபெற்ற SLIM வர்த்தக நாமச் சிறப்பு 2025 விருதுகள் வழங்கலில் ஆண்டின் சிறந்த சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான மெரிட் விருதை சுவீகரித்தது. இந்த கௌரவிப்பினூடாக, அர்த்தமுள்ள, அளவிடக்கூடிய சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளினூடாக தேசிய மாற்றத்தை முன்னெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன குழுமத்தின் சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் செயற்பாடுகள் கௌரவிப்பைப் பெற்றது.

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட சூழல் செயற்பாடுகளில் கௌரவிப்பைப் பெற்றுக் கொண்ட நடவடிக்கைகளில் கண்டல் தாவர வளர்ப்பு, வனாந்தர தாவர கன்றுகள் வளர்ப்புப் பகுதி, பவளப் பாறைகள் மறுசீரமைப்பு, கடல் உயிரியல் பல்வகைமை பேணும் திட்டங்கள் மற்றும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அதன் புதுப்பிக்கத்தக்க வலுப் பிறப்பாக்கல் திட்டம் ஆகியன அடங்கியிருந்தன. டோக்கியோ சீமெந்து பல தசாப்த கால கைகோர்த்த செயற்பாடு மற்றும் நிபுணத்துவ செயற்திட்ட ஈடுபாடு போன்றவற்றினூடாக, இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒவ்வொரு பகுதிகளிலும் டோக்கியோ சீமெந்து குறிப்பிடத்தக்களவு மைல்கற்களை எய்தியுள்ளது.

தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் வகையில், தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு வலுவூட்டி, அவர்களின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி இயங்கச் செய்யக்கூடிய பல சமூகச் சென்றடைவு செயற்திட்டங்களை டோக்கியோ சீமெந்து முன்னெடுக்கிறது. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக, தம்புளை மற்றும் திருகோணமலையில் அமைந்துள்ள ஏ.வை.எஸ். ஞானம் கிராமிய இருதயத்துடிப்பு வலுவூட்டல் நிலையங்கள், டோக்கியோ சீமெந்து Fountain of Life தூய்மைப்படுத்தப்பட்ட குடிநீர் செயற்திட்டங்கள் மற்றும் மிக முக்கியமாக எதிர்கால பாடசாலை உணவு வேளை செயற்திட்டத்துக்கு ஆதரவு வழங்கியமை போன்றன அடங்கியுள்ளன.

SLIM வர்த்தக நாம சிறப்புகளில், ஆண்டின் சிறந்த சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்திற்கான மெரிட் விருதை வென்றுள்ளதனூடாக, டோக்கியோ சீமெந்து குழுமம் நாடு மற்றும் அதன் மக்கள் மற்றும் சூழல் ஆகியவற்றை வளமூட்டுவதில் கவனம் செலுத்தும் உறுதியான முயற்சிகளின் ஆழம் மற்றும் வினைத்திறன் ஆகியன வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சகல டோக்கியோ சீமெந்து பங்குதாரர்களின் வர்த்தக நாம லோயல்டிக்கான சிறந்த எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது. எதிர்கால தலைமுறைகளுக்கு வலுவூட்டல், சூழல்கட்டமைப்புகளை ஆறச் செய்தல் மற்றும் சமூகளை மேம்படுத்தல் ஆகியவற்றுக்கு சமூகத்தை வழிநடத்திச் செல்வதற்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இலங்கையின் முன்னணி சீமெந்து, கொங்கிறீட் மற்றும் சீமெந்து சார் பெறுமதி சேர் தயாரிப்புகள் உற்பத்தியாளருக்கு கிடைத்துள்ள பிந்திய விருதாக இது அமைந்துள்ளது. அதனூடாக, சமூக நலன் மற்றும் சூழல் வழிநடத்தல் ஆகியவற்றில் டோக்கியோ சீமெந்து காண்பிக்கும் அர்ப்பணிப்பை அதன் நிறுவனசார் செயற்பாடுகளில் உள்வாங்கி, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் முன்னோடியான பங்காளர் எனும் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் பங்களிப்புச் செய்கிறது.


காப்பகம்

2026JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2025JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2024JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2023JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2022JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2021JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2020JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2019JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2018JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2017JanFebMarAprMayJunJulAugSepOctNovDec