Filtered Press Release : 2017 Jul


News Image
டோக்கியோ சீமெந்து கம்பனியில் தனது முதலீட்டை மேலும் அதிகாரித்துள்ள ஜப்பான் Ube இன்டஸ்ரீஸ்

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ். ஆர். ஞானம், டோக்கியோ சீமெந்து நிறுவனத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக Ube சிங்கப்பூர் ஹோல்டிங்ஸ் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தை வரவேற்றிருந்தார். Ube சிங்கப்பூர் ஹோல்டிங்ஸ் நிறுவனம் அண்மையில் டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் பங்குகளில் 10 சதவீதத்தை கொள்வனவு செய்திருந்தது. இதன் மூலம் பொதுப்பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வரிசையில் முதல் 20 பங்காளர்கள் வரிசைக்கு உயர்த்தியிருந்தது. இலங்கைச் சந்தையில் டோக்கியோ சீமெந்து கொண்டுள்ள மூலோபாயத்தில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாக

டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ். ஆர். ஞானம், டோக்கியோ சீமெந்து நிறுவனத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக Ube சிங்கப்பூர் ஹோல்டிங்ஸ் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தை வரவேற்றிருந்தார். Ube சிங்கப்பூர் ஹோல்டிங்ஸ் நிறுவனம் அண்மையில் டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் பங்குகளில் 10 சதவீதத்தை கொள்வனவு செய்திருந்தது. இதன் மூலம் பொதுப்பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் வரிசையில் முதல் 20 பங்காளர்கள் வரிசைக்கு உயர்த்தியிருந்தது. இலங்கைச் சந்தையில் டோக்கியோ சீமெந்து கொண்டுள்ள மூலோபாயத்தில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாக இந்த முதலீடு அமைந்துள்ளது என ஞானம் குறிப்பிட்டார். இலங்கையின் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்களில் ஒன்றாக டோக்கியோ சீமெந்து காணப்படுவதுடன், சீமெந்து மற்றும் கொங்கிறீற் ஆகியவற்றின் மாபெரும் உற்பத்தியாளராகவும் விநியோகஸ்த்தராகவும் திகழ்கிறது. இதன் மொத்தத்திறன் 2.8 மில்லியன் டொன்களாக அமைந்துள்ளது.

Ube சிங்கப்பூர் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான Ube இன்டஸ்ரீஸ் லிமிட்டெட், ஜப்பானுக்கு ஞானம் தனது நன்றிகளை தெரிவித்தார். டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் தொழில்நுட்ப சேவைகள் பங்காளராக இந்நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த முதலீட்டு தீர்மானத்தை மேற்கொள்வதில் இது முக்கிய பங்காற்றியிருந்தது. சீமெந்து மற்றும் சீமெந்து உற்பத்தியுடன் தொடர்புடைய இயந்திரங்கள் உற்பத்தியில் ஈடுபடும் முன்னணி நிறுவனமாக Ube இன்டஸ்ரீஸ் லிமிட்டெட் திகழ்கிறது. மேலும், இரசாயனப்பொருட்கள், பிளாஸ்ரிக், பற்றரி மூலப்பொருட்கள் மற்றும் மருந்துப்பொருட்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளது. இரு நிறுவனங்களுக்குமிடையில் தற்போது அமுலிலுள்ள தொழில்நுட்ப சேவைகள் உடன்படிக்கையின் ஊடாக, சீமெந்து உற்பத்தி தொடர்பில் புத்தாக்கமான பொருட்கள் அறிவை பகிர்ந்து கொள்ள முடிவதுடன், தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது. இந்த முதலீட்டின் ஊடாக, அதன் சிங்கப்பூரைச் சேர்ந்த துணை நிறுவனம், டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் உற்பத்திச் சிறப்பையும், உயர் தயாரிப்பையும் மேம்படுத்த உதவியாக அமைந்திருக்கும்.

ஒவ்வொரு வருடமும் டோக்கியோ சீமெந்து பெருமளவு தொழில்நுட்ப ஊழியர்களை, ருடிந இன்டஸ்ரீஸ் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியலாளர்களிடம் அனுப்பி பயிற்சிகளை பெற்றுக்கொடுப்பதாக ஞானம் குறிப்பிட்டார். மேலும், டோக்கியோ சீமெந்து நிறுவனம் உயர் தரம் வாய்ந்த கிளிங்கரை Ube இன்டஸ்ரீஸ், ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்கிறது. இது NIPPON CEMENT-PRO உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையில் காணப்படும் உயர் வினைத்திறன் வாய்ந்த சீமெந்தாக அமைந்துள்ளதுடன், உயர்ந்த கட்டடங்கள் மற்றும் உறுதியான கட்டடங்கள் நிர்மாணத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.

தற்போது நிறுவனம் முன்னெடுத்துள்ள மாபெரும் விஸ்தரிப்பு செயற்பாடுகள் தொடர்பில் அவர் குறிப்பிட்டதுடன், இதன் ஒரு அங்கமாக உயர் தொழில்நுட்பம் வாய்ந்த சீமெந்து ஆலை திருகோணமலையில் இயங்க ஆரம்பித்துள்ளது. அதன் உற்பத்தித்திறனில் இரட்டிப்பு மடங்கை கொண்டுள்ளது. இது பங்காளர்களின் நம்பிக்கையை மேம்படுத்த உதவியாக அமைந்துள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தியிருந்த பல்வேறு நிறுவனங்களில் ஒன்றாக Ube சிங்கப்பூர் ஹோல்டிங்ஸ் அமைந்துள்ளது. ஜப்பானிய நிறுவனத்தின் இந்த பங்களிப்புடன், இலங்கைச் சந்தையில் டோக்கியோ சீமெந்தின் தலைமைத்துவம் மேலும் வலுப்பெற்றுள்ளதாக ஞானம் சுட்டிக்காட்டியிருந்தார்.


காப்பகம்

2023JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2022JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2021JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2020JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2019JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2018JanFebMarAprMayJunJulAugSepOctNovDec
2017JanFebMarAprMayJunJulAugSepOctNovDec